Home
JANUARY
ஜனவரி-10. தற்கால அறிவியல் வகைப்பாட்டு முறைக்கும் (scientific classification) , பெயர் முறைக்கும், (nomenclature) அடிப்படையை உருவாக்கிய சுவீடன் நாட்டைச் சேர்ந்த, தாவரவியலாளர், விலங்கியலாளர் -கரோலஸ் லின்னேயஸ்(Carl Linnaeus) மறைந்த தினம்.
ஜனவரி-10. தற்கால அறிவியல் வகைப்பாட்டு முறைக்கும் (scientific classification) , பெயர் முறைக்கும், (nomenclature) அடிப்படையை உருவாக்கிய சுவீடன் நாட்டைச் சேர்ந்த, தாவரவியலாளர், விலங்கியலாளர் -கரோலஸ் லின்னேயஸ்(Carl Linnaeus) மறைந்த தினம்.
18:24
Read
இன்று நினைவு நாள்:- ஜனவரி-10.
தற்கால அறிவியல் வகைப்பாட்டு
முறைக்கும்
(scientific classification) , பெயர் முறைக்கும்,
(nomenclature) அடிப்படையை உருவாக்கிய
சுவீடன் நாட்டைச் சேர்ந்த, தாவரவியலாளர், விலங்கியலாளர்
-கரோலஸ் லின்னேயஸ்(Carl Linnaeus) மறைந்த தினம்.
பிறப்பு:-
ஸ்வீடனின் ராஷல்ட் கிராமத்தில் 1707 ஆம் ஆண்டு, மே- 23 ஆம் தேதி பிறந்தார்.
இவர், இலத்தீன் மொழி, தாவரவியல், மதக் கல்வி ஆகியவற்றைத் தம் தந்தையிடமே கற்றுத் தேர்ந்தார். பிறகு
பத்தாவது வயதில் பள்ளியில் சேர்ந்து கல்வி பயின்றார்.
தொடர்ந்து தாவர ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வந்த இவர் உடலியல் மற்றும் தாவரவியல் குறித்த கல்வியை முறையே லுண்ட், உப்சாலா பல்கலைக்கழகங்களில் பெற்றார்.
பணிகள்:-
பூக்களில் உள்ள பாலுறுப்புக்கள் பற்றிய கட்டுரையால் கவரப்பட்டு, அதே தலைப்பில் கட்டுரை எழுதி தாவரவியற் பூங்காவான உப்சாலா பல்கலைக்கழகத்திலேயே தாவரவியல் துறை விரிவுரையாளராகப் பணிபுரிந்தார்.
தாவர வகைப்பாட்டியல் முறை குறித்து கட்டுரைகள் படைத்தார். இவ் ஆராய்ச்சியில் ஈடுபட இவருக்குப் போதுமான நிதியை, 1732 இல், லாப்லாந்து
(Lapland) பற்றிய ஆய்வுப் பயணம் ஒன்றுக்கு
உப்சாலா அறிவியல் அக்காடமி வழங்கி ஊக்கப்படுத்தியது.
மேலும் இவர் நெடும் பயணம் மேற்கொண்டார். தாவரங்கள், பறவைகள் மட்டுமல்லாது புவியியல் பற்றியும் எண்ணற்ற குறிப்புகளை எழுதினார். இந்த ஆராய்ச்சியின் முடிவில் நூற்றுக்கும் மேற்பட்ட புதிய வகை தாவர இனங்களை அடையாளம் கண்டார். அவற்றை அடிப்படையாகக் கொண்டு,
ஃப்ளோரோ லேப்போனிகா
என்ற நூலை லின்னேயஸ் எழுதினார். அதன்பின், தாவர, விலங்குகளுக்கு இரு பெயரீடு முறை குறித்து ஆராய்ந்தார். பிறகு, நெதர்லாந்தில் உள்ள ஆர்தர்ஜிக் பல்கலைக்கழகத்தில் மலேரியா மற்றும் அதன் காரணிகள் குறித்து ஆய்வுக் கட்டுரை
ஒன்றை எழுதி சமர்ப்பித்து, மருத்துவத் துறையிலும் பட்டம் பெற்றார்.
வகைப்பாட்டியல்:-
அழிந்துபோன மற்றும் உயிர் வாழ்ந்துகொண்டிருக்கிற உயிரினங்கள், தாவரங்களை வகைப்படுத்துதல் அறிவியல் வகைப்பாடு எனப்படும். உயிரினங்கள், தாவரங்களை இனம் கண்டறிய இது உதவுகிறது. இரு சொற்பெயரிடல் (Binomial Nomenclature - பைநாமியல் நாமன்கிளேச்சர்) முறையை கரோலஸ் லின்னேயஸ் அறிமுகப்படுத்தினார். அவ்வாறு அவர் உருவாக்கிய விதிமுறைகளைக்கொண்டு 'ஸ்பீசிஸ் பிளான்டரம்' (Species Plantarum) என்ற நூலை இயற்றினார். இந்த நூல் வகைப்பாட்டு முறை குறித்து விளக்குகிறது. இரு சொற்பெயரிடல் என்றால், ஓர் உயிருக்கு இரண்டு பெயர்கள் அளித்தல். எடுத்துக்காட்டு : 'ஹோமோ சேப்பியன்ஸ்' (Homo Sapiens). ஹோமோ பேரினப் பெயர். சேப்பியன்ஸ் சிறப்பினப் பெயர். கரோலஸ் லின்னேயஸ் 'நவீன வகைப்பாட்டியலின் தந்தை' என அழைக்கப்படுகிறார்.
உயிரினங்களைப் பற்றி ஆய்வு செய்த இவர், ஐந்து படிநிலைகளில் (Levels - லெவல்ஸ்) உயிரினங்களை வகைப்படுத்தினார்.
திணை (ராஜ்ஜியம்) (Kingdom கிங்டம்)
வகுப்பு (Class கிளாஸ்)
வரிசை (Order ஆர்டர்)
பேரினம் (Genus - ஜீனஸ்)
இனம் (species)
இவர் உயிரினங்களை
பிளாண்டே
(plantae -தாவரங்கள்),
அனிமேலியா (animalia -விலங்குகள்) என இரு திணைகளாகப் பகுத்தார்.
பதினெட்டாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பல சொற்பெயரிடு முறை இருந்தது. இவற்றின் சிக்கல்களைத் தவிர்க்க, 1623 ஆம் ஆண்டு, காசுபர்டு பாகின் (1560–1624) என்ற அறிஞர், இரு சொற்பெயரிடல் முறைமையை அறிமுகப் படுத்தினார்.
இம்முறையை பின்பற்றி, கரோலஸ் லின்னேயஸ் (1707–1778) பெயரிடல் முறையை
ஒழுங்கு படுத்தி "Species Plantarum",- 1753 நூலை இயற்றினார்.
நூல்கள்:-
இயற்கையின் அமைப்பு(Systema Naturae)
முதல் பதிப்பு -1735 நெதர்லாந்தில் அச்சிடப்பட்டது.
உயிரினங்களின் வகைப்பாடு:- முதல் இரண்டு தொகுதி, 1753 ல் வெளியிடப்பட்டது.
இன வகைப்பாடு:- 1737 இல் வெளியிடப்பட்டது. தாவரங்களின் கருத்தியல் வகைப்பாடு
(Philosophia Botanica):-1751ல் வெளியிடப்பட்டது.
1736ல் தாவரங்களின் அடிப்படை வகைப்பாடு (Fundamenta Botanica),
1737ல் தாவரங்களின் தீவிர வகைப்பாடு (Critica Botanica) என்ற புத்தகமாக வெளியிட்டிருந்தார்.
பதவிகள்:-
இங்கிலாந்து, பிரான்ஸ் ஆகிய நாடுகளில் கரோலஸ் லின்னேயஸ் பயணம் மேற்கொண்டு, நிறைய மாதிரிகளைச் சேகரித்தார்.
பின்னர், ஸ்வீடன் ஸ்டாக்ஹோமில் மருத்துவராகப் பணியாற்றினார்.
ராயல் ஸ்வீடிஷ் அறிவியல் அகாடமி என்னும் அமைப்பைத் தோற்றுவித்து, அதன் முதல் தலைவராகவும் பொறுப்பேற்றுக் கொண்டார்.
மறைவு:-
நவீன சூழலியலின் (Ecology) முன்னோடிகளில் ஒருவராகக் கருதப்படுபவரும், தற்கால அறிவியல் வகைப்பாட்டியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான கரோலஸ் லின்னேயஸ் தம் 71-வது வயதில் ஜனவரி-10, 1778 இல் மறைந்தார்.
சிறப்புகள்:-
ஸ்வீடன் மன்னர், கரோலஸ் லின்னேயஸுக்கு 1761 இல் சர்பட்டம் வழங்கிப் பாராட்டினார்.
லின்னேயஸ் 'பிறந்த ஆண்டின் நூற்றாண்டுகளில் பெரும் கொண்டாட்டங்கள் நடத்தப்படுகிறது. லின்னேயஸின் உருவம் பொதிந்த பல சுவீடிய அஞ்சல் தலைகள் மற்றும் நோட்டுகள் வெளியிடப்பட்டது.
இருசொல் பெயரிடுவதன் இன்றியமையாமை:-
உயிரினங்களுக்கு அறிவியல் முறைப்படி பெயரிடும் முறை உருவானது.
இருசொல் பெயரிடும் முறையின் அடிப்படை விதிகள்:-
உயிரினங்களின் அறிவியல் பெயர் இலத்தின் மொழி அல்லது இலத்தின் மொழிபெயர்ப்பு ஆகியவற்றால் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்.
பேரினப் பெயரில் முதல் எழுத்தைப் பெரிய எழுத்தில் எழுதப்படுதல், சிற்றினப் பெயரின் முதல் எழுத்தைச் சிறிய எழுத்தில் எழுதப்படுதல் அவசியம்.
ஓர் உயிரினத்தின் இருசொற் பெயர்களைப் பதிவிடும்போது சாய்வான எழுத்தில் குறிப்பிடப்படுதல் வேண்டும்.
ஜனவரி-10. தற்கால அறிவியல் வகைப்பாட்டு முறைக்கும் (scientific classification) , பெயர் முறைக்கும், (nomenclature) அடிப்படையை உருவாக்கிய சுவீடன் நாட்டைச் சேர்ந்த, தாவரவியலாளர், விலங்கியலாளர் -கரோலஸ் லின்னேயஸ்(Carl Linnaeus) மறைந்த தினம்.
Reviewed by JAYASEELAN.K
on
18:24
Rating: 5
Reviewed by JAYASEELAN.K
on
18:24
Rating: 5
Tags :
JANUARY


No comments: