உலகில் சிறந்த பல்கலைக்கழகங்கள் பட்டியலில், 11 இந்திய கல்வி நிறுவனங்கள்
உலகில் சிறந்த பல்கலைக்கழகங்கள் பட்டியலில், 11 இந்திய கல்வி நிறுவனங்கள் பற்றி தெரிந்து கொள்வோம்..
பிரிட்டனிலிருந்து வெளியாகும் ‘டைம்ஸ் ஹயர் எஜுகேஷன்‘ (டிஎச்இ) இதழ், இந்த ஆண்டுக்கான வளரும் பொருளாதாரம் கொண்ட 47 நாடுகளைச் சேர்ந்த 233 பல்கலைக்கழகங்களை பட்டியலிட்டுள்ளது. அதில், இந்தியாவைச் சேர்ந்த 56 பல்கலைக்கழகங்கள் இடம்பெற்றுள்ளன.
பட்டியலில் முதல் 100 பல்கலைக்கழகங்களில் சீனா தனது 30 கல்வி நிறுவனங்களுடன் முதலிடத்திலும், அதற்கு அடுத்தபடியாக 11 இந்திய கல்வி நிறுவனங்கள் இடம் பிடித்துள்ளன.
இந்திய அறிவியல் நிறுவனம் (ஐஐஎஸ்சி) 16-ம் இடத்திலும்,
ஐஐடி கோரக்பூர் (32), டெல்லி ஐஐடி (38),
சென்னை ஐஐடி (63) இடத்தையும் பிடித்துள்ளன.


No comments: