Breaking

நம் வீட்டில் பணப்பெட்டியை எந்த இடத்தில் வைத்து பணத்தை எடுத்து செலவு, வரவு செய்ய வேண்டும்?



நம் வீட்டில் பணப்பெட்டியை எந்த இடத்தில் வைத்து பணத்தை எடுத்து செலவு, வரவு செய்ய வேண்டும்? 
வாஸ்து -சரியாக இருந்தால் பணம், பைசா, துட்டு எல்லாமே உங்களை வந்து சேரும் ...!!
வாஸ்துபடி நம் வீட்டில் பணப்பெட்டியை எந்த இடத்தில் வைத்து பணத்தை எடுத்து செலவு, வரவு செய்ய வேண்டும்? எங்கள் வீட்டில் இரும்பு பெட்டி உள்ளது அதில் வைக்கலாமா? போன்ற பல கேள்விகளுக்கு தெளிவான விளக்கம் இதோ!
தேக்கு மரப்பெட்டியில் வைத்தால்?
வீட்டின் தென்மேற்கு பகுதியில் உள்ள அறையில் தான் நாம் பணப்பெட்டியை வைக்க வேண்டும். 'பணத்தை எப்போதும் நல்ல மரப்பெட்டியில் தான் வைத்து எடுக்க வேண்டும். எதையும் தேக்கி வைத்துக்கொள்ளும் என்பதால்தான் அதற்கு 'தேக்கு மரம்" என்று பெயர் வந்தது. அதன் உறுதியான நிலைத்தத்தன்மை நம்மிடம் பணத்தை தங்கிட அப்படியே தங்க செய்யும்." .

வீட்டில் செய்ய வேண்டிய சில விஷயங்கள்?
வாஸ்துபடி பார்த்தால் பணம் எப்போதும் உங்களின் கையில் எப்போதுமே தவழ்ந்து கொண்டிருக்க வேண்டுமென்றால் வீட்டின் வடக்குச்சுவர் ஜன்னலுடன் இருக்க வேண்டும்.
கதவு என்பது கண்டிப்பாக மூடப்பட்டிருக்க வேண்டும். ஜன்னல் எப்போதும் திறந்தே தான் இருக்க வேண்டும்.
முக்கியமாக காற்றோட்டமும், சூரியவெளிச்சமும் வாஸ்து சாஸ்திரத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன. அதனால், ஜன்னல்கள் திறந்திருப்பது மிகவும் நல்லது.

No comments:

Powered by Blogger.