உடல் எடை குறைக்கும் முருங்கை சூப் பொடி.
இன்று நம்மில் பலர் சந்திக்கும் சிக்கல்கள் அதிகப்படியான உடல் எடை, உடல் சோர்வு, மலச்சிக்கல் போன்ற உபாதைகள்தான்.
இதற்கான தீர்வை தேடியும் அலைகிறோம்.
உடல் எடை நமது ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும் என்பது உண்மைதான்.
'சூப்" அருந்துவது தான் அந்த வழி.
பிரெஞ்சு நாட்டில் தான் முதன்முதலில் சூப் தயாரித்து உண்ணும் வழக்கம் தோன்றியது. காலப்போக்கில் அது உலகம் முழுவதும் மக்கள் அறிந்த ஒரு உண்ணும் முறையாகி போனது. தினசரி இருவேளை நமக்கு பிடித்த சூப் ஒன்றை எடுத்துக்கொள்வது நமது அனைத்து உடல் சிக்கல்களுக்கும் தீர்வைத்தரும். குறிப்பாக உடல் எடை குறைய சிறந்த வழி இதுதான்.
தினமும் ஒரு வகை சூப் தயாரிக்க நமக்கு நேரத்தை இந்த வாழ்க்கை முறை தரவில்லையே என்று யோசிப்பதும் சரிதான். எல்லா சிக்கல்களுக்கும் இவ்வுலகில் தீர்வுண்டு என்ற கோட்பாட்டின் அடிப்படையில் இதற்கும் ஒரு விடை இருக்கிறது. 'முருங்கை இலை சூப்" உடல் எடை குறைவதற்கு மட்டுமல்லாமல் உடலில் என்ன உபாதைகள் இருந்தாலும் அதை சமன் செய்து ஆரோக்கியத்தை தரும் சிறந்த மூலிகை நம்ம ஊரு முருங்கை.
அதிலும் நாட்டு முருங்கை இலையை பொடியாக்கி சூப் செய்வதற்கு ஏதுவாக பொடியாக்கி வைத்துக்கொண்டால் தினமும் ஒரு ஸ்பூன் சுடுநீரில் போட்டு குடித்தால் போதும். நமது ஆரோக்கியதிற்கு வேறு எதுவும் தேவையில்லை.

No comments: