Breaking

பிப்ரவரி-26. நெப்டியூன், ஜூபிடர் கோள்களின் நிலாக்களுக்கு டிரைடன், அமெல்த்தியா என்று முதன்முதலாகப் பெயரிட்ட பிரஞ்சு வானியலாளர் -நிகோலஸ் கமீல் ஃப்ளமேரியன் (Nicolas Camille Flammarion) பிறந்த தினம்.




இன்று பிறந்த நாள்:பிப்ரவரி-26.


நெப்டியூன், ஜூபிடர் கோள்களின் நிலாக்களுக்கு டிரைடன், அமெல்த்தியா என்று முதன்முதலாகப் பெயரிட்ட 
பிரஞ்சு வானியலாளர் -நிகோலஸ் கமீல் ஃப்ளமேரியன் (Nicolas Camille Flammarion) பிறந்த தினம்.

பிறப்பு:-

பிரான்ஸின் வால்டிமாஸ் பகுதியில் 
பிப்ரவரி-26, 1842 ஆம் ஆண்டு பிறந்தார்.
சிறு வயதிலேயே வானியலில் நாட்டமுடன் திகழ்ந்தார். பழைய தொலைநோக்கியை வாங்கி வந்து வானத்தை ஆராயத் தொடங்கிவிட்டார்.
ஆங்கிலம் மற்றும் பாரம்பரிய மொழிகள் கற்றார். கூடவே பாலிடெக்னிக் கல்வியும் பயின்றார். 16 வயதில் பாரீஸின் வானியல் ஆய்வுக்கூடத்தில் மாணவராகச் சேர்ந்தார். 

ஆய்வுகள்:-



வானிலை ஆராய்ச்சியில் மிகவும் ஆர்வம் கொண்டிருந்தவர், ஜுவிஸி-சுர்-ஆர்க் என்ற இடத்தில் வானிலை ஆய்வுக்கூடம் அமைத்து, ஆராய்ச்சிகளை மேற்கொண்டார்.
நெப்டியூன், ஜூபிடர் கோள்களின் நிலாக்களுக்கு ‘டிரைடன்’, ‘அமெல்த்தியா’ என்று முதன்முதலாகப் பெயரிட்டார்.
கிரகங்கள், நட்சத்திரங்கள், நிலவு உள்ளிட்டவை தொடர்பாக பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டார்.
வானியல் ஆராய்ச்சித் துறையை பெரிதும் பிரபலப்படுத்தியதில் இவரது பங்கு முக்கியமானது. வானியல், அறிவியல் புனைகதைகள், நாவல்கள், உளவியல் தொடர்பான நூல்கள், கட்டுரைகள் என ஏறக்குறைய 50 வெவ்வேறு விஷயங்கள் குறித்து எழுதியுள்ளார். அறிவியல் புனைகதை முன்னோடிகளில் ஒருவராகப் போற்றப்பட்டார்.
மேலும் நுண்ணுணர்வு (டெலிபதி) மூலம் சில அசாதாரணமான விஷயங்களை விளக்க முடியும் என்று கூறியுள்ளார்.

பணிகள்:-

 ‘காஸ்மோஸ்’ அறிவியல் இதழ் நிறுவனத்தில் சேர்ந்தார். பிறகு, இகோலோ டர்காட் கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியாற்றினார். பிரான்ஸ் வானியல் கழகத்தின் முதல் தலைவராகவும் செயல்பட்டார். 

நூல்கள்:-

மாணவராக இருக்கும்போதே, ‘தி காஸ்மோகானி ஆஃப் தி யுனிவர்ஸ்’ என்ற நூலை எழுதியிருந்தார்.
 ‘ஃப்ளமேரியன் என்கிரேவிங்’ என்ற முதல் கட்டுரை ‘எல் அட்மாஸ்பியர்’ இதழில் வெளியிட்டார். 
 இவரது ‘தி எண்ட் ஆஃப் தி வேர்ல்டு’ நாவல் திரைப்படமாகத் தயாரிக்கப்பட்டது.

மறைவு:-

ஏறக்குறைய வாழ்நாள் முழுவதும் எதுபற்றியாவது ஆராய்ச்சி செய்துகொண்டும், எழுதிக்கொண்டும் இருந்த இவர்,
ஜூன்-03, 1925 ஆம் ஆண்டு, பிரான்சில் மரணமடைந்தார்.

சிறப்புகள்:-

ஃப்ளமேரியன் நிலாக் குழிப்பள்ளம் மற்றும் பல குறுங்கோள்கள் இவரது பெயரால் குறிப்பிடப்படுகின்றன.

No comments:

Powered by Blogger.