குக்கரில் சாப்பிடுவது உடல் நலத்துக்கு கேடு விளைவிப்பதை பற்றி அறிந்து கொள்வோம்
முந்தைய காலங்களில் சாதத்தை மண்பானை அல்லது வேறு ஒரு பானையில் தான் சமைப்பார்கள். மேலும் அந்த சாதத்தை வடிகட்ட வேண்டியிருக்கும்.
ஆனால் தற்போது குக்கர் தான் பெரும்பாலான வீடுகளில் சாதத்தை சமைப்பதற்கு பயன்படுகிறது.இந்த குக்கரில் சமைக்கும் சாதத்தால் நமக்கு ஒரு சில நோய்களும் உண்டாகிறதாம்.அந்த பாதிப்புகள் என்னவென்று தற்போது பார்க்கலாம்.
அதாவது வடித்து சமைக்கும் சாதத்தில் 30 முதல் 40 சதவீதம் மாவுச்சத்து குறையும், ரத்த சர்க்கரையின் அளவை அது உடனடியாக கூட்டாது என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
ஆனால் குக்கரில் சமைக்கும்போது அந்த சத்துக்கள் சாப்பாட்டில் முழுமையாக இருக்கும்.
மேலும் குக்கரில் சமைக்கும் சாப்பாட்டில் கஞ்சி நீக்கப்படது இதில் கலோரி குளுக்கோஸ் அளவு இருப்பதால் ரத்தத்தில் சர்க்கரை அளவு கூடுவதற்கும் வாய்ப்புகள் உண்டுமேலும் சிலருக்கு புதிதாக சர்க்கரை நோயை உண்டு பண்ணும் அபாயமும் உள்ளது.
மேலும் நார்சத்து நிறைந்த கஞ்சி நீக்கப்பட்ட சாதமே சர்க்கரை நோயாளிகளின் ரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும்.
அது மட்டுமல்லாமல் அரிசி வேக எவ்வளவு நேரம் எடுத்து கொள்கிறதோ அந்த அளவுக்கு சாப்பிட உடலுக்கு நல்லது.

No comments: