Breaking

ஜனவரி-10. நோபல் பரிசு பெற்ற வானியலாளர், ராபர்ட் உட்ரோ வில்சன் பிறந்த தினம்.

                         

இன்று பிறந்த நாள்:ஜனவரி-10.

*நோபல் பரிசு பெற்ற வானியலாளர்,* ராபர்ட் உட்ரோ வில்சன் *பிறந்த தினம்.*

☄ *அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலம் ஹட்சன் நகரில் (1936) பிறந்தார்.* 

☄ *தந்தை எண்ணெய்க் கிணறு நிறுவனத்தில் பணியாற்றியவர். ராபர்ட் சிறுவனாக இருந்தபோது, தந்தை பணிபுரியும் இடத்துக்குச் செல்வார். அங்குள்ள மின்னணு இயந்திரங்களை பழுதுபார்ப்பதும், பிரித்துப்போட்டு மீண்டும் பொருத்துவதும் அவருக்கு பொழுதுபோக்கு.*

☄ *லாமர் உயர்நிலைப் பள்ளியில் பயின்றார். பியானோ இசை கற்ற இவர், பள்ளி இசைக் குழுவிலும் இடம்பெற்றிருந்தார்.* 

☄ *கணிதம், அறிவியலில் சிறந்து விளங்கினார். ரைஸ் பல்கலைக்கழகத்தில் இயற்பியலில் இளங்கலைப் பட்டம் பெற்றார். ஆராய்ச்சிப் பாடத்துக்காக, குறைந்த வெப்பநிலையில் பயன்படுத்தக்கூடிய காந்தக் கருவிக்கு ரெகுலேட்டர் உருவாக்கினார்.*


☄ *இயற்பியல், மின்னணுத் துறையில் அதிக நாட்டம் இருந்ததால்* வான் ஒலி வானியல் (Radio Astronomy) *துறையில் மேற்படிப்புக்காக கலிபோர்னியா தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் சேர்ந்தார்.*

☄ *ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்குப் பயணிக்கும்* வேவ் மேசர் ஆம்ப்ளிபயர்களை *மேம்படுத்தும் ஆராய்ச்சியை மேற்கொண்டு முனைவர் பட்டம் பெற்றார்.*

☄ ஓவன்ஸ் வேலி ரேடியோ அப்சர்வேட்டரியில் *பணியாற்றினார்.* 

☄ இயற்பியல், மின்னணுவியல் இணைந்த ரேடியோ அஸ்ட்ரானமி துறை *இவரது ஆர்வத்துக்கும் திறனுக்கும் பொருத்தமாக இருந்ததால் படிப்புடன் ஆராய்ச்சிகளிலும் ஈடுபட்டார்.*

☄ *நியூஜெர்சியில் உள்ள பெல் டெலிபோன் ஆய்வகத்தில் ரேடியோ ஆராய்ச்சித் துறையில் ஆராய்ச்சியாளராகப் பணிக்கு சேர்ந்தார். அதன் இயக்குநராகவும் பணியாற்றினார். அங்கு* பால்வெளி வரைபடத் *தயாரிப்புக்கான ஆராய்ச்சிகளை மேற்கொண்டார்.* 

☄ *அங்கு இந்திய விண்வெளி விஞ்ஞானி வி.ராதாகிருஷ்ணன் உட்பட பல விஞ்ஞானிகளுடன் இணைந்து பல்வேறு ஆய்வுகளில் ஈடுபட்டார்.*

☄ *வானியல் சோதனைக்காக முதலில்* ‘சன் டிராக்கர்’ *என்ற கருவியை வடிவமைத்தார். அங்கு பணியாற்றும் ஜெர்மன் அறிஞர் ஆர்னோ பென்சியாவுடன் இணைந்து பல சோதனைகளைமேற்கொண்டார்.* 

☄ *இருவரும்* ரேடியோ டெலஸ்கோப்பை *பயன்படுத்தி* நட்சத்திரங்களுக்கு இடையே உள்ள வாயு மேகங்களின் கதிர்வீச்சு *குறித்து ஆராய்ந்தனர்.*

☄ *புது வகையான ஆன்டெனாவை மேம்படுத்தும் முனைப்பில் அவர்கள் ஈடுபட்டபோது, வித்தியாசமான ஒலி சமிக்ஞை உண்டாவதை அறிந்தனர். தீவிரமாக ஆராய்ந்தபோது, அது* அண்டவியல் நுண்ணலைப் பின்புலம் - சிஎம்பி (Cosmic Microwave Background) *என்பதை அடையாளம் கண்டனர்.*


☄ *இது பெருவெடிப்பு தத்துவத்தை உறுதிப்படுத்தும் முக்கியச் சான்றாக அமைந்தது. இந்தக் கண்டுபிடிப்புகள் குறித்த ஆராய்ச்சிக் கட்டுரையை 1965-ல் வெளியிட்டனர். இக்கண்டுபிடிப்புக்காக 1978-ல் சோவியத் யூனியன் விஞ்ஞானி* பியோடர் கபிஸ்தா மற்றும்  *இவருக்கும் இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.*

☄ *நட்சத்திரங்களுக்கு இடையேயான* மேகங்களில் கார்பன் மோனாக்சைடு மற்றும் பிற மூலக்கூறுகள் *இருப்பதைக் கண்டறிந்தனர்.*

☄ *1979-ல் சர்வதேச வானியல் யூனியன், அமெரிக்க இயற்பியல் கழகம் ஆகியவற்றில் இணைந்து செயல்பட்டார்.* 

☄ *1994 வரை பெல் வானொலி இயற்பியல் ஆராய்ச்சித் துறை தலைவராகப் பணியாற்றினார். மசாசூசெட்ஸில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் ஹாவர்ட்  ஸ்மித்சோனியன் வான்இயற்பியல் மையத்தின் முதுநிலை விஞ்ஞானியாகப் பணியாற்றி வருகிறார்.* 

☄ *இன்று 81 வயதை நிறைவு செய்யும் ராபர்ட் உட்ரோ வில்சன் வான்இயற்பியல் ஆராய்ச்சிகள், எழுத்துப் பணியில் இப்போதும் ஈடுபட்டு வருகிறார்.*
☄☄☄☄☄☄☄☄

No comments:

Powered by Blogger.