Breaking

தமிழக அரசின் இருசக்கர வாகன திட்டத்தில், புதிய விதிமுறைகளின்படி, 45 வயது வரை பெண்களுக்கு வாய்ப்பு... .




தமிழக அரசின் இருசக்கர வாகன திட்டத்தில், விதிமுறைகள் மாற்றப்பட்டுள்ளன. புதிய விதிமுறைகளின்படி, 45 வயது வரையுள்ள பெண்களும் விண்ணப்பிக்கலாம். குறைந்தபட்ச கல்வித்தகுதியும் ரத்து செய்யப்பட்டுள்ளது.அம்மா இருசக்கர வாகன திட்டத்தின் கீழ்,கோவை மாவட்டத்தில், 2017-18, 2018-19 ஆகிய இரண்டு ஆண்டுகளில், 9,898 பேர் மானியம் பெற்றுள்ளனர்.2019-20க்கான பணிகள் நடந்து வருகின்றன.இத்திட்டத்தின் கீழ் பயன்பெற, '40 வயதுக்குள் இருக்க வேண்டும், குறைந்தபட்சம், 8ம் வகுப்பு கல்வித்தகுதி பெற்று இருக்க வேண்டும்' என்பன உள்ளிட்ட விதிமுறைகள் இருந்தன. அவ்விதிமுறையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.அதன்படி,வயது உச்சவரம்பு, 45 ஆக அதிகரிக்கப்பட்டதுடன், 8ம் வகுப்பு படித்திருக்க வேண்டும் என்ற, குறைந்தபட்ச கல்வித்தகுதியும், ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதனால், அதிக பெண்கள் விண்ணப்பிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து, மாவட்ட மகளிர் திட்ட அலுவலர் செல்வராசு கூறியதாவது:கோவை மாவட்டத்துக்கு ஆண்டுக்கு, 4,949 பேர் என்ற வகையில் இரண்டு ஆண்டுக்கான இலக்கை முழுமையாக முடித்துள்ளோம். 2019-20ம் ஆண்டுக்கான பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது; இதுவரை, 3,000 பேருக்கு விண்ணப்பம் வழங்கப்பட்டுள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளில், இத்திட்டத்தின் கீழ், 25 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.ஓட்டுனர் உரிமம் முக்கியம்விண்ணப்பித்தவர்களில், 30 முதல் 40 சதவீதம் பேர் லைசென்ஸ் இல்லாமல் உள்ளனர். எல்.எல்.ஆர்., பெற்றுக்கொண்டால்,வண்டி எடுக்க 'ஆர்டர்' கொடுத்து விடுவோம்; ஆனால், லைசென்ஸ் பெற்ற பின்னரே, மானியம் வழங்கப்படும்.இட ஒதுக்கீடும் உண்டுஎஸ்.சி., எஸ்.டி., மாற்றுத்திறனாளிகளுக்கு, இத்திட்டத்தின் கீழ் இட ஒதுக்கீடும் பின்பற்றப்படுகிறது.புதிய விதிமுறைகளின் படி, அரசு துறைகளில் தொகுப்பூதியம், அவுட்சோர்சிங், அங்கன்வாடி பணியாளர்கள் உட்பட, சிறப்பு காலமுறை ஊதியத்தின் கீழ் வரும் பெண்கள், ஆண்டுக்கு, 2.50 லட்சம் ரூபாய்க்கு மிகாமல் ஊதியம் பெற்றால் விண்ணப்பிக்கலாம்.இவ்வாறு, அவர் கூறினார்.

No comments:

Powered by Blogger.