ஆன்டிபயாடிக்ஸ் (Antibiotics) அடங்கியுள்ள அடர் தீவனமும், கறவைக்கு முன் போடப்படும் ஆக்ஸிடோசின் ஊசியும், சிகிச்சை நாட்களில் செலுத்தப்படும் மருந்துகளும் பாலில் என்ன விதமான மாற்றத்தை ஏற்படுத்துகிறது?
ஆன்டிபயாடிக்ஸ் (Antibiotics) அடங்கியுள்ள அடர் தீவனமும், கறவைக்கு முன் போடப்படும் ஆக்ஸிடோசின் ஊசியும், சிகிச்சை நாட்களில் செலுத்தப்படும் மருந்துகளும் பாலில் என்ன விதமான மாற்றத்தை ஏற்படுத்துகிறது?
பசுவின் வளர்ச்சி, நோய் எதிர்ப்பாற்றல், இன்னும் வேறு சில காரணங்களுக்காக ஆன்டிபயாடிக்ஸ் உள்ளிட்ட தீவன சேர்க்கைச் சேர்மங்களை (Feed Additive Compounds) அடர் தீவனங்களில் (Concentrate Feed) ‘அளவுக்கதிகமாக’ தொடர்ந்து சேர்க்கும்போதும், ஒட்டக் கறவைக்காக (Milking to Evacuate Residual Milk) ஆக்ஸிடோசின் போன்ற ஹார்மோன்களை (Hormones) தொடர்ச்சியாக பயன்படுத்தும் போதும், நோயுற்ற நேரத்தில் சிகிச்சைக்காக நீண்ட நாட்கள் மருந்துகளை (Medicinal Compounds) ஊசி மூலம் செலுத்தும் போதும் அவையனைத்தும் தத்தமது பணிகளை முடித்தவுடன் வளர்ச்சிதை மாற்றத்திற்குப் பின் பசுவின் உடலிலிருந்து இரண்டாம் நிலை வளர்ச்சிதை மாற்ற சேர்மங்களாக (Secondary Metabolic Compounds) மாற்றப்பட்டு கழிவுப் பொருள்களாக பாலிலும், சிறுநீரிலும் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக (More than the Permissible Level) வெளியேற்றப் படுகிறது. இன்னும் சரியாக சொல்லப் போனால் அந்தக் கழிவுப் பொருள்களில் சிறிதளவேனும் விலங்குகளின் கொழுப்பிலும், எழும்பு மஞ்ஞையிலும், தசையிலும், இன்னும் வேறு சில இடங்களிலும் கூட நிரந்தரமாக படிந்து விட வாய்ப்புள்ளது. இந்த சூழ்நிலையில் தான் நுகர்வோர்கள் இயல்பை விட அதிகமான இரண்டாம் நிலை வளர்ச்சிதை மாற்ற சேர்மங்கள் அடங்கிய பாலையும், இறைச்சியையும் உட்கொள்ள வேண்டியிருக்கிறது. நம்மில் பெரும்பாலானோர் ‘இந்த’ பாலையும், இறைச்சியையும் தான் ஆபத்து நிறைந்ததாக கருதுகிறார்கள். அவர்களின் பயம் நியாயமானதே! அவற்றை புறம்தள்ள முடியாது!

No comments: