Home
FEBRUARY
பிப்ரவரி-23 சிறந்த கணித வல்லுநர், வானியலாளர்- ஜோஹன் கார்ல் ஃபிரெட்ரிக் காஸ் (Johann Carl Friedrich Gauss) மறைந்த தினம்.
பிப்ரவரி-23 சிறந்த கணித வல்லுநர், வானியலாளர்- ஜோஹன் கார்ல் ஃபிரெட்ரிக் காஸ் (Johann Carl Friedrich Gauss) மறைந்த தினம்.
06:15
Read
இன்று மறைந்த தினம்:- பிப்ரவரி-23
சிறந்த கணித வல்லுநர், வானியலாளர்- ஜோஹன் கார்ல் ஃபிரெட்ரிக் காஸ் (Johann Carl Friedrich Gauss) மறைந்த தினம்.
பிறப்பு:-
ஜெர்மனியில் பிரன்ஸ்விக் நகரில் ஏப்ரல்-30, 1777 இல் பிறந்தார்.
7 வயது இருக்கும்போது, கடினமான கணக்கை போட்டு ஆசிரியரை அசரவைத்தார்.
கணித நூல்களில் உள்ள பிழைகளைக் கண்டறியும் அளவுக்கு 12 வயதிலேயே திறன் பெற்றிருந்தார்.
இவரது கணித ஆற்றல் பற்றி கேள்விப்பட்ட ஃபெர்டினான்ட் பிரபு இவருக்கு உதவித்தொகை வழங்கி மேற்கொண்டு படிக்க உதவியதால், கோட்டிங்கன் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார்.
பகா எண்களை ஆராய்ந்து அதில் ஏராளமான சமன்பாடுகளைக் கண்டறிந்து சோதித்தார்.
குறுகிய காலத்துக்குள் ஜெர்மனியின் முக்கிய கணிதவியலாளராக புகழ் பெற்றார்.
1799-ல் தனது முனைவர் பட்ட ஆய்வுக் கட்டுரையில் அல்ஜீப்ராவின் அடிப்படைத் தேற்றத்தை நிரூபித்தார்.
கணிதத்தின் அனைத்து களங்களிலும் பங்களிப்புகளை வழங்கியிருந்தாலும் ‘எண்கோட்பாடு’
தான் இவருக்கு மிகவும் பிடித்தது.
ஆய்வுகள்:-
கோட்பாட்டு வானியலிலும், சிறு கிரகங்கள் இருக்கும் இடத்தைக் கணக்கிட்டும் கூறினார்.
பூமியின் காந்தவியல் பண்புகள் குறித்தும் ஆராய்ந்தார். இந்த ஆராய்ச்சிகளின்போது "காந்தமானியைக்" கண்டறிந்தார்.
வானியல், புவியியல், மின்காந்தவியல், இயக்கவியல், ஒளியியல் தொடர்பான பல்வேறு கருவிகள் கண்டறிந்தார்.
நூல்:-
1801- ‘டிஸ்கொசிஷனஸ் அரித்மேடிசி’ என்ற நூலை வெளியிட் டார். இந்த நூலானது கணித நூல்களிலேயே தலைசிறந்ததாகக் கருதப்படுகிறது.
எண் கோட்பாடு, பகுவியல், வகையீட்டு வடிவியலில் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு, பல நூல்களை எழுதினார்.
300-க்கும் அதிகமான கட்டுரைகளை இலத்தீன் மொழியில் எழுதியுள்ளார்.
பதவிகள்:-
1807-ல் கோட்டிங்கன் வானியல் கண்காணிப்பு மையத்தின் இயக்குநராகவும், பிறகு பேராசிரியராகவும் நியமிக்கப்பட்டார்.
விருதுகள்:-
பிரான்ஸ், டென்மார்க், இங்கிலாந்து நாடுகள் அறிவியல், கணித அமைப்புகள், பல்கலைக்கழகங்கள் பரிசுகள் வழங்கின.
1810- lalande பரிசு,
1838-copley பதக்கம்.
சிறப்புகள்:-
சர்வதேச கணித ஒன்றியம், ஜெர்மன் கணித சங்கம் ஆகியவை 2006-ல் இவரது பெயரில் விருது ஒன்றை நிறுவி ஆண்டுதோறும் கணித சாதனையாளர்களுக்கு வழங்கி வருகிறது.
மறைவு:-
கணிதம், இயற்பியல், வானியல், புவியியல் உள்ளிட்ட களங்களில் சிறந்த பங்களிப்பை வழங்கிய ஜோஹன் கார்ல் ஃபிரெட்ரிக் காஸ் 78-வது வயதில் பிப்ரவரி-23,1855 மறைந்தார்.
பிப்ரவரி-23 சிறந்த கணித வல்லுநர், வானியலாளர்- ஜோஹன் கார்ல் ஃபிரெட்ரிக் காஸ் (Johann Carl Friedrich Gauss) மறைந்த தினம்.
Reviewed by JAYASEELAN.K
on
06:15
Rating: 5
Reviewed by JAYASEELAN.K
on
06:15
Rating: 5
Tags :
FEBRUARY


No comments: