ஜனவரி-27 ரூபியேசி குடும்பத்தில் நிபுணத்துவம் பெற்ற அமெரிக்க அறிவியல் அறிஞர்- #ஜூலியன் #ஆல்பிரட் #ஸ்டியர்மார்க் (Julian Alfred Steyermark) பிறந்த தினம்.
#இன்று #பிறந்த #நாள்:- #ஜனவரி-27
ரூபியேசி குடும்பத்தில் நிபுணத்துவம் பெற்ற அமெரிக்க அறிவியல் அறிஞர்-
#ஜூலியன் #ஆல்பிரட் #ஸ்டியர்மார்க் (Julian Alfred Steyermark) பிறந்த தினம்.
#பிறப்பு:-
மிஸ்சோரி நாட்டில் புனித லூயிஸ் என்ற இடத்தில் ஜனவரி 27, 1909 ஆம் ஆண்டு
பிறந்தார்.புனித லூயிஸில் உள்ள வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் ஹென்றிஷா ஸ்கூல் ஆஃப் பாட்டனியில் படித்து, 1933 இல் தனது முனைவர் பட்டம் (Ph.D) பெற்றார்.
#பணிகள்:-
இவர் சிகாகோவில் உள்ள கள அருங்காட்சியகம், கராகஸ் இல் உள்ள இன்ஸ்டியுடோ பொட்டானிகாவிலும் பணியாற்றினார். மேலும் புனித லூயிஸில் உள்ள மிசோரி தாவரவியல் பூங்காவில் 1984 முதல் அவரது இறப்பு வரை பணியாற்றினார்.
#கண்டுபிடிப்புகள்:-
வெனிசூலா குயானாவின் தாவரங்கள்,
மிசோரியின் தாவரங்கள் மற்றும்
குவாத்தமாலாவின் தாவரங்கள்
போன்றவை ஸ்டியர்மேக்கரின் முக்கிய படைப்புகளாகும் . இவரது வாழ்க்கையில், 130,000 தாவரங்களை இருபத்தி ஆறு நாடுகளில் இருந்து சேகரித்திருந்தார், இது அவர் உலக சாதனை பதிவேடான கின்னஸ் புத்தகத்தில் ஒரு பதிவை பதிய உறுதுணையாய் இருந்தது.இவர் ஆரம்பத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த, 38 பேரினங்களையும், மற்றும் 1,864 சிற்றினங்களையும், 2,392 தாவரங்களின் வகைகளையும் விளக்கினார்.
தாவரங்களுக்கு தாவரவியல் பெயரை குறிப்பிடும் போது ஸ்டியர்மார்க் என நிலையான குறிப்பிடுதல் முறையைப்
புதிய தாவர உலகத்தில் இருந்தது, மேலும் இவர் ரூபியேசி குடும்பத்திலும் நிபுணத்துவம் பெற்றவர் ஆவார்.
#படைப்புகள்:-
மிசோரி தாவரங்கள் (1963) ஏமன், அயோவா: தி அயோவா ஸ்டேட் யுனிவர்சிட்டி பிரஸ்.
#இறப்பு:-
அமெரிக்க தாவரவியலாளரான இவர்,
அக்டோபர்-15, 1988 ஆம் ஆண்டு மரணமடைந்தார்.
#சிறப்புகள்:-
இவரை கௌரவிக்கும் வகையில் ஒரு தாவர பேரினத்திற்கு ஸ்டியர்மார்க்கி
அட்ராக்டஸ் ஸ்டியர்மார்க் என்னும் அறிவியல் பெயர் சூட்டப்பட்டது.
Reviewed by JAYASEELAN.K
on
22:23
Rating: 5


No comments: