Home
MARCH
மார்ச்-04. போக்குவரத்து சிக்னல் மற்றும் நச்சுவாயு பாதுகாப்பு முகக் கவசம் உருவாக்கிய, ஆப்பிரிக்க அமெரிக்க கண்டுபிடிப்பாளர்- கர்ரெட் அகஸ்டஸ் மார்கன் (Garrett Augustus Morgan) பிறந்த தினம்.
மார்ச்-04. போக்குவரத்து சிக்னல் மற்றும் நச்சுவாயு பாதுகாப்பு முகக் கவசம் உருவாக்கிய, ஆப்பிரிக்க அமெரிக்க கண்டுபிடிப்பாளர்- கர்ரெட் அகஸ்டஸ் மார்கன் (Garrett Augustus Morgan) பிறந்த தினம்.
18:43
Read
இன்று பிறந்த நாள்:- மார்ச்-04.
போக்குவரத்து சிக்னல் மற்றும் நச்சுவாயு பாதுகாப்பு முகக் கவசம் உருவாக்கிய,
ஆப்பிரிக்க அமெரிக்க கண்டுபிடிப்பாளர்- கர்ரெட் அகஸ்டஸ் மார்கன் (Garrett Augustus Morgan) பிறந்த தினம்.
பிறப்பு:-
அமெரிக்காவின் கென்டகி மாநிலத்தில்
மார்ச்-04, 1877 ஆம் ஆண்டு பிறந்தார்.
தனது 14 வயதில் ஓஹியோ மாநிலம் சின்சினாட்டிக்குச் சென்றார். பல இடங்களில் கூலி வேலை செய்தார். அந்த வருமானத்தில் ஒரு ஆசிரியரிடம் டியூஷன் சேர்ந்து கல்வி கற்றார்.
பணிகள்:-
கிளீவ்லேண்ட் நகரில் 1895 ஆம் ஆண்டு ஜவுளி உற்பத்தியாளரிடம் தையல் இயந்திரங்களைப் பழுது பார்ப்பவராக வேலை செய்தார். இயந்திரங்களின் வடிவமைப்பு, அவை இயங்கும் முறை ஆகியவற்றைக் கற்றுக்கொண்டு அவற்றைப் பிரித்து, பொருத்தி, மேம்படுத்தினார்.
கண்டுபிடிப்புகள்:-
தையல் இயந்திரத்தின் பெல்ட்டை கட்டுவதற்கான வழியைக் கண்டுபிடித்தார்.
1907 ஆம் ஆண்டு தையல் இயந்திரம், ஷூ பழுது பார்க்கும் கடையைத் தொடங்கினார்.
ஆப்பிரிக்க அமெரிக்கர்களின் சமூக, பொருளாதார மேம்பாட்டுக்காக பெரு முயற்சி எடுத்து 1908 ஆம் ஆண்டு கிளீவ்லேண்ட் அசோசியேஷன் ஃபார் கலர்டு மென் என்ற அமைப்பை தொடங்கினார். 1909 இல் மனைவியுடன் சேர்ந்து கட் ரேட் லேடீஸ் கிளாத்திங் ஸ்டோர் என்ற நிறுவனத்தை தொடங்கினார்.
1914 யில் புகை, நச்சு வாயுக்களிடம் இருந்து காப்பதற்கான பாதுகாப்பு கவசத்தை வடிவமைத்து காப்புரிமை பெற்றார். ‘நேஷனல் சேஃப்டி டிவைஸ்’ என்ற நிறுவனத்தை தொடங்கினார்.
ஜி.ஏ.மார்கன் ஹேர் ரிஃபைனிங் நிறுவனத்தை தொடங்கினார்.
சுருள் கூந்தலை நீட்டச் செய்வதற்கான கிரீம், சீப்பு, ஹேர் டை உட்பட பலவற்றைக் கண்டுபிடித்தார்.
எளிமையான, திறன் வாய்ந்த டிராஃபிக் கன்ட்ரோல் சிக்னல் முறையைக் கண்டறிந்தார். இதைப் பயன்படுத்தி விபத்துகள் இல்லாமல் மிகச் சுலபமாக போக்குவரத்தைக் கட்டுப்படுத்த முடிந்தது. இதற்கும் காப்புரிமை பெற்றார்.
தொடர்ந்து, பலவற்றைக் கண்டுபிடித்தார்.
விருதுகள்:-
மோர்கன் ஆல்பா ஃபீ ஆல்பா சகோதரத்துவத்தின் கௌரவ உறுப்பினர் அந்தஸ்தை பெற்றார்.
மறைவு:-
பள்ளிப் படிப்பையே முறையாக படிக்காத இவர், தன் உழைப்பாலும், திறமையாலும் பல கருவிகளைக் கண்டறிந்து மனித இனத்துக்கு முக்கியப் பங்களிப்பு வழங்கிய இவர், ஜூலை-27, 1963 ஆம் ஆண்டு
கிளீவ்லன்ட், ஓஹியோவில் மரணமடைந்தார்.
சிறப்புகள்:-
நூறு கிரேட்டஸ்ட் ஆப்பிரிக்கன் அமெரிக்கன்ஸ்’ என்ற புத்தகத்தில் இவரது பெயர் இடம்பெற்றுள்ளது.
மார்ச்-04. போக்குவரத்து சிக்னல் மற்றும் நச்சுவாயு பாதுகாப்பு முகக் கவசம் உருவாக்கிய, ஆப்பிரிக்க அமெரிக்க கண்டுபிடிப்பாளர்- கர்ரெட் அகஸ்டஸ் மார்கன் (Garrett Augustus Morgan) பிறந்த தினம்.
Reviewed by JAYASEELAN.K
on
18:43
Rating: 5
Reviewed by JAYASEELAN.K
on
18:43
Rating: 5


No comments: