Breaking

பிப்ரவரி-24 கணிதவியலாளர், மின்பொறியாளர், தகவல் தொடர்பு கோட்பாட்டாளர்- கிளெவுட் எல்வுட் ஷெனான் (Claude Elwood Shannon) மறைந்த தினம்.





இன்று மறைந்த நாள்:- பிப்ரவரி-24

கணிதவியலாளர், மின்பொறியாளர், தகவல் தொடர்பு கோட்பாட்டாளர்- கிளெவுட் எல்வுட் ஷெனான் (Claude Elwood Shannon) மறைந்த தினம்.

பிறப்பு:-

மிச்சிகன் மாகாணத்தில் கேலார்ட் என்ற இடத்தில் பிறந்தவர் ஏப்ரல்-30,1916 இல் பிறந்தார். 

 அரசுப் பள்ளியில் ஆரம்பக்கல்வி பயின்றார். அறிவியல், கணிதம் மற்றும் இயந்திரங்கள், பிற தொழில்நுட்பங்களில் ஆர்வம் காட்டினார்.

இளம் வயதில் ஓய்வு நேரங்களில் மாதிரி விமானங்கள், ரேடியோ-கன்ட்ரோட் மாதிரி படகு, ஒயர் மூலம் டிரான்ஸ்மிட் செய்யும் டெலகிராஃப் அமைப்பு உள்ளிட்ட பல கருவிகளைத் தயாரித்து வந்தார். 

பள்ளிப் படிப்புக்குப் பின் மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் எலக்ட்ரிகல் என்ஜினியரிங் மற்றும் கணிதம் பயின்று பட்டம் பெற்றார்.

எலக்ட்ரிகல் என்ஜினீயரிங்கில் முதுகலைப்பட்டமும் பெற்றார். 

கண்டுபிடிப்புகள்:-


1936-ல்  மாசாசூசெட்ஸ்.ஐ.டி. எலக்ட்ரிகல் என்ஜினீயரிங் துறை பேராசிரியர் உருவாக்கியிருந்த டிஃபரென்ஷியல் அனலைசர் கம்ப்யூட்டிங் சாதனத்தை மேம்படுத்தி, அனலைசரில் அட்ஹாக் சர்க்யூட்டின் சிக்கல்களுக்குப் பூலியன் அல்ஜீப்ரா கோட்பாடுகளைப் பயன்படுத்தி இதன் சர்க்யூட்களை மாற்றியமைத்து, இதற்குத் தீர்வு கண்டார். 

டிஜிட்டல் சர்க்யூட் வடிவமைப்புக்கான அடித்தளமாக இவரது கண்டுபிடிப்பு அமைந்தது.

இவரது கண்டுபிடிப்புகள், கம்ப்யூட்டரின் பல்வேறு தவறுகள், புதிர்கள், குறியீட்டுப் பிரச்சினைகளுக்குத் தீர்வு கண்டறிந்தன. 

இரண்டாம் உலகப்போர் சமயத்தில் இவரும் இவரது அணியினரும் எதிரிப்படையின் விமானங்கள் மற்றும் ஏவுகணைகளின் திசையைக் கண்டறியும் எதிர்ப்பு விமான ஏவுகணைக் கட்டுப்பாட்டு அமைப்பின் (anti aircraft missile control systems) வடிவமைப்பை மேம்படுத்தினர்.

இதன் மூலம் எதிர்ப்பு விமான ஏவுகணைக் கட்டுப்பாட்டு அமைப்பில் குறிப்பிடத்தக்கப் பங்களிப்பை வழங்கினார்

நூல்கள்:-

1940-ல் எம்ஐடி.யில் ‘ஆன் அல்ஜீப்ரா ஃபார் தியரிட்டிகல் ஜெனடிக்ஸ்’ என்ற தலைப்பில் ஆய்வுக்கட்டுரை எழுதி, முனைவர் பட்டம் பெற்றார். 

இவர் எழுதிய ‘ஏ சிம்பாலிக் அனாலிசஸ் ஆஃப் ரிலே அன்ட் ஸ்விட்சிங் சர்க்யூட்ஸ்’ என்ற ஆய்வுக் கட்டுரை தலைசிறந்த கட்டுரைகளுள் ஒன்றாகக் கருதப்படுகிறது.

1948-ல் ‘ஏ மேதமெடிக்கல் தியரி ஆஃப் கம்யூனிகேஷன்’ என்ற முக்கியத்துவம் வாய்ந்த கட்டுரையை வெளியிட்டார். இதில் தகவல் சிக்னலிங்கின் அடிப்படைக் கோட்பாடுகளை எழுதியிருந்தார்.

1948-ல் இவர் எழுதிய ‘ஏ ப்ளூபிரின்ட் ஆஃப் டிஜிட்டல் ஏஜ்’ என்ற கட்டுரை இன்றும்கூட வல்லுநர்களால் போற்றப்படுகிறது.


விருதுகள்:-

1955-ஸ்டுவர்ட் பாலண்டைன் பதக்கம்,

1966- தேசிய பதக்கம் அறிவியல் ,

1972- ஹார்வி பரிசு,

1972-கிளாட் ஈ ஷானன் விருது,


1978- ஹரோல்ட் pender விருது, போன்ற பல விருதுகளை பெற்றார்.


இறப்பு:-

‘தகவல் கோட்பாட்டின் தந்தை’ எனப் போற்றப்பட்ட இவர், பிப்ரவரி 24, 2001-ம் ஆண்டு, 84 வது வயதில் மறைந்தார்.

No comments:

Powered by Blogger.