கண்களில் திடீர் என்று ஏற்படும் எரிச்சல் அரிப்பு குணமாக என்ன செய்யலாம்...
கண்களில் திடீர் என்று ஏற்படும் எரிச்சல் அரிப்புக்கு இவ்வாறு செய்தால் குணமடையும். ஆனால் நாள்பட்ட அரிப்பிற்கு மருத்துவரை நாடவேண்டும். நமது கண்கள் தூசி, நுண்கிருமிகள் இருந்தால் கண்களில் அரிப்பு ஏற்படும். இதை எவ்வாறு சரி செய்வது என்பதை பார்ப்போம்.
முதலில் நாம் எதையாவது தூசி மற்றும் அழுக்குகளை சுத்தம் செய்துவிட்டு கைகளை கண்களில் வைக்க கூடாது. அப்படி வைப்பதால் அந்த கிருமி தூசு கண்களில் போய் அரிப்பு ஏற்படும். கண்களை தொடுவதரற்கு முன் கைகளை நன்கு சோப்பு போட்டு கழுவவேண்டும்.
வெள்ளரிகாயை நறுக்கி கண்களில் வைக்கலாம். இதில் குளிர்ச்சித்தன்மை உள்ளதால் கண் அரிப்பு எரிச்சல் குறையும். ரோஸ்வாட்டரை தண்ணீருடன் கலந்து கண் இமைகளின் மேல் ஒத்தடம் குடுக்கலாம்.
குளிர்ந்த பாலுடன் துணியை நனைத்து இமைகளின் மேல் ஒத்தடம் கொடுக்கலாம். இதனால்உடலில் உள்ள சூடு தணிந்து எரிச்சல், அரிப்பு நீங்கும்.


No comments: