Breaking

10,11 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதுபவர்களா நீங்க..! தேர்வு நேரம் பற்றி தெரிந்து கொள்ளுங்க..!






*•┈🌿✍💱10,11 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதுபவர்களா நீங்க..! தேர்வு நேரம் பற்றி தெரிந்து கொள்ளுங்க..!


சென்னை : 10,11 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தேர்வு நேரம் பற்றி தெளிவாக விளக்கம் அளிக்க வேண்டும் என தலைமையாசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது :-10, 11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடைபெற இருக்கிறது.



 இந்த முறை பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை ஏற்று, இரண்டரை மணி நேரத்தில் இருந்து 3 மணி நேரமாக தேர்வு நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வினாத்தாளை வாசித்து பார்க்க காலை 10 முதல் 10.10 மணி வரை 10 நிமிடங்கள் ஒதுக்கப்படும். 

தேர்வு எழுதுபவர்களின் விபரங்களை சரிபார்க்க தேர்வறை கண்காணிப்பாளர்களுக்கு 10.10 முதல் ஐந்து நிமிடங்கள் ஒதுக்கப்படும். அதன் பின் 10.15 முதல் பகல் 1.15 மணி வரை 3 மணி நேரம் தேர்வு எழுதுவதற்கான நேரம் ஒதுக்கப்படும். 

இந்த தகவலை அனைத்து மாணவ – மாணவியருக்கும் ஆசிரியர்கள் தெளிவாக விளக்க வேண்டும், இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.



┈┉┅━•• 🌿👨🏻‍💻🌷👩🏻‍💻 🌿••━┅┉┈

No comments:

Powered by Blogger.