Breaking

சமூக வலைத்தளத்தில் பெண்கள் பாதுகாப்பாக இருப்பது எப்படி





இன்று பலரும் சமூக வலைத்தளங்களிலேயே அதிக நேரத்தைச் செலவிடுகிறார்கள்.
சமூக வலைத்தளங்களின் மூலம் காதல் வயப்பட்டு சிக்கலில் மாட்டிக்கொள்வது, பணத்தை இழப்பது போன்ற சம்பவங்கள் அன்றாடம் நடந்துகொண்டுதான் இருக்கின்றன.
இணையவழி குற்றங்களிலிருந்து பெண்கள் எப்படியெல்லாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்? என்பதை பற்றி தெரிந்து கொள்வோம்.
ஆன்லைனில் பாதுகாப்பாக இருப்பது எப்படி?
சமூக வலைதளங்களில் நட்பு கோரிக்கைகளை ஏற்கும்போது எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
உங்களுடைய அனுமதியின்றி, உங்களுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை யாராவது ஒருவர் வெளியிட்டால், அது குறித்து உடனடியாக சம்பந்தப்பட்டவர்களிடம் புகார் அளிக்கவும்.

இமெயில், பேஸ்புக், ட்விட்டர் என்று உங்கள் இணையதளத்தில் உள்ள கணக்குகளுக்கு வைக்கும் பாஸ்வேர்டை யாரிடமும் பகிர வேண்டாம்.
உங்கள் பெற்றோர்கள் அல்லது உடன்பிறந்தவர்களின் பெயர்களை பாஸ்வேர்டாக வைக்காதீர்கள்.
தாங்கள் செல்லும் இடங்களை உடனுக்குடன் சமூக வலைதளங்களில் பதிவிட வேண்டாம்.
தன் குடும்பத்தினர் மட்டும் அறியக்கூடிய தகவல்களை சமூக வலைத்தளங்களில் பகிர்வதை தவிர்க்க வேண்டும்.
புகைப்படம் மற்றும் வீடியோக்களை பதிவேற்றும்போது கூடுதல் கவனம் தேவை.
உங்கள் சமூக வலைத்தளங்களில் யடடழறஇ ழம போன்று பட்டன்களை கிளிக் செய்வதற்கு முன்னால், எதற்காக உங்களிடம் அனுமதி கேட்கப்படுகிறது என்பதை அறிந்த பிறகு கிளிக் செய்யுங்கள்.

சொந்த கருத்துக்களை பதிவிடும்போது அதிக கவனம் தேவை.
உங்களுக்கு வந்த தகவலை அப்படியே பகிராமல் அதன் உண்மைத்தன்மை உணர்ந்து, ஆராய்ந்து பிறகு பகிருங்கள்.
ஒருவர் தனது பதிவுகளுக்கு, படங்களுக்கு அதிகமாக தொடர்ந்து லைக்ஸ் மற்றும் கமண்ட்ஸ் கொடுத்து வந்தால் எளிதாக அந்த நபருடன் பழக ஆரம்பிப்பது, அந்த நபரை யார் என அறியாமல் தனது நட்பு வட்டாரத்தில் சேர்த்து கொள்வது ஆபத்து ஆகும்.
உங்களை யாராவது பிளாக்மெயில் செய்தால், அதை நீங்களே சமாளிக்கலாம் என நினைக்காமல் முதலில் குடும்பத்தினரிடம் அதை பற்றி பேசுங்கள். தேவைப்பட்டால் காவல்துறை உதவியையும் அணுகுங்கள்.

No comments:

Powered by Blogger.