தன்னம்பிக்கையை எப்படி அதிகப்படுத்திக் கொள்வது ?
தன்னம்பிக்கையை எப்படி அதிகப்படுத்திக் கொள்வது ?
1) முதலில் நிமிர்ந்து நிற்கவும், நடக்கவும், அமரவும் பழகுங்கள். தலையைக் குனிந்து கொண்டு நடப்பது மற்றவர் கண்களை நேருக்கு நேராகப் பார்க்காமல் தவிர்ப்பது முதலில் avoid செய்யுங்கள்.
2) எதிர்மறையான எண்ணங்கள் வேண்டவே வேண்டாம். Always Positive thinking
3) புன்னகை எப்போதும் இருக்கட்டும், உள்ளத்தில் எந்தக் கவலை இருந்தாலும்....
4) எதற்கும் பயப்படாதீர்கள். நம்மை மீறி எதுவும் நடக்காது என்று உறுதியாக நம்புங்கள்.
5) உடை அணிவதில் கவனம் தேவை. எளிமையான உடையாக இருந்தாலும் சுத்தமாக அணியுங்கள். கசங்கிய ஆடையோடு ஊர்வலம் வராதீர்கள்.
6) உங்களிடம் நீங்களே பேசி உங்களை உற்சாகப்படுத்திக் கொள்ளுங்கள்.
நான் தன்னம்பிக்கை மிக்கவன்
நான் சக்தி மிக்கவன்
நான் சாதனையாளன்
நான் அன்பு மிக்கவன்
என்னால் முடியும் முடியும் முடியும்
வெற்றி நிச்சயம்.....
அடிக்கடி இதை உங்களுக்குள் சொல்லிக் கொள்ளுங்கள்.
7) சின்னஞ்சிறு இலக்குகளை தினமும் நிர்ணயம் செய்யுங்கள். செய்து முடித்தவுடன் உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள். eg... சரியான நேரத்திற்கு செல்லுதல்... இனிய சொற்களை பேசுதல்... நாம் இருக்கும் இடத்தை சுத்தமாக வைத்து கொள்ளல்... மற்றவர்க்கு உதவுவதல் etc etc
8) வாழ்க்கை ஒரு விளையாட்டு ஜெயித்துக் காட்டுவேன் என்று சங்கற்பம் செய்து கொள்ளுங்கள்.
9) நல்ல நட்பு வட்டத்தை உருவாக்கிக் கொள்ளுங்கள்.
10)Ego, Jealous, Fear, Hasitation எல்லாவற்றையும் மூட்டை கட்டி தூரப் போடுங்கள்.
ஒரே நாளில் எல்லாம் முடியாது. சிறுகச் சிறுகப் பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள்.
இந்த 10 Pointsம் தெளிவாக எழுதி வைத்துக் கொண்டு, தினமும் ஒரு முறை படியுங்கள். மனதில் பதிய வைக்க வேண்டும்.

No comments: