Home
இந்திய அறிவியல் அறிஞர்கள்
ஜனவரி-28. இந்திய அணுக்கரு உலையின் தந்தை,சிரிக்கும் புத்தர்' (Operation Smiling Budhdha) என்ற முதல் அமைதியான ஹைட்ரஜன் குண்டு வெடிப்பு ஆய்வினை நடத்தியவர்- டாக்டர் இராஜா இராமண்ணா (Raja Ramanna) பிறந்த தினம்.
ஜனவரி-28. இந்திய அணுக்கரு உலையின் தந்தை,சிரிக்கும் புத்தர்' (Operation Smiling Budhdha) என்ற முதல் அமைதியான ஹைட்ரஜன் குண்டு வெடிப்பு ஆய்வினை நடத்தியவர்- டாக்டர் இராஜா இராமண்ணா (Raja Ramanna) பிறந்த தினம்.
08:42
Read
இன்று பிறந்த நாள்:- ஜனவரி-28.
இந்திய அணுக்கரு உலையின் தந்தை,சிரிக்கும் புத்தர்' (Operation Smiling Budhdha) என்ற முதல் அமைதியான ஹைட்ரஜன் குண்டு வெடிப்பு ஆய்வினை நடத்தியவர்-
டாக்டர் இராஜா இராமண்ணா
(Raja Ramanna) பிறந்த தினம்.
பிறப்பு:-
1925 ஆம் ஆண்டு, ஜனவரி-28 ஆம் தேதி கர்நாடகா மாநிலத்தில் தும்கூரில் பிறந்தார். இவரது தொடக்கக் கல்வி மைசூரிலும்,பிறகு பெங்களூருக்குக் பிஷப் காட்டன் பள்ளியில் சேர்ந்து கல்வியைத் தொடர்ந்தார். பெங்களூருவில் உள்ள புனித ஜோசப் கல்லூரியில் இன்டர் மீடியட் படிப்பை முடித்தார். பின்னர் சென்னையில் உள்ள தாம்பரம் கிறித்துவக் கல்லூரியில் மேற்படிப்பிற்காகச் சேர்ந்தார். அங்கு இயற்பியல் இளநிலை அறிவியல் பட்டம் பெற்றார். விஞ்ஞானப் பட்டம் பெற்ற பின்,டாடா கல்வி உதவித் தொகை பெற்று இங்கிலாந்து சென்று லண்டனிலுள்ள அரசர் கல்லூரியில் சேர்ந்து ஆய்வுகளை மேற்கொண்டார். அணுக்கரு இயற்பியல்(Nuclear Physics),அணுவுலை இயற்பியல் [Reactor Physics], வடிவமைப்பு, மேற்கத்திய இசை, வேதாந்தம் ஆகியவற்றைச் சிறப்புப் பாடங்களாகப் பயின்றார். 1948 இல் முனைவர் பட்டத்தையும் பெற்றார்.
பணிகள்:-
1949, டிசம்பர் 1 அன்று முதல்
டாடா பயிற்சி நிறுவனத்தில் (TIFR-Tata Institute of Fundamental Research) சேர்ந்து பணியாற்றினார்.
ஆராய்ச்சிகள்:-
1947 ஆம் ஆண்டு இந்திய அணுசக்தி ஆராய்ச்சித் துறையை ஏற்படுத்தினார். 1956 ஆம் ஆண்டு ஆகஸ் 4 ஆம் நாள் முதல் அணுக்கரு உலையான 'அப்சரா' இக்குழுவினரால் உருவாக்கப்பட்டது. இதில் நியூட்ரான் பற்றிய ஆய்வுகளை இராமண்ணாவும், கோட்பாட்டு இயற்பியலில் கே. எஸ். சிங்வியும், மின்னணுத் துறையில் கருவிகள் கண்காணிப்பு, கட்டுப்பாட்டு முறைகள் ஆகியவற்றில் ஏ. எஸ். ராவும் பங்களித்தனர்.
மேலும் இவர் நியூட்ரான் மூலத்தைப் பயன்படுத்தி நீர் மற்றும் பெரிலியம் ஆக்சைடில் அதன் வேகத்தை மட்டுப்படுத்தி நியூட்ரான் விரவலைத் திர்மாணித்தார். நியூட்ரான் வெப்பமேற்றலை நவீன முறைகளில் பல்வேறு ஆய்வுகள் மூலம் மேற்கொண்டார். அவ்வாறு செயல்படும்போது உருவாகும் நியூட்ரான் நிறமாலை பற்றியும் ஆய்வுகள் மேற்கொண்டார். இதில் கிடைத்த வெப்ப நியூட்ரான்கள் கற்றை அடிப்படை ஆய்வுகளுக்கு உதவியது. யுரேனியம்-235 இல் அணுக்கருப்பிளவினால் உருவாகும் துணைக்கதிர்வீச்சுகளைப் பற்ரிய ஆய்வுகளை மேற்கொண்டார். அவற்றின் ஆற்றல் மற்றும் கோணங்கள் ஆகியவற்றை அளந்தார். இந்த அளவீடுகள், இக்கதிர்கள். நியூட்ரான்களின் வெளிப்பாடு, பிளவுத்துகள்களின் சராசரி சுழற்சி போன்றாவற்றைப் பற்றிப் பல தகவல்களை அறிய உதவின. வெப்ப மற்றும் வேக நியூட்ரான்களினால் தூண்டப்பட்ட அணுக்கருப் பிளவில் வெளிவரும் மின்னேற்றம் குறித்தும் துகள்கள் அவற்றின் வெளியேற்றம் பற்றிய முக்கியத் தகவல்களை அறிய உதவின. அமைதியான முறையில் குறிமொழிப் பெயரில் 'சிரிக்கும் புத்தர் ' (Code Name-Smiling Buddha)என்னும் முதல் அணுகுண்டு, ரகசிய அணு ஆயுதத் திட்டம் அவரது நேரடிக் கண்காணிப்பில் உருவானது அதை சோதனையை நடத்தவேண்டிய இடத்தை தேர்வு செய்யும் பணி இவருக்கு ஒப்படைக்கப்பட்ட போது இவர் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள "பொக்ரான்' பகுதியை தேர்ந்தெடுத்தார்.
பிறகு, இந்திய அணுசக்தி துறையின் தலைவரானார். தமது அணு ஆராய்ச்சியை தொடர்ந்து கொண்டிருந்தார். 1973 ஆம் ஆண்டு முதன் முதலாக இந்திய அணு ஆராய்ச்சி நிறுவனம் அணு ஆயுதம் ஒன்றை உற்பத்தி செய்தது.
1974 ஆம் ஆண்டு அந்நாளைய பிரதமர் திருமதி இந்திராகாந்தியிடம் அணு ஆயுதங்களை பரிசோதிக்க அவரின் ஒப்புதலோடு மே மாதம் 18 ஆம் நாள் 1974 ஆம் ஆண்டு இந்தியாவின் முதல் அணுசக்தி சோதனை வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டது .
பதவிகள்:-
இந்திய பாதுகாப்பு மற்றும் வளர்ச்சித்துறையின் (Defence research and development organisation) (DRDO) தலைவரானார்.
இந்திய இராணுவ அமைச்சகத்தின் ஆலோசகராகவும் பணிபுரிந்தார்.
1984 ஆம் ஆண்டு சர்வதேச அணுசக்தி நிறுவனத்தின் (International Atomic Energy Agency) தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1990 ஆம் ஆண்டு அந்நாளைய பிரதமமந்திரி திரு வி. பி. சிங் அவர்களால் இராணுவ அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
1997 முதல் 2003 ஆம் ஆண்டு வரை ராஜ்யசபா உறுப்பினராக பணிபுரிந்தார்.
2000 ஆம் ஆண்டு பெங்களூருவில் உள்ள தேசிய உயர்கல்வி கழகத்தின் (National Institute of Advanced Studies) முதல் தலைவராக நியமிக்கப்பட்டார்.
நூல்கள்:-
1991 இல்
"புனித பயண ஆண்டுகள்' (Years of pilgrimage) என்ற சுயசரிதை நூல் ஆகும்.
1993 ஆம் ஆண்டு மேற்கத்திய இசை குறித்த "The structure of music in Raga and Western Systems" என்ற நூலையும் எழுதியுள்ளார்.
விருதுகள்:-
1963 ஆம் ஆண்டு "சாந்தி ஸ்வரூப் பட்னாகர்' விருது வழங்கப்பட்டது. இந்திய அரசு இவருக்கு 1968 ஆம் ஆண்டு "பத்மஸ்ரீ' விருதையும்,
1973 ஆம் ஆண்டு "பத்ம பூஷண்' விருதையும், 1975 ஆம் ஆண்டு "பத்ம விபூஷண்' விருதையும் வழங்கி சிறப்பித்தது.
மறைவு:-
2004 ஆம் ஆண்டு, செப்டம்பர்- 24 ஆம் நாள் மும்பையில் மாரடைப்பால் காலமானார்.
ஜனவரி-28. இந்திய அணுக்கரு உலையின் தந்தை,சிரிக்கும் புத்தர்' (Operation Smiling Budhdha) என்ற முதல் அமைதியான ஹைட்ரஜன் குண்டு வெடிப்பு ஆய்வினை நடத்தியவர்- டாக்டர் இராஜா இராமண்ணா (Raja Ramanna) பிறந்த தினம்.
Reviewed by JAYASEELAN.K
on
08:42
Rating: 5
Reviewed by JAYASEELAN.K
on
08:42
Rating: 5
Tags :
இந்திய அறிவியல் அறிஞர்கள்


No comments: