Breaking

குரங்கிலிருந்து பரிணமித்த மனிதனின் அடுத்த பரிணாம மாற்றம் எப்படி இருக்கலாம்?

                                                                     


குரங்கிலிருந்து பரிணமித்த மனிதனின் அடுத்த பரிணாம மாற்றம் எப்படி இருக்கலாம்?








மனிதனின் பரிணாம வளர்ச்சியானது 15 மில்லியன் வருடங்களுக்கு முன்பிருந்தே தொடங்கிவிட்டது. அதற்கான நிருபணங்கள் நம்மிடம் உள்ளது. இதையே டார்வின் (Darwin) னும் வலியுறுத்தியுள்ளார். இந்த மனித பரிணாம வளர்ச்சியானது மேலும் 2 இலட்சம் ஆண்டுகளுக்கு தொடரும் என்பது வல்லுனர்களின் கூற்று. இதனடிப்படையில் பார்த்தால் நாம் பரிணாம வளர்ச்சியின் இடைநிலையில் இருக்கிறோம். பின்வரும் நிகழ்வுகளின் மூலமாக மனித சமுதாயமானது தனது அடுத்த கட்ட பரிணாம வளர்ச்சியை அடையும்.

 1. ஒற்றை தனித்த இனம் (mono-ethinicity):

 மாறிவரும் கலாச்சார மாற்றங்களால் மனித இனமானது ஒரே ஒரு இனமாக மாறும். இப்பொழுது இல்லையெனினும் கால மாற்றத்தில் இது கண்டிப்பாக நடக்கும். எனக்கு தெரிந்து இந்த கலாச்சாரம் ஆசிய பிராந்தியத்தை தவிர அனைத்து பிராந்தியதிலும் சாதாரணம். எவ்வாறு எனில் ஐரோப்பிய மக்கள் அமெரிக்க மக்களை மணந்து கொள்வதும், ஆப்பிரிக்க மக்கள் மற்ற பிராந்திய மக்களை மணந்து கொள்வதும் சாதாரணம். எனவே எளிதாக இனக்கலப்பு ஏற்பட்டுவிடுகிறது. எனவே எதிர்காலத்தில் ஒற்றை தனித்த இனம் வருவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.

 2. பலவீனமான நோயெதிர்ப்பு அமைப்பு (Weakened Immune System):

 தற்போது நாம் பயன்படுத்தி வரும் அலோபதி மருத்துவத்தில் நமது உடல் உபாதையானது தற்காலிகமாக குணமாகி விடுகிறது. ஆனால் மறைமுக பாதிப்புகள் சிறிது ஏற்படுகிறது. இந்த பாதிப்பானது நமது உடலமைப்பில் மாற்றங்களை ஏற்படுத்திக்கொண்டே இருக்கிறது. இதனால் தான் நமது மருத்துவர் தேவை ஏற்பட்டால் ஒழிய நோய் எதிர்ப்பு மருந்தை (antibiotic, immunization medicine) பரிந்துரைப்பது இல்லை. நமது ஊர் மருந்து கடைகளில் நோய் எதிர்ப்பு மருந்துகளை மருத்துவரின் பரிந்துரை இல்லாமலே வாங்கலாம் என்பது இங்கு வேதனையான செய்தி. இவ்வகையான நோய் எதிர்ப்பு மருந்தானது நமது உடலில் இயற்கையாக சுரக்கும் சுரப்பிகளை அழித்து புதியதாக வேறு வித நோய் எதிர்ப்பு கட்டமைப்பை உருவாக்கி விடுகிறது. எனவே புதிய வகையான பாக்ட்ரியா (bacteria) தோன்றி புது வகையான நோய்கள் உருவாக காரணமாக அமைகிறது.

 3. தசைச் சிதைவு (Muscle Atrophy):

 இவ்வகையான மாற்றமானது தற்பொழுது அதிகமாக இல்லையெனினும் எதிர்காலத்தில் ஏற்படும் என உறுதியாக கூறுகின்றனர். மாறிவரும் உணவு பழக்க வழக்கங்கள், மனிதர்கள் தங்களது வேலைகளுக்கு செலவிடும் ஆற்றல் போன்றவற்றை அளவீடாக கொண்டு இதை கூறுகின்றனர்.

 4. உயர்ந்த மனிதன் (Increased Height) :

 கடந்த 150 வருடங்களில் பெரும்பான்மையான உயிரினங்கள் 10 cm அளவு வளர்ச்சி அடைந்துள்ளதாக விஞ்ஞானிகள் நிரூபித்து உள்ளனர்.
 எதிர்காலத்தில் மனிதன் தனது நோய் எதிர்பிற்காகவும், ஆற்றல்களுக்காக அதிகமான உணவினை உண்டு அவனின் உயரத்தை அதிகரிப்பான்.

 5. முடி உதிர்வு (Loss of Hair) :

 இதனை அதிகம் விளக்க வேண்டிய தேவை இருக்காது என்றே கருதுகிறேன். ஏனெனில் நம்மில் பெரும்பாலோர் சந்திக்கும் பிரச்சினை இது. ஆண், பெண் அனைவரும் இம்மாற்றத்தை எதிர்கொள்வர்.

 6. மூளையின் செயல்பாட்டை மாற்றியமைத்தல் (Brain Rewiring):

 நமது தொழில்நுட்ப வளர்ச்சியின் மூலம் நமது மூளையின் சிந்திக்கும் திறன், ஞாபக சக்தியை அதிகரித்தல் போன்ற மாற்றங்கள் எதிர்காலத்தில் நடைபெறும்.

 7. சிறிய பற்கள் மற்றும் கால் விரல்களின் மறைவு (Small Teeth & Less Toes) :

மனித உடலில் அதிக தேவை இல்லாத உறுப்புக்கள் நாளைடைவில் நமது உடலில் இருந்து மறைந்து விடும். குரங்கிலிருந்து மனிதன் உருவான போது நாம் வாலை விட்டு வந்தோமே அதுபோல. அப்பொழுது நாம் இயற்கையாக சந்திக்கும் அறிவுப்பல் (wisdom teeth) போன்ற பிரச்சினைகள் இருக்காது.1 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மனிதர்களின் பற்களின் அளவை விட தற்பொழுது நமக்கு இருக்கும் பல்லின் அளவானது மிகவும் சிறிது. அதுபோல் கால் விரல்களின் அளவும் குறையும் மேலும் கடைசி விரலானது முற்றிலும் மனித உடலிலிருந்து மறைந்துவிடும்.

 8. மண்டை ஓட்டின் அளவு வேறுபாடுகள் (Larger/Smaller Skull Volumes):

 மனித மண்டை ஓட்டின் அளவானது மேலும் சிறியதாக மாறும். பரிமாண ஆய்வாளர்கள் இதை நிரூபித்தும் உள்ளனர். இதை Yual Noah Harari எழுதிய sapiens புத்தகத்திலும் காணலாம்.

 9. சுய முன்னேற்றம் (Self Improvement):

 இறுதியாக சுய முன்னேற்றமானது மிகவும் முக்கியமானது. ஏனெனில் வேகமாக முன்னேறி வரும் தொழில்நுட்ப, மருத்துவ முறைகளுக்கு ஏற்றவாறு மனிதன் தன்னை தகவமைத்துக் கொள்ள வேண்டிய நிர்பந்தம் ஏற்படலாம் இதற்கு மனிதனின் உடலும் மனமும் ஒத்துழைத்தால் மட்டுமே இது சாத்தியம். இல்லையெனில் பூமியில் மனித இனத்திற்கு இடம் இல்லை. இம் முன்னேற்றத்தினால் மனிதன் தனது மரபணுக்களை தேர்ந்தெடுக்கும் ஆற்றல் கூட கிடைக்கப் பெறலாம்.

 இந்த பரிணாம வளர்ச்சி மாற்றங்கள் அடுத்த 1000 அல்லது 2000 வருடங்களுக்குள் ஏற்படலாம் என்பது அறிவியலாளர்களின் அனுமானம்

R.PRABU

No comments:

Powered by Blogger.