Breaking

மார்ச்-10. பேஸ் கான்ட்ராஸ்ட் மைக்ரோஸ்கோப்’ கருவியை மேம்படுத்திய டச்சு விஞ்ஞானி- ஃபிரிட்ஸ் ஜெர்னிகி (Frits Zernike) மறைந்த தினம்.






இன்று நினைவு நாள்:- மார்ச்-10.

பேஸ் கான்ட்ராஸ்ட் மைக்ரோஸ்கோப்’ கருவியை மேம்படுத்திய டச்சு விஞ்ஞானி- ஃபிரிட்ஸ் ஜெர்னிகி (Frits Zernike) மறைந்த தினம்.

பிறப்பு:-

நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாம் நகரில் ஜூலை-16, 1888  ஆம் ஆண்டு பிறந்தார். தந்தை, தாய் இருவரும் கணித ஆசிரியர்கள். தந்தையை போலவே இவருக்கும் இயற்பியலில் ஆர்வம் பிறந்தது. பள்ளிப் படிப்பை சொந்த ஊரில் முடித்தார். ஓய்வு நேரத்தை பரிசோதனைகளிலேயே செலவிட்டார். ஆம்ஸ்டர்டாம் பல்கலைக்கழகத்தில் 1915-ல் முனைவர் பட்டம் பெற்றார்.

ஆராய்ச்சிகள்:-

பல இயற்பியல் கருவிகளை தன் சேமிப்பில் இருந்து வாங்கி, பரிசோதித்து அவை குறித்து அறிந்துகொண்டார். கண்ணாடி, கண்ணாடி கற்கள், வண்ணங்கள் குறித்த ஆய்வில் மிகவும் ஆர்வம் கொண்டிருந்தார். வண்ணப் புகைப்படக்கள ஆராய்ச்சியிலும் ஈடுபட்டார். அதற்கு பண வசதி இல்லாததால், புகைப்பட சோதனைகளுக்குத் தேவையான ஈதரை தானாகவே உருவாக்கிக்கொண்டார். தனது ஆராய்ச்சிகள் மூலம் புகைப்பட கேமரா, சிறிய வானியல் கண்காணிப்பு கருவி உள்ளிட்டவற்றை உருவாக்கினார். பெற்றோருடன் இணைந்து மிகவும் சிக்கலான கணக்குகளுக்கு தீர்வு கண்டார். 

ஆம்ஸ்டர்டாம் பல்கலைக்கழகத்தில் வேதியியல், கணிதம், இயற்பியல் பயின்றார். நிகழ்தகவு கோட்பாடுகள் Probability) குறித்த ஆய்வுக் கட்டுரைக்காக 1908-ல் தங்கப் பதக்கம் வென்றார்.


அதே ஆண்டில் பால்மிளிர்வு (Opalescence) குறித்த விரிவான ஆராய்ச்சிக்காக டச்சு அறிவியல் சங்கம் இவருக்கு தங்கப் பதக்கம் அறிவித்தது. தங்கப் பதக்கம் வேண்டுமா, பணம் வேண்டுமா என்று கேட்டதற்கு, பணம்தான் வேண்டும் என்றார். அத்தொகையை தனது பரிசோதனைகளுக்கும், முனைவர் பட்ட ஆராய்ச்சிகளுக்கும் செலவிட்டார். டெலஸ்கோப் கண்ணாடிகளின் பிழைகள் குறித்து ஆராய்ந்தார். 

பார்வைத் திறன் குறித்த ஆராய்ச்சிகளில் ஈடுபட்டார். நிறமாலை(Spectrum)
வரிகள் குறித்து ஆராய்ச்சி மேற்கொண்டார். இதன் அடிப்படையில் ‘பேஸ் கான்ட்ராஸ்ட் மைக்ரோஸ்கோப்’ கருவியை மேம்படுத்தினார்.
1908-ஆம் ஆண்டில், பால்மிளிர்வு (Opalescence) குறித்த விரிவான ஆய்வுக்காக டச்சு அறிவியல் சங்கம் இவருக்கு தங்கப் பதக்கம் அறிவித்தது. பின்னர், 'கிரானிங்கன்' பல்கலைக்கழகத்தில் கணித இயற்பியல் விரிவுரையாளராக நியமிக்கப்பட்டபின், தொலைநோக்கி கண்ணாடிகளின் பிழைகள் குறித்து ஆராய்ந்தார்.
வேஜெனிங்கன் நகரில் 1933-ல் நடந்த இயற்பியல், மருத்துவ மாநாட்டில் இதன் தொழில்நுட்பத்தை விளக்கிக் கூறினார். இதே முறையை குழிலென்ஸ்களின் திறனை சோதிக்கவும் பயன்படுத்தினார். தன் மாணவர்களுடன் இணைந்து, லென்ஸ் முறைகளின் பிறழ்ச்சிகளால் ஏற்படும் பிரச்சினைக்குத் தீர்வு கண்டார். இவரது பேஸ் கான்ட்ராஸ்ட் மைக்ரோஸ்கோப் என்ற மகத்தான கண்டு பிடிப்பு உடனடியாக வரவேற்போ, அங்கீகாரமோ பெறவில்லை. பல ஆண்டுகளுக்குப் பிறகு, 1941-ல் இரண்டாம் உலகப் போருக்காக ஜெர்மனியில் அதிக எண்ணிக்கையில் உற்பத்தி செய்யப்பட்டன. அதன் பிறகுதான் இவரது புகழ் பரவியது.

பணிகள்:-

கிரானிங்கன் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஒருவரது அழைப்பை ஏற்று அவருக்கு உதவியாளராகப் பணியாற்றினார். அங்கு கணித இயற்பியல் விரிவுரையாளராக நியமிக்கப்பட்டார். 

விருதுகள்:-


1946-ஆம் ஆண்டில், ஜர்னிக்கே ராயல் நெதர்லாண்ட்ஸ் அகாடமி ஆப் ஆர்ட்ஸ் அண்ட் சயின்சஸ் உறுப்பினராக ஆனார்.
ரம்ஃபோர்ட் பதக்கம்- (1952),
1953-ல் இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்றார்.

1954 இல், ஆப்டிகல் சொசைட்டி (OSA) இன் கௌரவ உறுப்பினர் ஆனார். பிறகு, ராயல் சொசைட்டி வெளியுறவு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார் (ForMemRS).


மறைவு:-

ஒர்ன்ஸ்டீன் செர்னிக்கி சமன்பாடு, செர்னிக்கி பல்லுறுப்புக் கோவை காரணியாக்கம், இயல் நிலை ஒளி மாறுபாடு நுண் நோக்கி, போன்ற பற்பல மூலங்களையும், கருவிகளையும் கண்டறிந்து நோபல் பரிசு பெற்று இறுதிவரை பல்வேறு ஆராய்ச்சிகளில் ஈடுபட்ட இவர்,
மார்ச்-10, 1966 ஆம் ஆண்டு,
அமர்ஸ்போர்ட், நெதர்லாந்தில் மரணமடைந்தார்.

No comments:

Powered by Blogger.