Home
MARCH
மார்ச்-03 தொலைபேசியைக் (Telephone)கண்டுபிடித்தவர், பெல் தொலைபேசி நிறுவனத்தின் நிறுவனர்- அலெக்ஸாண்டர் கிரகாம் பெல் (Alexander Graham Bell பிறந்த தினம்.
மார்ச்-03 தொலைபேசியைக் (Telephone)கண்டுபிடித்தவர், பெல் தொலைபேசி நிறுவனத்தின் நிறுவனர்- அலெக்ஸாண்டர் கிரகாம் பெல் (Alexander Graham Bell பிறந்த தினம்.
06:19
Read
இன்று பிறந்தநாள்:- மார்ச்-03
தொலைபேசியைக்
(Telephone)கண்டுபிடித்தவர்,
பெல் தொலைபேசி நிறுவனத்தின் நிறுவனர்-
அலெக்ஸாண்டர் கிரகாம் பெல்
(Alexander Graham Bell பிறந்த தினம்.
பிறப்பு:-
ஸ்காட்லாந்தில் எடின்பார்க்கில் மார்ச்-3, 1847 ஆம் ஆண்டு பிறந்தார்.
எட்டு வயதிலேயே பியானோ வாசிப்பதில் வல்லவராகத் திகழ்ந்தார். பத்து வயதில் ஒலி அலைகளைப் பற்றி ஆராய்ச்சி செய்வதிலும் தனது நேரத்தைப் போக்கினார்.
பணிகள்:-
கனடா, போஸ்டன் நகரத்தில் வசித்த போது காது கேளாதோர் பள்ளி ஆசிரியர்களுக்குப் பயிற்சி தருவதற்காக ஒரு பள்ளிக் கூடத்தை ஏற்படுத்தினார்.பேச்சுமுறை பற்றிய அடிப்படைகளைக் கற்பித்தார்.
பாஸ்டன் பலகலைக் கழகம் பேச்சு அங்கவியல் பேராசிரியராக பணி புரிந்தார்.
ஆய்வுகள்:-
பியானோவில் ஒலி எழுப்பி மின்சாரம் மூலமாக அந்த இசையை ஒரு குறிப்பிட்ட தொலைவுக்கு அணுப்பினார்.
தந்தி முறையில் வெறும் ஒலிகள் மட்டுமே அனுப்பப்பட்டன. பேச்சுகளையும் அந்த முறையில் அனுப்ப 18 வயதிலேயே தோன்றியதால் அந்த முயற்சிகளில் ஈடுபட்டார். அக்காலத்தில் மனிதனின் பேச்சொலிகளை ஓரிடத்திலிருந்து மற்றோரிடத்திற்கு தந்திகள் மூலம் அனுப்பப்பட்டு வந்தது. அந்த முறைகள் இவருடைய ஆராய்ச்சிக்கு மிகவும் உதவியாயிருந்தன.
1876 ஆம் ஆண்டு உலகின் முதல் தொலைபேசி மூலம் அவருடைய உதவியாளர் வாட்சன் என்பவரிடம் பேசினார்.
அவர் முதலில் தொலைபேசியில் பேசிய சொற்றொடர் " வாட்சன் இங்கே வாருங்கள். உங்களைக் காண வேண்டும்.
"(Watson, come here, I want to see you) என்பது ஆகும்.
நிர்வாகம்:-
1876 மார்ச்சு 7 ஆம் தேதி தொலைபேசிக்கான காப்புரிமையைப் பெற்றார்.
1877 இல் தன் உதவியாளர் வாட்சனுடன் சேர்ந்து "பெல் தொலைபேசி கம்பனி" என்ற பெயரில் தொலைபேசி நிறுவனம் ஒன்றை நிறுவினார்.
வோல்டா ஆய்வுச் சாலை (Volta Laboratory) என்ற பெயரில் ஓர் அமைப்பை நிறுவினார்.
ஆய்வுகள்:-
அரசு நிறுவனத்தின் மூலம் பொட்டோ போன், ஆடியோ மீட்டர், மெட்டல் டிடக்டர், இன்டக்ஷன் பேலன்ஸ், வாக்ஸ் ரிகார்டிங் சிலிண்டர், கிராமபோன் போன்ற கருவிகளைக் கண்டு பிடித்தார். பெல் விமானம் கண்டு பிடிக்கும் முயற்சியிலும் ஈடுபட்டார்.
விமானத்தின் எய்லிரான் என்ற பகுதியைக் கண்டுபிடித்தார்.
ஆடுகள் வளர்க்கும் முயற்சியில், இரட்டைக் குட்டிகளை ஈடும் பெண் ஆடுகளை உருவாக்கவும் திட்டமிட்டார்.
பாலைவனங்களில் நாடுகாண முற்படும் படைவீரர்களுகு, காற்றிலுள்ள மிகுந்த ஈரத்தை வடிகட்டி உதவக் கூடிய அரிய கருவியைக் கண்டுபிடித்தார்.
விருதுகள்:-
1888 இல் உலக புவியியல் கழகத்தை(National Geograph Society) ஆரம்பித்தார்.
அந்தக் கழகத்தின் இரண்டாவது தலைவராகவும் விளங்கினார்.
பிரெஞ்சு அரசு வழங்கிய 'லெஜியன் ஆப் ஆனர்'(Legion of Honour) விருது,
வோல்டா பரிசு,
ராயல் சொசைட்டி ஆப் ஆர்ட்ஸ்(லண்டன்),ஆல்பெர்ட் பதக்கம்(1902) பெற்றார்.
மறைவு:-
அமெரிக்காவில் பாடக் ஊரில் 1922 ஆம் ஆண்டு ஆகஸ்ட்- 2 ஆம் தேதி மரணமடைந்தார்.
மார்ச்-03 தொலைபேசியைக் (Telephone)கண்டுபிடித்தவர், பெல் தொலைபேசி நிறுவனத்தின் நிறுவனர்- அலெக்ஸாண்டர் கிரகாம் பெல் (Alexander Graham Bell பிறந்த தினம்.
Reviewed by JAYASEELAN.K
on
06:19
Rating: 5
Reviewed by JAYASEELAN.K
on
06:19
Rating: 5


No comments: