Breaking

இனி ஊரடங்கை மீறினால் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட முகாமில் இருக்க வேண்டும் : மத்திய அரசு கடும் உத்தரவு..








💢💢இனி ஊரடங்கை மீறினால் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட முகாமில் இருக்க வேண்டும் : மத்திய அரசு கடும் உத்தரவு

*♦♦ஊரடங்கை மீறி வேறு இடங்களுக்கு செல்ல முயற்சிப்பவர்கள் 14 நாட்கள் அரசு முகாம்களில் தனிமைப் படுத்தப்படுவார்கள் -  மத்திய அரசு கடும் எச்சரிக்கை*

*♦♦கரோனா தொற்று பரவுவதைத் தடுக்கும் நோக்கில் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவை மீறினால் 14 நாள்கள தனிமை முகாமில் இருக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.*

*♦♦ஊரடங்கு ஆணையைத் திட்டவட்டமாகக் கடைப்பிடிக்கும் நோக்கில் இந்த அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.*

*♦♦மக்கள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தப் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டபோதிலும் பல இடங்களில் தேவையில்லாமல் மக்கள் வெளியே வந்து நடமாடுகின்றனர்.*

*♦♦இந்தப் புதிய அறிவிப்பின் மூலம் ஒருவேளை மக்கள் அநாவசியமாக வெளியே வந்தால், அவர்களை அழைத்துச் சென்று 14 நாள்கள் பாதுகாப்பாகத் தனிமை முகாமில் அரசே வைத்திருக்கும் நிலையேற்பட்டுள்ளது.*

*♦♦நெடுஞ்சாலைகளில் மக்கள் நடந்து செல்லவும் தடை விதிக்க மத்திய அரசு உத்தரவு*

*♦♦அனைத்து மாவட்ட, மாநில எல்லைகளை கட்டாயம் மூடவேண்டும் என உத்தரவு*

*♦♦பிற மாநில தொழிலாளர்களை வெளியேற  வலியுறுத்தினால் கடும் நடவடிக்கை*

*♦♦கொரோனா பாதிப்பால் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவை முழுமையாக அமல்படுத்த வேண்டும் என மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.*

*♦♦மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுரை வழங்கி உள்ளது.*

*⭕⭕இந்த உத்தரவில் கூறப்பட்டிருப்பதாவது:*

*♦♦நகரங்கள் மற்றும் கிராமங்களில் மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த மாநில அரசுகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.*

 *♦♦மேலும் இடம்பெயர்ந்த தொழிலாளர்களை வெளியேற்றும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.*

 *♦♦மேலும் அவர்களுக்கு தேவையான உதவிகளை மாநில அரசு செய்ய வேண்டும். தொழிலாளர்கள் இடம்பெயர்ந்து செல்வதை கட்டுப்படுத்த வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.*

*⭕⭕தனிமைப்படுத்தும் முகாம்*

*♦♦மேலும் ஊரடங்கை மீறி சாலைகளுக்கு வந்தால் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.*

*♦♦இதிலும் அவ்வாறு வெளியே வரும் நபர்களை பிடித்து தனிமைப்படுத்தும் முகாமில் வைக்க வேண்டும்.*

*♦♦சாலைகளில் உணவு மற்றும் சரக்கு வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கவும். குறிப்பாக மாவட்ட எல்கைகள மூட வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.*

No comments:

Powered by Blogger.