Breaking

மார்ச்-06. ஐன்ஸ்டீன் சார்புக் கொள்கையை ஆய்வு செய்த இந்திய அறிவியலாளர்- சி. வி. விசுவேசுவரா ( C.V. Vishveshwara ) பிறந்த தினம்.






இன்று பிறந்த நாள்:- மார்ச்-06.


ஐன்ஸ்டீன் சார்புக் கொள்கையை ஆய்வு செய்த இந்திய அறிவியலாளர்-
சி. வி. விசுவேசுவரா 
( C.V. Vishveshwara ) பிறந்த தினம்.

பிறப்பு:-

மார்ச்-06, 1938 ஆம் ஆண்டு பெங்களூருவில் பிறந்தார்.
இவரது தந்தை சி. வி. வெங்கடராமையா ஆவர். இவர், சிறுவராக இருக்கும்போது இலக்கியம் இசை ஆகியவற்றில் ஆர்வம் காட்டினார். கொலம்பியா பல்கலைக்கழகத்தில் அணுத் துகள் இயற்பியல் துறையில் முதுகலை பட்டம் பெற்ற இவர், மேரிலேண்ட் பல்கலைக்கழகத்தில் கருந்துளைகள் பற்றி ஆய்வுசெய்து முனைவர் பட்டம் பெற்றார். 

பணிகள்:-

நியூயார்க் பல்கலைக்கழகம், பாசுடன் பல்கலைக்கழகம், பிட்சுபர்க் பல்கலைக் கழகம் ஆகியவற்றில் கற்பிக்கும் துறையில் பணி செய்தார். பின்னர் சொந்த ஊரான பெங்களூருவுக்குத் திரும்பினார்.

ஆராய்ச்சிகள்:-

கடந்த 1970 ஆம் ஆண்டு கருந்துளை வடிவம் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டார். இதைத் தொடர்ந்து 130 கோடி ஆண்டுகளுக்கு முன்பு இரண்டு ராட்சசக் கருந்துளைகள், ஒன்றையொன்று சுற்றிக்கொண்டே மோதியபோது ஏற்பட்ட ஈர்ப்பலைகளின் வடிவத்தை வரைந்தார்.


பெங்களூருவில்  கோளரங்கத்தைத் தோற்றுவித்து அதன் இயக்குநராக இருந்தார். கோளரங்கு நிகழ்ச்சிகளை எழுதியும் நிகழ்ச்சிகளை இயக்கியும் செயல்பட்டார். இரண்டு அறிவியல் குறும் படங்களை உருவாக்கினார். 

நூல்கள்:-

ஐன்சுடீன் கருந்துளைகள் பற்றி சில நூல்களும் பல கட்டுரைகளும் எழுதினார்.
(Einstein's Enigma or Black Holes in My Bubble Bath).

மறைவு:-

இந்தியாவின் 'கருந் துளை மனிதர்' என்று அழைக்கப்படும் இவர்,ஜனவரி-16, 2017 ஆம் ஆண்டு பெங்களூருவில் மரணமடைந்தார்.

No comments:

Powered by Blogger.