Breaking

ஜனவரி-28. அறுவை சிகிச்சை மருத்துவர், தாவரவியலாளர்-நேதன் பென் வுல்ப்(நத்தானியேல் வாலிக் Nathaniel Wallich) பிறந்த தினம்.

இன்று பிறந்த நாள்:- ஜனவரி-28.
அறுவை சிகிச்சை மருத்துவர்,  தாவரவியலாளர்-நேதன் பென் வுல்ப்(நத்தானியேல் வாலிக் Nathaniel Wallich) பிறந்த தினம்.


பிறப்பு:-

கோப்பன்கேகன் நகரில் ஜனவரி-28, 1786 இல் பிறந்தார்.இவரது இயற்பெயர் நேதன் பென் வுல்ஃப் ஆகும். பிறகு நேதன் வாலிக் என அழைக்கப்பட்ட இவர் பின்னர் நத்தானியேல் ஆனார். 

அறுவை மருத்துவர்களுக்கான றோயல் அக்கடமியில் பட்டம்பெற்ற நத்தானியேல், அவ்வாண்டின் இறுதியில் வங்காளத்தில் இருந்த டானியக் குடியேற்றமாகிய செராம்பூரில் அறுவை மருத்துவராகப் பதவி பெற்றார்.

ஏப்ரல் 1807 ஆம் ஆண்டில் புறப்பட்டு ஆப்பிரிக்க முனையூடாக அவ்வாண்டு நவம்பர் மாதத்தில் செராம்பூரை அடைந்தார்.

இந்திய வாழ்க்கை:-

வாலிச்சு ஏப்ரல் 1807 ஆம் ஆண்டு, இந்தியாவிற்கு கப்பல் பயணத்தைத் தொடங்கினார். ஆப்பிரக்க முனை வழியே, செரம்பூர் என்ற இடத்திற்கு நவம்பர் மாதம் வந்தடைந்தார். பல டேனியக் குடியிருப்புகளை, பிரித்தானியர்கள் கைப்பற்றிய போது, பிரடெரிக்சனகூரில்(Frederiksnagore) இவர் சிறையில் அடைக்கப் பட்டார். ஆனால், 1809 ஆம் ஆண்டு உதவித்தொகையுடன், நன்னடத்தையின் காரணமாகத் தண்டனைக்காலம் முடியும் முன்னரே விடுதலை செய்யப் பட்டார். அதன் பின்பு, பிரித்தானிய குடியிருப்புகளில் பதவிப் பெற்று பணியாற்றினார்.

ஆய்வுகள்:-

கொல்கத்தாவின் தாவரவியல் பூங்காவின் தொடக்க வளர்ச்சிக்கு இவர் பாடுபட்டார். அப்பொழுது அமைத்த உலர் தாவரகத்தில் , பல புதிய தாவரங்களை, தாவரவியல் முறைப்படி விவரித்தார். 

பின்பு அந்த புதிய தாவரங்களின், உலர் தாவரக மாதிரிகளை, ஐரோப்பியநாடுகளுக்கு பரவலாக வழங்கினார்.

அதனால் பல தாவரங்களின் பெயர்களுக்குப் பின்னால், தாவரவியல் பெயரீட்டு முறையின் படி, பின்னொட்டாக அவரது பெயர் இடப்படுகிறது.

எடுத்துக்காட்டு:-

Justicia lobelioidesWall. இதில் Wall என்பது இந்த தாவரவியல் அறிஞரைக் குறிக்கும் சொற்சுருக்கம் ஆகும். 

விருதுகள்:-

பிரிட்டன் அரசின் உயரிய விருதைப்(Fellowship of the Royal Society (FRS)) பெற்றார்.

தாவரவியலாளர் பெயர்ச்சுருக்கத் தரக்குறியீடு:-

தாவரவியல் பன்னாட்டு
விதிகளின் படி, நத்தானியேல் வாலிக் என்பவரை, Wall. என்ற தாவரவியலாளர் பெயர்சுருக்கக் குறியீட்டால், மேற்கோளாகத் 
தாவரவியல் பெயருக்குப் பின்குறிப்பிடுவர்.

இவரது பெயர் சுருக்கத்தை ஏற்ற தாவரங்கள்:-


Allium wallichii(Jimbur or Himalaya onion)

Apostasia wallichii

Brahmaea wallichii

Ulmus wallichiana(Himalayan Elm or Kashmir Elm)

Valeriana wallichii(Indian Valerian or Tagar-Ganthoda)

Wallichia (a genus of palm)

Widdringtonia wallichii(Clanwilliam Cedar or Clanwilliam Cypress)

மறைவு:-

இங்கிலாந்தில் உள்ள லண்டனில்,
ஏப்ரல்-28, 1854 இல், 68 வது வயதில் மறைந்தார்.

No comments:

Powered by Blogger.