Breaking

ஜனவரி-23 🕳 இந்தியத் தொல்லியல் ஆய்வுகளின் தந்தை அலெக்சாண்டர் கன்னிங்காம் பிறந்த தினம்.





இன்று பிறந்த நாள்:ஜனவரி-23

🕳 இந்தியத் தொல்லியல் ஆய்வுகளின் தந்தை  அலெக்சாண்டர் கன்னிங்காம் பிறந்த தினம்.

🕳 இவர் 1814 ஆம் ஆண்டில், இலண்டனில், ஸ்கொட்டியக் கவிஞரான அலம் கன்னிங்காம் என்பவருக்கு மகனாகப் பிறந்தார். 

🕳 இலண்டனில் உள்ள கிறிஸ்துவின் மருத்துவ நிலையம் எனப்பட்ட நிறுவனத்தில் தொடக்கக் கல்வியைப் பெற்றார். 

🕳 பின்னர் அடிஸ்கோம்பே என்னும் இடத்திலிருந்த எம். ஈ. ஐ கம்பனியின் மடாலயத்திலும், சத்தாமில் இருந்த ஆர். ஈ. எஸ்ட்டேட்டிலும் கல்வி கற்றார். 

🕳 19 ஆவது வயதில் வங்காளப் பொறியாளர் குழுவில் இரண்டாம் லெப்டினண்டாக இணைந்த அவர், அடுத்த 28 ஆண்டுகள் இந்தியப் பிரித்தானிய அரச சேவையில் பணியாற்றினார். 

🕳 1833 ஆம் ஆண்டில் இவர் இந்தியாவுக்கு வந்ததுமே, ஜேம்ஸ் பிரின்செப் என்பவருடன் இவருக்குக் கிடைத்த சந்திப்பு,இந்தியத் தொல்லியல் மீது வாழ்நாள் முழுதும் இவர் கொண்டிருந்த ஆர்வத்துக்குக் காரணமாகியது.

🕳 இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தின் முதல் தலைமை இயக்குனராக பணியாற்றியவர்.
********************
🕳🕳🕳🕳🕳🕳🕳🕳🕳
🕳🕳🕳🕳🕳🕳🕳🕳🕳

No comments:

Powered by Blogger.