உலகத்திலே அதிவேகமாக இலக்கை தாக்கி அழிக்கும் சக்தி கொண்ட ஹைபர்சோனிக் ஏவுகணையை உருவாக்கிய ரஷ்யா....
இந்த அவங்கார்ட் ஹைப்பர்சோனிக் ஏவுகணை மணிக்கு 7,000 மைல்கள் தாண்டும்.
உலகில் எந்த நாடும் இந்தப் புதிய ஏவுகணையை அழிக்க முடியாது.
அதிநவீன தொழில்நுட்பம் மூலம் இந்த ஹைப்பர்சோனிக் ஏவுகணை தயாரிக்கப்பட்டுள்ளது. மற்ற ஏவுகணைகளால் இதை எளிதில் கண்டுபிடிக்க முடியாது என்றும், ஒலியை விட 20 மடங்கு வேகமாக பயணிக்கும் திறன் கொண்டது என்றும் கூறப்படுகிறது. ஹைப்பர்சோனிக் ஆயுதங்களில் தனித்துவமான முன்னேற்றம் கண்டுள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.
ரஷ்யாவின் இந்த ஹைப்பர் சோனிக் ஏவுகணை 2 ஆயிரம் டிகிரி செல்சியஸ் வரை வெப்பத்தை தாங்குமாம். உலகின் முதல் அதிநவீன ஆயுதமான இந்த ஏவுகணையின் சோதனை வெற்றிகரமாக முடிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு இந்த ஏவுகணை ராணுவ சேவையில் இணையும்.


No comments: