ஜனவரி-21. ஆஸ்பிரின் மருந்தைத் தயாரித்தவர்- பெலிக்ஸ் ஹாஃப்மேன் பிறந்த தினம்.
04:12
Read
💊💊💊💊💊💊💊💊💊💊
இன்று பிறந்த நாள்:ஜனவரி-21.
ஆஸ்பிரின் மருந்தைத் தயாரித்தவர்- பெலிக்ஸ் ஹாஃப்மேன் பிறந்த தினம்.
💊 ஜெர்மனியில் உள்ள லூட்ஸ்விக்ஸ் பெர்க் என்ற ஊரில் 1868 ஆம் ஆண்டு பிறந்தார் . உள்ளூரில் உள்ள உயர் நிலைப் பள்ளியில் பயின்றார்.
💊 சிறு வயது முதலே தான் ஒரு கெமிஸ்ட் டாக வேண்டும் என்பதுதான் இவரது விருப்பம்.
💊 சிறுவனாக இருந்த சமயத்தில் தந்தை மூட்டு வலியால் அவதிப் பட்டு வந்தார்.
💊 அந்த வலியைப் போக்குவதற்காக உட்கொண்ட மருந்து கடும் வயிற்றுவலியை ஏற்படுத்தியது. அப்பாவின் வலிகளைப் போக்குவதற்கு எதையாவது செய்ய வேண்டும் என்று உறுதி ஏற்றார்.
💊 பார்மசூடிகல் தேர்வில் தேர்ச்சி யடைந்தார். அதன் பிறகு மியுனிச் பல்கலைக்கழகத்தில் மருத்துவ மும், வேதியியலும் பயின்றார். முனைவர் பட்டமும் பெற்றார்.
💊 படித்து முடித்ததும் தந்தை உட்கொள்ளும் மருந்தை ஆராய்ந்தார். அந்த மருந்தை உட்கொள்வதால் ஏற்படும் பக்க விளைவை மட்டுப்படுத்துவதில் வெற்றி கண்டார்.
💊 தான் தயாரித்த மருந்தை தந்தையிடம் கொடுக்க, நல்ல பலன் ஏற்பட்டது.
💊 மனித குலத்துக்குப் பயன்படும் வகையில் மருந்துகள் தயாரிக்க வேண்டும் என்ற இவரது ஆர்வத்தையும் திறனையும் அறிந்த பேயர் என்ற புகழ்பெற்ற மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் இவரைப் பணியில் சேர்த்துக்கொண்டது.
💊 அங்கு பணிபுரியும் சமயத்தில் வலி நிவாரணத்துக்கான மருந்துகளைத் தயாரிப்பதில் தீவிரமாக செயல்பட்டார்.
💊 1897-ல் வலிக்கான மருந்து கண்டுபிடிக்கப்பட்டது. அதன் வேதியியல் பெயர் அஸிடைல்சாலிசிலிக் (acetylsalicylic) ஆசிட். இந்த மருந்து வலி, வீக்கம், ஜுரம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்குக் கொடுத்து சோதிக்கப்பட்டது.
💊 நோயாளிகள் தங்களுக்கு நிவாரணம் கிடைத்ததாக சொல்வதைக் கேட்ட இவர் மகிழ்ந்தார்.
💊 இந்த மருந்தை குறித்து மேலும் விரிவான ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த மருந்து ‘ஆஸ்பிரின்’ என்ற பெயரில் சந்தைக்கு வந்தது.
💊 உடனடியாக இவர் பார்மசூடிகல் மார்க்கெட்டிங் பிரிவின் தலைவராக நியமிக்கப்பட்டார். மருந்து ஆராய்ச்சிகளையும் தொடர்ந்தார்.
💊 முதலில் பவுடராகத் தயாரிக்கப்பட்ட இவரது மருந்து, பின்னர் மாத்திரை வடிவில் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டது.
💊 குறைந்த செலவில் தயாரிக்கும் முறையும் மேம்படுத்தப்பட்டு, குறைந்த விலையிலும் விற்கப்பட்டது.
💊 மிக விரைவாக இந்த மருந்தை மருத்துவ உலகம் இருகரம் நீட்டி வரவேற்றது. உலகம் முழுவதும் அதி வேகமாக இது பிரபலமடைந்தது.
💊 ஜெர்மனியில் மட்டுமல்லாமல், இத்தாலி, இங்கிலாந்து நாடுகளைச் சேர்ந்த மருத்துவர்களும் இந்த மருந்தைப் பயன்படுத்தத் தொடங்கினர். பல்வேறு நோய்களுக்கும் இது நிவாரணியாக இருந்ததால், உலகம் முழுவதும் பிரபலமடைந்தது.
💊 இதுவரை தயாரித்து விற்பனை செய்யப்பட்ட மருந்துகளிலேயே அதிக அளவு வெற்றி பெற்றது ஆஸ்பிரின்தான் என்று கூறப்படுகிறது. இதன் கண்டுபிடிப்பு குறித்து சில முரண்பாடான கருத்துகள் நிலவினாலும் ஆஸ்பிரின் மருந்து கண்டுபிடிப்பாளர் என்ற முறையில் இவருக்கே சட்டபூர்வமான அதிகாரம் வழங்கப்பட்டது.
💊 1928-ல் பணி ஓய்வு பெறும்வரை மருந்து மார்க்கெட்டிங் துறையில் பணியாற்றினார். மக்களின் உடல் வலிகளுக்கான மருந்தைக் கண்டறிந்த இவர் 1946-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் மறைந்தார்.
💊💊💊💊💊💊💊💊💊💊💊💊💊💊💊💊💊💊
ஜனவரி-21. ஆஸ்பிரின் மருந்தைத் தயாரித்தவர்- பெலிக்ஸ் ஹாஃப்மேன் பிறந்த தினம்.
Reviewed by JAYASEELAN.K
on
04:12
Rating: 5
Reviewed by JAYASEELAN.K
on
04:12
Rating: 5
Tags :
JANUARY


No comments: