உடலுக்கு குளிர்ச்சி தரும் அரிசி மோர் கஞ்சி செய்வது எப்படி?
உடலுக்கு குளிர்ச்சி தரும் அரிசி மோர் கஞ்சி செய்வது எப்படி?
தேவையான பொருட்கள் :
புழுங்கலரிசி – ஒரு கப்,
மோர் – இரண்டு கப்,
சின்ன வெங்காயம் – 5,
உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
சின்ன வெங்காயத்தை சின்னதாக நறுக்கி கொள்ளவும்.
புழுங்கல் அரிசியை வாணலியில் வறுத்து, ரவை போல உடைத்து கொள்ளவும்.
இதில் தண்ணீருடன் சேர்த்து நன்கு வேக வைத்து ஆறவிடவும்.
பின்பு இதனுடன் உப்பு, மோர், நறுக்கிய சின்ன வெங்காயம் கலந்து சாப்பிடவும்.

No comments: