குளிர்காலத்திலும் உங்க தலைமுடி பிசுபிசுன்னு இருக்கா?
ஒவ்வொரு நாளும் முடியை அழகாகவும், எண்ணெய் பசையின்றியும் வைத்திருப்பது மிகவும் கடினமான பணியாகும். குறிப்பாக குளிர்காலங்களில் தலைமுடியை அலசுவது என்பது ஒரு கடினமான வேலையாகும். குளிர்காலங்களில் தலைமுடியை அலசுவதற்கு மிகவும் சோம்பலாக இருக்கும். இதனால் தலைமுடி பிசுபிசுப்பாக மாறும்.
சில நேரங்களில் தொடர்ந்து தலைமுடியை அலசினால் பிசுபிசுப்பு போகாமல் அப்படியே இருக்கும். இந்த வகை தலைமுடி பாதிப்பிற்கு ஹார்மோன் ஏற்றத்தாழ்வு, காலநிலை மாற்றம், அதிகரித்த எண்ணெய் சுரப்பு போன்ற பல காரணங்கள் உள்ளன. இக்கட்டுரையில் இதற்கான காரணங்கள் மற்றும் அவற்றுக்கு சிகிச்சையளிக்க சில உதவிக்குறிப்புகள் மற்றும் தந்திரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
காரணம்
குளிர்காலத்தில் உச்சந்தலையில் ஏற்கனவே மிகவும் அதிகமாக எண்ணெய் இருக்கும். நாம் ஷாம்பு தேய்த்து தலையை அலசாமல் இருந்தால், அதிகப்படியான எண்ணெய் தலைமுடியில் சேர்கிறது. அதுமட்டுமின்றி எண்ணெய் பசையுடனான முடி அழுக்கு, தூசி மற்றும் பூச்சிகளை ஈர்க்கிறது.
காரணம்
குளிர்காலத்தில் வளிமண்டலத்தில் விசித்திரமான ஈரப்பதம் இருப்பதால், நமது தலைமுடி சற்று ஈரமாகவும், எண்ணெய்த் தன்மையுடனும் இருக்கும்.
காரணம்
அதிக வறுத்த உணவை சாப்பிடுவதால் கூட முடியில் எண்ணெய்த்தன்மை ஏற்படலாம். ஏனெனில் நீங்கள் அதிக எண்ணெய் சாப்பிட்டால், அந்த எண்ணெய் உங்கள் சருமத் துளைகள் மற்றும் உச்சந்தலையில் வழியத் தொடங்குகிறது.
காரணம்
உங்களுக்கு அதிகமாக வியர்த்தால் உங்கள் தலைமுடி எண்ணெய் பிசுபிசுப்புடன் இருக்கும். இதற்காக, உடற்பயிற்சி, ஒட்டப்பயிற்சி அல்லது யோகா செய்த பிறகு உங்கள் தலைமுடியை அலச வேண்டும்.

No comments: