Home
MARCH
மார்ச்-12. ஷேப்லி மதிப்பு ஷேப்லி-சுபிக் கனக் குறியீடு வகுத்த அமெரிக்க கணிதவியலாளர்-லாய்டு ஸ்டோவெல் ஷாப்லி (Lloyd Stowell Shapley) மறைந்த தினம்.
மார்ச்-12. ஷேப்லி மதிப்பு ஷேப்லி-சுபிக் கனக் குறியீடு வகுத்த அமெரிக்க கணிதவியலாளர்-லாய்டு ஸ்டோவெல் ஷாப்லி (Lloyd Stowell Shapley) மறைந்த தினம்.
11:04
Read
இன்று நினைவு நாள்:- மார்ச்-12.
ஷேப்லி மதிப்பு
ஷேப்லி-சுபிக் கனக் குறியீடு வகுத்த
அமெரிக்க கணிதவியலாளர்-லாய்டு ஸ்டோவெல் ஷாப்லி (Lloyd Stowell Shapley) மறைந்த தினம்.
பிறப்பு:-
அமெரிக்காவின் மசாசூசெட்ஸ் மாநிலம் கேம்பிரிட்ஜில் ஜூன்-2, 1923 இல் பிறந்தார். பள்ளிப் படிப்பு முடிந்தவுடன் பிலிப்ஸ் எக்ஸிடர் அகாடமியில் பயின்றார்.
கணிதத்தின் மடக்கைகள் (Logarithms) பிரிவில் 6 வயதிலே சிறந்து விளங்கினார்.
ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் பயின்றார்.
சோவியத்தின் வானிலைக் குறியீட்டைக் கண்டறிந்ததற்காக பிரான்ஸ் ஸ்டார் பதக்கம் பெற்றார்.
பிறகு, ஹார்வர்டில் கணிதத்தில் பட்டம் பெற்றார்.
ராண்ட் ஆய்வுக் கழகத்தில் ஓராண்டுக் காலம் பணியாற்றிய பிறகு, பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து படிப்பைத் தொடர்ந்தார்.
1953 ஆம் ஆண்டு, முனைவர் பட்டம் பெற்றார்.
கண்டுபிடிப்புகள்:-
சிறிது நாட்களிலே ‘கேம் தியரி’யில் இவரது பெயரால் வழங்கப்படும் ஷாப்லி மதிப்பு மற்றும் இதற்கான முக்கியத் தீர்வைக் கண்டறிந்தார்.
‘ஸோ லாங் சக்கர்’, ‘மெல் ஹாஸ்னர்’, ‘மார்ட்டின் ஷுபிக்’ உள்ளிட்ட போர்டு கேம்களை (Board Game) கண்டறிந்தார்.
கணித, பொருளியல் துறைகளில் தொடர்ந்து ஆராய்ச்சி மேற்க்கொண்டார்.
கணித அடிப்படையில், ஆண் பெண் இடையே உடலியல் சார்ந்த ஆராய்ச்சிகள் பல்வேறு கோட்பாடுகள், கருத்துகளை முன்வைத்தார். இது ‘மேட்சிங் தியரி’ எனப்படுகிறது.
தானமாகப் பெறப்படும் உடல் உறுப்புகள், அவற்றைப் பெறுபவரின் உடலில் நன்கு பொருந்திப் போவதற்கான அமைப்புகளை மேம்படுத்துவதற்கான அடிப்படையாக இவரது கருத்துகள் அமைந்தன.
ஷாப்லி மதிப்பு, போண்ட்ரேவா ஷாப்லி தேற்றம், ஷாப்லி ஷுபிக் சக்தி குறியீடு, கேல் ஷாப்லி அலாகிருதம் உட்பட ஏராளமான தேற்றங்கள், தீர்வுகள், கேம்களை கண்டறிந்துள்ளார்.
பணிகள்:-
கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் கணிதம், பொருளியல் துறைகளில் இறுதிவரை பணியாற்றினார்.
கணிதப் பொருளியல் துறையில், குறிப்பாக ‘கேம் தியரி’ கருத்துருவைக் கண்டறிந்ததில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கினார்.
பொருளியல் துறையில் பயன்பாட்டுக் கோட்பாட்டை மேம்படுத்தினார்.
நோபல் பரிசு:-
நிலையான ஒதுக்கீடு கோட்பாடு (Theory of Stable Allocations), சந்தை வடிவமைப்பு நடைமுறையைக் கண்டறிந்ததற்காக ஆல்வின் ரோத்துடன் இணைந்து, 2012 ஆம் ஆண்டின் பொருளியலுக்கான நோபல் பரிசைப் பெற்றார்.
விருதுகள்:-
கௌரவ டாக்டர், எருசலேமின் ஹீப்ரூ பல்கலைக்கழகம்- 1986,
புகழ்பெற்ற சக, அமெரிக்க பொருளாதார சங்கம் விருது- 2007,
ஃபெல்லோ, அமெரிக்க கணிதவியல் சங்க விருது-2012,
கோல்டன் கூஸ் விருது-2013 போன்ற விருதுகளை பெற்றார்.
மறைவு:-
அமெரிக்க பொருளாதார சங்கம் ஷாப்லி "விளையாட்டு கோட்பாடு மற்றும் பொருளாதார கோட்பாட்டின் ராட்சதர்களில் ஒருவர்" என்று குறிப்பிடப்பட்ட இவர், மார்ச்-12, 2016 ஆம் ஆண்டு, தனது 93-வது வயதில் டஸ்கன், அரிசோனாவில் மறைந்தார்.
மார்ச்-12. ஷேப்லி மதிப்பு ஷேப்லி-சுபிக் கனக் குறியீடு வகுத்த அமெரிக்க கணிதவியலாளர்-லாய்டு ஸ்டோவெல் ஷாப்லி (Lloyd Stowell Shapley) மறைந்த தினம்.
Reviewed by JAYASEELAN.K
on
11:04
Rating: 5
Reviewed by JAYASEELAN.K
on
11:04
Rating: 5


No comments: