Breaking

விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் 'ககன்யான்' திட்டத்தில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி யாளர்களுக்கு உணவு பட்டியல் ..



விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் 'ககன்யான்' திட்டத்தில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி யாளர்களுக்கு
உணவு பட்டியல் ..

விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் 'ககன்யான்' திட்டத்தை இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகமான இஸ்ரோ செயல்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக இந்திய விமானப்படையில் இருந்து 4 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கான பயிற்சி விரைவில் ரஷியாவில் தொடங்க இருப்பதாகவும் அறிவித்துள்ளது.

இதற்கிடையே விண்வெளிக்கு அனுப்பப்படும் வீரர்களுக்கான உணவு பட்டியல் தயாரிக்கப்பட்டு உள்ளது. இதில் அல்வா, சிக்கன் பிரியாணி உள்பட 30 வகை உணவுகள் இடம் பெற்றுள்ளன. பழச்சாறு, எரிசக்தி பானங்கள், வழக்கமான இந்திய உணவுகள் வகைகள் உள்ளன. உணவு பட்டியலில் சப்பாத்தி, சிக்கன் பிரியாணி, சுஜி அல்வா, சிக்கன் கறி, பாதாம், கீரை, பன்னீர் உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன.

No comments:

Powered by Blogger.