Breaking

மார்ச்-09. 🚀 விண்வெளிக்கு பயணம் செய்த முதல் விண்வெளி வீரர்- யூரி ககாரின் பிறந்த தினம்





🚀🚀🚀🚀🚀🚀🚀🚀🚀

இன்று பிறந்த நாள்: மார்ச்-09.

🚀 *விண்வெளிக்கு பயணம் செய்த முதல் விண்வெளி வீரர்-* யூரி ககாரின் *பிறந்த தினம்*  

🚀 *உருசியாவின் சிமோலியென்சுக் மாகாணத்தில் கிசாத்ஸ்க் நகரில் (1968 இல் இந்நகரின் பெயர் ககாரின் என மாற்றப்பட்டது) குளூசினோ என்ற ஊரில் பிறந்தார்.*

🚀 *பெற்றோர் ஒரு கூட்டுப் பண்ணை ஒன்றில் பணியாற்றியவர்கள்.*

🚀 *யூரி சரத்தோவ் உயர் தொழிநுட்பக் கல்லூரியில் தொழிற்பயிற்சி பெற்று அங்கு மென் விமான ஓட்டுநராக பகுதிநேரங்களில் பயிற்சி பெற்றார்.* 

🚀 *1955 இல் ஒரென்பூர்க் விமான ஓட்டுநர் பாடசாலையில் இணைந்து மிக்-15 போர் விமான ஓட்டுநராக பயிற்சி பெற்று வெளியேறினார்.*



🚀 *விண்வெளிக்கு வெற்றிகரமாகப் பயணித்த முதல் விண்வெளி வீரராவார். அத்துடன் பூமியை விண்ணில் வலம் வந்த முதல் மனிதரும் இவரே.*

🚀 *ககாரின் 1961 ஏப்ரல் 12 அன்று சோவியத் ஒன்றியத்தின் வசுத்தோக்-1 விண்கலத்தில் பயணித்து சுமார் 108 நிமிடங்கள் விண்ணில் சஞ்சரித்தார்.*

🚀 *27 மார்ச் 1968 அன்று, சக்கலோவ்ஸ்கி விமானத்தளத்தில் இருந்து ஒரு வழக்கமான பயிற்சியின் போது, ககாரின் மற்றும் விமான பயிற்றுவிப்பாளர்,* விளாடிமிர் சீரியோகின் Kirghach *நகருக்கு அருகில் ஒரு MiG-15UTI விமானத்தில் பயணம் செய்யும் போது விபத்தில் இறந்தார்கள்.* 

🚀 *ககாரின் மற்றும் சீரியோகின் உடல்கள் தகனம் செய்யப்பட்டு, அவர்களது சாம்பல் கிரெம்லின் சிகப்புச் சதுக்கத்தில் உள்ள சுவர்களில் புதைக்கப்பட்டது.*
🚀🚀🚀🚀🚀🚀🚀🚀🚀
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

No comments:

Powered by Blogger.