Breaking

உலகப் புகழ்பெற்ற ‘ஆலிஸ் இன் ஒண்டர்லேண்ட்’ குழந்தைகள் நாவலைப் படைத்த படைப்பாளியும், கணிதவியலாளரும், கவிஞருமான,லூயிஸ் கரோல் நினைவு தினம்.

உலகப் புகழ்பெற்ற ‘ஆலிஸ் இன் ஒண்டர்லேண்ட்’ குழந்தைகள் நாவலைப் படைத்த படைப்பாளியும், கணிதவியலாளரும், கவிஞருமான,லூயிஸ் கரோல்  நினைவு தினம்.

🎺 *இங்கிலாந்தின் செஷயர் பகுதியில் உள்ள டாரஸ்பரி கிராமத்தில் (1832) பிறந்தார். இயற்பெயர் சார்லஸ் லுட்விக் டாட்ஸன்.*

🎺 *தந்தை மத போதகர். வீட்டிலேயே தனது 11 குழந்தைகளுக்கும் ஆரம்பக் கல்வி கற்பித்தார்.*

🎺 *புதுப்புது விளையாட்டுகளை உருவாக்கி சகோதர, சகோதரிகளை உற்சாகப்படுத்துவது சிறுவன் லுட்விக்கின் வழக்கம்.*

🎺 *சிறு வயதிலேயே கையெழுத்துப் பத்திரிகைகளில் கதை, கவிதைகள் எழுதிவந்தார். கல்வி உதவித்தொகை பெற்று ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தின் கிறைஸ்ட் சர்ச் கல்லூரியில் பட்டம் பெற்றார். அங்கேயே கணித விரிவுரையாளராகப் பணியாற்றினார்.*

🎺  *நகைச்சுவைக் கதைகள், கணிதத்தில் ஆய்வுக் கட்டுரைகள் எழுதினார்.* ‘லூயிஸ் கரோல்’ *என்று பெயர் சூட்டிக்கொண்டார்.*

🎺 *குழந்தைகள் என்றால் இவருக்கு மிகவும் பிரியம். பெரியவர்களிடமும் பொது இடங்களிலும் சற்று திக்கிப் பேசும் இவர் குழந்தைகளிடம் மிக இயல்பாக, சரளமாகப் பேசுவார். அக்கம்பக்கத்தில் உள்ள குழந்தைகளுக்கு ஏராளமான கற்பனைக் கதைகளைச் சொல்லிவந்தார்.*

🎺 *தேவாலயத்தில் பணியாற்றிவந்தபோது, ஒருமுறை ஆலிஸ் லிடல் என்ற 4 வயது குழந்தையை சந்தித்தார். அப்போதிருந்து அது இவரது செல்லக் குழந்தையாகிவிட்டது. அவளையும் அவளது 2 சகோதரி களையும் குட்டிப் படகில் வைத்து வெகு நேரம் ஆற்றில் பயணம் செய்வார். சளைக்காமல் வெகுநேரம் அவர்களுக்கு கதை சொல்வார். சில நேரங்களில், படம் வரைந்துகொண்டே கதை சொல்வார்.*

🎺 ஆலிஸ் *என்ற கதாபாத்திரம் வருவதுபோல கதை எழுதித் தருமாறு 1862-ல் இவரிடம் கேட்டது குழந்தை.* ‘ஆலிஸ் அட்வெஞ்சர்ஸ் அண்டர்கிரவுண்ட்’ *என்ற கதையை இவர் எழுதிக் கொடுத்தார். இதைப் பார்த்த பிரபல நாவலாசிரியர் ஒருவர், புத்தகமாக வெளியிடலாம் என்று ஆலோசனை கூறினார்.*

🎺 *சில மாற்றங்களுடன் 1865-ல்* ‘ஆலிஸ் அட்வெஞ்சர்ஸ் இன் ஒண்டர்லேண்ட்’ *என்ற பெயரில் இது புத்தகமாக வெளிவந்தது. 1932-ல் இவரது பிறந்தநாள் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டபோது, குழந்தைகளுக்கான நூல்களில் உலக அளவில் அதிக வரவேற்பை பெற்ற நூல்களில் ஒன்று என்ற அந்தஸ்தை இந்த நூல் பெற்றது.*

🎺 *இதன் வெற்றியைத் தொடர்ந்து,* ‘த்ரூ தி லுக்கிங் கிளாஸ் அண்ட் வாட் ஆலிஸ் ஃபவுண்ட் தேர்’ *என்ற 2-வது பகுதியை எழுதினார். இவை இங்கிலாந்தின் மிகவும் பிரபலமான குழந்தைகள் நூல்களாகக் கொண்டாடப்பட்டன.*

 🎺 ‘தி ஹன்டிங் ஆஃப் தி ஸ்னார்க்’, ‘சில்வி அண்ட் ப்ரூனோ’ *உட்பட பல கதைகளை எழுதினார். பல கவிதைகளையும் எழுதியுள்ளார். சிறந்த புகைப்படக் கலைஞராகவும் விளங்கினார்.*

🎺 கணிதப் பேராசிரியர், கவிஞர், புகைப்படக் கலைஞர் *என்று பலவிதமாக அறியப்பட்டாலும்* ‘குழந்தைகளுக்கான எழுத்தாளர்’ *என்று கூறப்படுவதையே அதிகம் விரும்பியவர். இவரது நூல்கள், கவிதைகள் மட்டுமல்லாமல், இவரது புகைப்படங்களிலும் குழந்தைகளே அதிகம் இடம்பெற்றன.*

🎺 *குழந்தைகள் இலக்கியத்தின் சிறந்த படைப்பாளியாகப் போற்றப்படும் லூயிஸ் கரோல் 1898 ஜனவரி 14-ம் தேதி 66-வது வயதில் மறைந்தார்.*
🎺🎺🎺🎺🎺🎺🎺🎺🎺

🎺🎺🎺🎺🎺🎺🎺🎺🎺

No comments:

Powered by Blogger.