Home
JANUARY
இந்திய அறிவியல் அறிஞர்கள்
ஜனவரி-02. கணிதம், புள்ளியியலில் நிகழ்தகவுகோட்பாடுகளை வழங்கியவரும், தமிழக கணிதவியலாளருமான- சாத்தமங்கலம் ரங்க ஐயங்கார் ஸ்ரீனிவாச வரதன்(Sathamangalam Ranga Iyengar Srinivasa Varadhan)பிறந்த தினம்.
ஜனவரி-02. கணிதம், புள்ளியியலில் நிகழ்தகவுகோட்பாடுகளை வழங்கியவரும், தமிழக கணிதவியலாளருமான- சாத்தமங்கலம் ரங்க ஐயங்கார் ஸ்ரீனிவாச வரதன்(Sathamangalam Ranga Iyengar Srinivasa Varadhan)பிறந்த தினம்.
08:35
Read
இன்று பிறந்த நாள்:- ஜனவரி-02.
கணிதம், புள்ளியியலில்
நிகழ்தகவுகோட்பாடுகளை வழங்கியவரும்,
தமிழக கணிதவியலாளருமான-
சாத்தமங்கலம் ரங்க ஐயங்கார் ஸ்ரீனிவாச வரதன்(Sathamangalam Ranga Iyengar Srinivasa Varadhan)பிறந்த தினம்.
பிறப்பு:-
இவர், ஜனவரி-02,1940 ஆம் ஆண்டு, இந்தியாவில்சென்னையில்
பிறந்தார். மேலும் அருகிலுள்ள பொன்னேரி அரசு உயர்நிலைப்பள்ளியில் பயின்றார்.
1959 இல்சென்னைப் பல்கலைக்கழகத்தில் சிறப்பு (ஆனர்சு) பட்டம் பெற்றும், அடுத்த ஆண்டே முதுகலை (M.A.) பட்டமும் பெற்றார்.
கணித அடிப்படையிலான நிகழ்தகவு குறித்து ஆய்வு செய்துகொண்டிருந்த சில நண்பர்களை சந்தித்து, அவர்களுடன் இணைந்து ஆய்வுகளில் ஈடுபட்டார்.
பின்னர் கொல்கத்தா இந்தியப் புள்ளியியல் கழகத்தில், புகழ் பெற்ற புள்ளி இயலர் சி. ஆர். ராவின் தலைமையின் கீழ் ஆய்வு செய்து, 1963 இல் முனைவர் பட்டம் பெற்றார்.
பணிகள்:-
முதுமுனைவர்ப் பேராளராக (Postdoctoral Fellow), கூராண்ட்டு கணிதவியல் கழகத்தில் 1963முதல் 1966 வரையில் பணியாற்றினார். 1966 ஆம் ஆண்டு அங்கேயே துணைப் பேராசிரியரானார்.
1968 இல் இணைப் பேராசிரியரானார்.
1972 இல் முழுபபேராசிரியராக பணியேற்று,1980 முதல் 1984 வரையும், பிறகு 1992 முதல் 1994 வரை அக்கழகத்திற்கு இயக்குனராகப் பணியாற்றினார்.
கண்டுபிடிப்புகள்:-
இவர் கணிதத்தில் நிகழ்தகவுக் கோட்பாட்டிற்கு ஆரம்பகட்ட பங்களிப்புகளை வழங்கியுள்ளார்.
குறிப்பாக 'பெரிய விலக்கங்கள் கோட்பாடு' (Theory of Large Deviations) சிறந்த முறையில் உருவாக்கினார்.
தனது ஆய்வுகள் குறித்த பல ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டார். லண்டன் ராயல் சொசைட்டியின் ஃபெலோவாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
நூல்கள்:-
தி ஸ்டோகாஸ்டிக் பிராஸசஸ் என்ற நூல் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
விருதுகள்:-
வருகைப் பேராளர், இசுட்டான்போர்டு பல்கலைக்கழகம் (1976-77),
வருகையாளர் பதவி, மிட்டாகு-இலெஃப்ளர் கழகம் ( Mittag-Leffler Institute) (1972),
ஏபெல் பரிசை-2007 ஆம் ஆண்டுக்காகப் பெற்றார்,
2008-பத்ம பூசன் விருதினையும் பெற்றார். அமெரிக்காவின் உச்ச உயர்வுப் பதக்கமான
தேசிய அறிவியல் பதக்கத்தை-2010 ஆம் ஆண்டு பராக் ஒபாமாவிடம் பெற்றார்.
2013-இன்ஃபோசிசு பரிசையும்
வென்றார்.
நண்பர்கள், சக பேராசிரியர்களால் எஸ் ஆர் எஸ் வரதன், ரகு என்று அன்போடு அழைக்கப்படுகிறார். மிகுந்த அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றும் ஆசிரியர் என்று புகழப்படுகிறார். தமிழ் இலக்கியம், இந்திய பாரம்பரிய இசை, ஐரோப்பிய இசை, நாடகத்தில் ஆர்வம் கொண்டவராக திகழ்கிறார். நியூயார்க் பல்கலைக்கழகத்தின் கூரன்ட் கணிதவியல் கழகத்தில் பேராசிரியராக பணியாற்றுகிறார். உலகின் பல்வேறு பல்கலைக்கழகங்களில் வருகைதரு பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார்.
ஜனவரி-02. கணிதம், புள்ளியியலில் நிகழ்தகவுகோட்பாடுகளை வழங்கியவரும், தமிழக கணிதவியலாளருமான- சாத்தமங்கலம் ரங்க ஐயங்கார் ஸ்ரீனிவாச வரதன்(Sathamangalam Ranga Iyengar Srinivasa Varadhan)பிறந்த தினம்.
Reviewed by JAYASEELAN.K
on
08:35
Rating: 5
Reviewed by JAYASEELAN.K
on
08:35
Rating: 5


No comments: