Breaking

நீரிழிவு நோய் சிகிச்சைக்காக முதல் தடவையாக இன்சுலின் பயன்படுத்தப்பட்ட தினம் இன்று - 11.01.1922:



நீரிழிவு நோய் சிகிச்சைக்காக முதல் தடவையாக இன்சுலின் பயன்படுத்தப்பட்ட  தினம் இன்று - 11.01.1922:

🌸 இன்சுலின்’ என்பது ஒரு ஹார்மோன்; கணையத்தில்(Pancreas) உள்ள ‘பீட்டா’ செல் இதைச் சுரக்கிறது. 

🌸 இதுதான், ரத்தத்தில் குளுக்கோஸ் அளவைச் சரியான அளவில் வைத்துக் கொள்கிறது.

🌸 இன்சுலின். நீரிழிவுக்காரர்களுக்கு இந்தப் பெயர் பிரபலம். உடலில் இன்சுலின் சுரக்காவிட்டால் நீரிழிவு நோய் வரும் என்றும், கட்டுப்படாத நீரிழிவு நோய்க்கு இன்சுலின் ஊசி போட்டுக்கொள்ள வேண்டியது அவசியம்.


🌸 இன்சுலினைக் கண்டுபிடித்து உலக அளவில் உயிரிழப்பைக்குறைத்தவர்கள் கனடாவைச் சேர்ந்த பாண்டிங் (Banting), பெஸ்ட் (Best) எனும் மருத்துவ விஞ்ஞானிகள். 

🌸 1920ம் ஆண்டுவரை உடலில் கணையத்துக்கும் நீரிழிவுக்கும் தொடர்பு உள்ளது என்பது மட்டும்தான் தெரியும்.

🌸 பாண்டிங், தன்னுடைய ஆராய்ச்சியின் முதல்படியாக, ஆரோக்கியமான ஒரு நாயின் கணையத்தை அகற்றி, அதிலிருந்து ஒரு திரவத்தைப் பிழிந்து, அதை நீரிழிவு நோயுள்ள நாய்க்கு ஊசிமூலம் செலுத்தினார்.

🌸 உடனடியாக அந்த நாயின் ரத்த சர்க்கரை குறையத் தொடங்கியது. அதை பல நாய்களிடம் சோதித்துப் பார்த்தார். எல்லா நாய்களுக்கும் ரத்த சர்க்கரை குறைந்தது. 

🌸 அதைத் தொடர்ந்து, நீரிழிவினால் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்த ‘லியோனார்ட் தாம்சன்’ என்ற 19 வயதுச் சிறுவனுக்கு அதைச் செலுத்தினார். அவனுக்கும் நோய் கட்டுப்பட்டது.

🌸 இந்த ஆய்வின் மூலம் ‘நீரிழிவு நோய்க்குக் காரணம் இன்சுலின் குறைவு; அதைக் கட்டுப்படுத்தஒரே வழி இன்சுலினைச் செலுத்துவது’ என்று பாண்டிங் உறுதி செய்தார்.
👩🏽‍🔬👩🏽‍🔬👩🏽‍🔬👩🏽‍🔬👩🏽‍🔬👩🏽‍🔬👩🏽‍🔬👩🏽‍🔬👩🏽‍🔬
👱🏽‍♂👱🏽‍♂👱🏽‍♂👱🏽‍♂👱🏽‍♂👱🏽‍♂👱🏽‍♂👱🏽‍♂👱🏽‍♂

No comments:

Powered by Blogger.