40_வயதை_கடக்கும்_போது_நாம் பின்பற்ற_வேண்டிய_சில_எளிய வழிகள்…❗❗❓❓❓
40_வயதை_கடக்கும்_போது_நாம் பின்பற்ற_வேண்டிய_சில_எளிய வழிகள்…❗❗❓❓❓
👉 ஆம் மனித வாழ்வில் ஒவ்வொரு காலகட்டமும் ஒவ்வொரு வளர்ச்சி, ஒவ்வொரு பொறுப்பு,ஒவ்வொரு சவால் என்று விதவிதமாய் கடந்து தான் கரையேற வேண்டும்.
குறிப்பாய் 40 ஒரு சராசரி நவீன கால மனிதனின் வாழ்வில் மூன்றில் ஒரு பங்கு வாழ்க்கை முடிந்துபோயிருக்கும்.
தெளிவாய் சொன்னால் குடும்பம் பிள்ளைகள் கடன் நோய் என்று பல்வேறு நெருக்கடிகள் சூழ்ந்து அவனை ஒரு வழி செய்து விடும்.
👉 40 வயது என்பது ஒரு மைல்கல் இந்த வயதை தொடும் ஒவ்வொருவரும் நீரழிவு நோய் , இரத்த அழுத்தம் என எதுவும் இல்லாமல் கடந்துவிட்டால் அதுவே இன்றைய நவீன வாழ்க்கையின் ஆக பெரிய சாதனையாக கருதப்படுகிறது.ஆனால் அது தான் இன்று அரிதாகி போனது. ஆணோ பெண்ணோ நம் நாட்டில் பெரும்பான்மையினர் ஏதாவதொரு நோயுடனே நாற்பதுக்குள் அடி எடுத்து வைக்கின்றனர். அவர்கள் உடலின் மீதான காதல் குறைந்து போனதே அதற்கு காரணம்…
ஆனால் இதெல்லாம் உடலை பற்றி அக்கறை குறைந்த மனிதர்களுக்கு மட்டும் தான்.சரியான திட்டமிடுதலோடு தன் வாழ்வின் கடைசி கால் நூற்றாண்டை சரியாய் சிந்தித்து ஆரோக்கியமாய் மகிழ்ச்சியாய் வாழ தொடங்கும் மனிதனுக்கு 40 என்பதும் மற்றொரு வயதே இன்னும் சொல்லப்போனால் அவர்களின் ஆயுட்காலம் இன்னும் கால் நூற்றாண்டு நீடித்தாலும் வியப்பதற்கில்லை.
நோய் என்பது உடலில் தான் வரவேண்டும் என்று அவசியமில்லை
40 களை கடக்கும் போது ஆண் பெண் இருவருக்குமே ஒரு முக்கியமான மனத்தடை உண்டாகிறது.
⭕ 40 + ப்ளஸ்களில் தான் ஒரு மனிதனுக்கு உடல் பற்றிய புரிதலும், ஆரோக்கியத்தின் அவசியமும் தெரியத் தொடங்கும். அதுவரை……
👉வேலை,
👉வருமானம்,
👉குழந்தைகள் கல்வி,
👉வயதான பெற்றோர் பராமரிப்பு
என்று தன்னைப்பற்றி சிந்திக்கக்கூட நேரம் இல்லாமல் பம்பரமாய் சுழன்று ஓடிக்கொண்டிருந்திருப்பார்கள். ஆனால் கொஞ்சம் கவனமெடுத்து தற்காத்து கொள்ள வேண்டிய நேரமிது.
👉நாற்பதாவது வயதின் தொடக்கத்தில் முதலில் நம் உடம்பில் பாதிப்புக்குள்ளாகும் உறுப்பு #கண்.* இதுவரை வண்ணமயமாக உலகின் அழகை ரசித்து வந்த உங்களுக்கு எல்லாம் மங்கலாகத் தெரிய ஆரம்பிக்கும். #வெள்ளெழுத்து* என்கிற இந்த பிரச்னை நாற்பதைக் கடக்கும் எல்லோருக்கும் வரக்கூடியதுதான் ஆனால் தவிர்க்கவும் கூடியது.
அதேபோல், #க்ளூக்கோமா* என்று சொல்லப்படும் கண்களில் ஏற்படும் அழுத்தமும் வரலாம். 50-55 வயதில் #கண்புரை* வரும் வாய்ப்பும் உண்டு. பார்வைத்திறன் குறைவதுபோலவே #கேட்கும்_திறனும்_நுகர்வுத்திறனும்* குறைய ஆரம்பிக்கும்.
👉40-க்கு மேல் இயல்பாகவே உடல் உழைப்பு குறைந்துவிடும். அதனால் விளையாட்டு, உடற்பயிற்சி போன்றவற்றில் கவனம் செலுத்தி உடலை #fit ஆக்க வேண்டும்.
மேலும் மது, புகைப்பழக்கம் இருந்தால் அதை இந்த வயதில் உடனடியாக நிறுத்தி விடுவது நல்லது.
பிள்ளைகள் உயர்கல்வி திருமணம் என்று பணத் தேவையோடு மனஅழுத்தமும் அதிகரிக்கத் தொடங்கும் காலம் அதனால் தியானம் யோகா போன்ற பயிற்சிகளை மேற்கொள்வது சாலச்சிறந்தது.
அத்தோடு பிள்ளைகள் வெளி ஊர்களுக்கு கல்வி வேலைக்காக போவது அதிகரித்திருக்கும் நவீன வாழ்க்கை முறையில் 40 ஐ கடந்த பெற்றோர்கள் பலர் தனிமையை அனுபவிக்கும் நிலை உண்டாவதால் அதனாலும்……
👉மன அழுத்தம் உண்டாகி……
👉தூக்கமின்மை
👉தலைவலி,
👉மலச்சிக்கல்,
👉ஜீரணக்கோளாறு
என பல சிக்கல்களும் நிகழலாம். மருத்துவ ஆலோசனை மற்றும் சிகிச்சை இதற்கு தேவை.
குடும்பத்தில் முன்னோர்களுக்கு 50 வயதுக்குமேல் சர்க்கரைநோய் வந்திருந்தால் கூட அவர்கள் வாரிசுகளுக்கு 40 வயதிலேயே வந்துவிட வாய்ப்பு அதிகம் ஆகவே……
⭐6 மாதத்திற்கு ஒரு முறை முழு உடல் பரிசோதனையும் செய்ய வேண்டியது கட்டாயம்.
⭐40 வயதை கடந்தவர்கள் வீட்டில் தயாரிக்கப்பட்ட ஆரோக்கியமான எண்ணெய்யில்லா அதிகம் இனிப்பு இல்லாத,சத்தான அதே நேரம் குறைவான உணவு சரியான நேரத்தில் உண்ண வேண்டும்.
⭐இரவு தூங்கும் முன் நன்றாக வெண்ணெய் பிரித்து எடுக்கப்பட்ட மோரில் சிறிதளவு இஞ்சி, கறிவேப்பிலை, பச்சைமிளகாய் கலந்து ஒரு டம்ளர் பருகலாம்.
இந்த பானம் நல்ல ஆழ்ந்த தூக்கத்தை தரும் அன்றாடம் உண்ட உணவு எளிதில் சீரணம் ஆகி உடல் சமநிலை அடையும்.
⭕ பெண்களை பொறுத்தவரை வீட்டு வேலையையும் பார்த்துக்கொண்டு, குழந்தையையும் வளர்ப்பதிலே அவர்கள் மூழ்கிவிடுவார்கள். அவர்களுக்கு 40 வயதாகும்போது மகனோ, மகளோ 15 வயதை அடைந்து, அவர்களும் தங்கள் நட்பு வட்டத்தை மேம்படுத்திக் கொள்வார்கள். கணவரும், குழந்தைகளும் அவரவர் நட்பு வட்டத்தோடு பொழுதை கழிக்கும் அந்த தருணத்தில் 40 வயது தாய்க்கு தனிமை ஏற்பட்டுவிடுகிறது. இது ஆபத்தானது சரிசெய்யப்பட வேண்டியதும் கூட.
25 வயதில் திருமணமாகி, 15 வருட தாம்பத்ய வாழ்க்கை வாழ்ந்து 40 வயதை தொடும்போது ஆண்கள் பொதுவாகவே சலிப்படைந்து விடுகிறார்கள். அந்த காலகட்டத்தில் பெண்கள் சலிப்படையாமல் புதிய எழுச்சியுடன் செயல்பட விரும்புகிறார்கள்.
⭐மனைவி 40 வயதை எட்டும் போது கணவரும் புத்துணர்ச்சியடைய வேண்டும். மனைவி விரும்பும் மாற்றங்களை தங்களிடம் உருவாக்கிக்கொண்டு ஈடுகொடுத்து வாழ்க்கையை அனுபவிக்கவேண்டும்.
உடலையும் மனத்தையும் அழகாய் ஆரோக்கியமாய் வளமாய் மாற்றி காட்டும் மந்திரம் நம் *மனதில்* தான் உள்ளது.
ஆகவே மனம் உணர்ந்து வாழவும் உடல் உணர்ந்து உண்ணவும் கற்றுக்கொண்டால்………
#_40_வயது_அல்ல_100_வருடம்_கூட #நோயின்றி_வாழலாம்.………❗❗❗

No comments: