ஏழைகளின் முந்திரி "நிலக்கடலை" பயன்பாடுகள் பற்றி அறிவோம்:
நிலக்கடலை (அ) வேர்க்கடலை (அ) கச்சான் (peanut) என்பது பலரால் விரும்பி உண்ணப்படும் பொருளைத் தரும் பருப்பு வகை தாவரம் ஆகும்.
இது நடு தென் அமெரிக்காவுக்கு பூர்வீகமானது. சீனா, இந்தியா, நைஜீரியா ஆகிய நாடுகள் இதை அதிகம் உற்பத்தி செய்கின்றன.
இது வட்டார வழக்குகளில் வேர்க்கடலை, மணிலாக்கடலை, கடலைக்காய், மணிலாக்கொட்டை (மல்லாட்டை) எனப் பலவாறாக வழங்கப்படுகிறது.
கடலை காந்தியடிகளுக்குப் பிடித்த உணவாகும்.
நிலக்கடலையில் மாங்கனீசு சத்து அதிகமாக உள்ளது.நாம் உண்ணும் உணவில் உள்ள கால்சியம் சத்துகள் நமது உடலுக்கு கிடைக்கவும் இது பயன்படுகிறது.
நிலக்கடலையில் உள்ள ரெஸ்வரெட்ரால் என்ற சத்து இதயவால்வுகளை பாதுக்காக்கிறது. நிலக்கடலையில் பாலிபீனால்ஸ் என்ற ஆண்டி ஆக்சிடண்ட்.
நோயிலிருந்து பாதுக்காப்பதோடு இளமையையும் பராமரிக்கவும் செய்கிறது. நிலக்கடலையில் உள்ள தாமிரம் மற்றும் துத்தநாக சத்தானது தீமை செய்யும் கொழுப்பை குறைத்து நன்மை செய்யும் கொழுப்பை அதிகரிக்கிறது.
நிலக்கடலையில் உள்ள ஒமேகா -3 சத்தானாது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
நிலக்கடலையில் "போலிக் ஆசிட்' அதிகம் இருப்பதால் இனப்பெருக்கத்திற்கு இது உதவுகிறது.
நிலக்கடலைச் செடியைச் சாப்பிடும் ஆடு, மாடு, நாய் வயல்வெளியைச் சுற்றி உள்ள பறவைகள் எல்லாம் திடமாக இருக்கும்.
நிலக்கடலையைத் தொடர்ந்து சாப்பிடும் பெண்களின் கர்ப்பப்பை சீராகச் செயல்படுவதுடன் கர்ப்பப்பைக் கட்டிகள், நீர்க்கட்டிகள் ஏற்படாது. அது மட்டுமல்லாது குழந்தைப்பேறும் சிரமமின்றி உண்டாகும்.
உடல் எடை அதிகமாகாமல் இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் நிலக்கடலை சாப்பிடலாம்.
நிலக்கடலையில் பரிப்டோபான் என்ற முக்கிய அமினோ அமிலம் நிறைந்துள்ளது. இந்த வகை அமினோ அமிலம் செரட்டோனின் என்ற மூளையை உற்சாகப்படுத்தும் உயிர் வேதிப்பொருள் உற்பத்திக்குப் பயன்படுகிறது.
செரட்டோனின் மூளை நரம்புகளைத் தூண்டுகிறது. மன அழுத்தத்தைப் போக்குகிறது.
கடலை மூளை வளர்ச்சிக்கு நல்ல டானிக். நிலக்கடலையில் மூளை வளர்ச்சிக்குப் பயன்படும் விட்டமின் 3 நியாசின் உள்ளது. இது ஞாபக சக்திக்கும் பெரிதும் உதவும். இரத்த ஓட்டத்தையும் சீராக்குகிறது.
நிலக்கடலை நோய்வருவதைத் தடுப்பதுடன் இளமையைப் பராமரிக்கவும் பயன்படுகிறது.
நிலக்கடலை சாப்பிட்டால் கொழுப்புச் சத்து அதிகமாகும் என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், அது உண்மையில்லை. நிலக்கடலையில் உள்ள தாமிரம் மற்றும் துத்தநாகச் சத்து, நமது உடலில் தீமை செய்யும் கொழுப்பைக் குறைத்து நன்மை செய்யும் கொழுப்பை அதிகமாக்குகிறது.
பாதாமைவிட நிலக்கடலையில் நன்மை செய்யும் கொழுப்பு அதிகமாக உள்ளது. நிலக்கடலையில் உள்ள ஒமேகா-3 சத்து, நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
பொதுவாக பாதாம், பிஸ்தா, முந்திரி பருப்புகளில்தான் சத்து அதிகம் உள்ளது என்று அனைவரும் எண்ணுகிறார்கள். ஆனால், நிலக்கடலையில்தான் இவற்றையெல்லாம் விட சத்துக்கள் உள்ளன.
நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் ஆற்றலும் நிலக்கடலைக்குத்தான் உண்டு. அதனால்தான் இது "ஏழைகளின் முந்திரி' என்று அழைக்கப்படுகிறது.
தொகுப்பு:-
Dr.அருண்_நாகலிங்கம்
புதுவை..


No comments: