நீட்-NEET அடிப்படையில் தான் ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் (JIPMER MEDICAL COLLEGE) மாணவர் சேர்க்கை!...
நீட்-NEET அடிப்படையில் தான் ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில்
(JIPMER MEDICAL COLLEGE)
மாணவர் சேர்க்கை!...
ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் நடப்புக் கல்வியாண்டு (2020) முதல் நீட் நுழைவுத்தேர்வு முடிவுகள் அடிப்படையில் தான் மாணவர் சேர்க்கை நடைபெறும் என மருத்துவக் கல்லூரி டீன் அறிவித்துள்ளார்.
நாடு முழுவதும் எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட மருத்துவப்படிப்புகள் படிக்க வேண்டுமெனில் நீட் நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியது கட்டாயம். இருப்பினும், எய்ம்ஸ், ஜிப்மர் உள்ளிட்ட மருத்துவக் கல்லூரிகளில் மட்டும் நீட் தேர்வின்றி அந்த கல்வி நிறுவனம் சார்பில் நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டு வந்தது.
இந்நிலையில், 2020 கல்வியாண்டு
முதல் ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் சேர நீட் தேர்வு கட்டாயமாக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நடைமுறையானது
தற்போது, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் மொத்தம் 200 மருத்துவ படிப்பிற்கான இடங்கள் உள்ளது. அவற்றில் 150 இடங்கள் புதுச்சேரிக்கும், காரைக்காலுக்கு 50 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளது.


No comments: