Home
MARCH
மார்ச்-16 கார்போஹைட்ரேட் வளர்சிதை மாற்றம் அறிய ஆர்வம் மிக்கவர்,இன்சுலின் கண்டுபிடித்தவர்- ஜான் ஜேம்ஸ் ரிக்கர்ட் மெக்லியோட் (John James Rickard Macleod) மறைந்த தினம்.
மார்ச்-16 கார்போஹைட்ரேட் வளர்சிதை மாற்றம் அறிய ஆர்வம் மிக்கவர்,இன்சுலின் கண்டுபிடித்தவர்- ஜான் ஜேம்ஸ் ரிக்கர்ட் மெக்லியோட் (John James Rickard Macleod) மறைந்த தினம்.
09:58
Read
இன்று நினைவு நாள்:- மார்ச்-16
கார்போஹைட்ரேட் வளர்சிதை மாற்றம் அறிய ஆர்வம் மிக்கவர்,இன்சுலின் கண்டுபிடித்தவர்-
ஜான் ஜேம்ஸ் ரிக்கர்ட் மெக்லியோட் (John James Rickard Macleod) மறைந்த தினம்.
மத்திய ஸ்காட்லாந்தின் குளுனி என்ற இடத்தில்
செப்டம்பர்-06, 1876 ஆம் ஆண்டு பிறந்தார்.
இவரது தந்தை வட கிழக்கு ஸ்காட்லாந்தின் ஆபர்டீன் நகரில் கிராமர் பள்ளியில் பயின்றார். பிறகு ஆபர்டீன் பல்கலைக்கழகத்தில் மருத்துவம் சேர்ந்து பயின்றார். 1898-ல் மருத்துவத்தில் முனைவர் பட்டம்(PH.D) பெற்றார். பிறகு ஜெர்மனியில் உள்ள லீப்ஸிக் பல்கலைக்கழகத்தில் உயிரி வேதியியல் பயின்றார்.
பணிகள்:-
பிரிட்டன், லண்டன் ஹாஸ்பிடல் மருத்துவக் கல்லூரியில் பணி புரிந்தார்.
1902-ல் உயிரிவேதியியல் துறையின் விரிவுரையாளராக நியமிக்கப்பட்டார்.
1903-ல் அமெரிக்கா சென்று, வெஸ்டர்ன் ரிசர்வ் பல்கலைக்கழகத்தில் உடலியல் துறை விரிவுரையாளராகப் பதவியேற்றார்.
டொரென்டோ பல்கலைக்கழகத்தில் உடலியல் துறை ஆய்வுக்கூடத்தின் இயக்குநராகவும் மருத்துவ டீனின் உதவியாளராகவும் நியமிக்கப்பட்டார்.
ஆய்வுகள்:-
தசைகளில் உள்ள பாஸ்பரஸ் பொருள்களைப்பற்றிய தனது முதல் ஆராய்ச்சி கட்டுரை வெளியிட்டார்.
மேலும் தனது ஆராய்ச்சி உடலியல் மற்றும் உயிர் வேதியளில் மைக்கோ பாக்டீரியம் டுயூபார்குலோசிஸ், மின் அதிர்ச்சிகள், கிரியேட்டனின் வளர்சிதை மாற்றம் மற்றும் மூளையின் ரத்த ஓட்டம் பற்றி ஆராய்ந்தார்.
1905-ல் கார்போஹைட்ரேட் வளர்சிதை மாற்றம், நீரிழிவு குறித்த ஆராய்ச்சிகளில் அதிக கவனம் செலுத்தத் தொடங்கினார்.
டொரென்டோ பல்கலைக்கழகத்தில் 6 ஆண்டு மருத்துவப் படிப்பு உருவாக முக்கிய காரணமாக இருந்தார்.
1920-ல் கனடாவைச் சேர்ந்த இளம் மருத்துவர் பாண்டிங் இவரிடம் நீரிழிவு நோயை கணையத்திலிருந்து பெறப்படும் பொருளின் மூலமாகக் குணப் படுத்த முடியும் என்று யோசனை தெரிவித்தார். இந்த ஆராய்ச்சிக்காக ஆய்வுக்கூட இடம், சோதனைக்கான விலங்குகள், பகுப்பாய்வு நுட்பங்கள் மற்றும் அவருக்கு உதவ தன் மாணவர்களுக்குத் தந்து உதவினார். பிறகு, அவர்களோடு இணைந்து இன்சுலின் ஆராய்ச்சி மேற்கொண்டார். பிறகு தனது ஆராய்ச்சிக் கூடத்தை இன்சுலின் ஆராய்ச்சி நிலையமாக மாற்றிவிட்டார்.
கார்போஹைட்ரேட்டின் சமநிலையைப் பராமரிப்பதில் முக்கியப் பங்காற்றும் மத்திய நரம்பு மண்டல ஆராய்ச்சிகளுக்கு மிகப் பெரிய பங்களிப்பை வழங்கினார்.
விருதுகள்:-
ராயல் சோயிட்டியின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினரானார்.
1923 இல் இன்சுலின் கண்டுபிடிப்புக்கும் பிரித்தலுக்குமான இவரது பங்களிப்புகளுக்காக ஃபிரெட்ரிக் பாண்டிங்குடன் இணைந்து உடலியல் அல்லது மருத்துவத்துக்கான நோபல் பரிசு பெற்றார்.
நூல்கள்:-
‘பிசியாலஜி அன்ட் பயோகெமிஸ்ட்ரி இன் மாடர்ன் மெடிசின்’, ‘பிராக்டிகல் ஃபிசியாலஜி’, ‘டயாபெடீஸ்: இட்ஸ் பாதாலஜிகல் ஃபிசியாலஜி’, ‘கார்போஹைட்ரேட் மெடபாலிசம் அன்ட் இன்சுலின்’ போன்று 11 நூல்களை எழுதியுள்ளார்.
இறப்பு:-
உயிரி வேதியியலாளர், விஞ்ஞானி, மருத்துவத்துக்கான நோபல் பெற்ற இவர், மார்ச்-16, 1935 ஆம் ஆண்டு, ஆபர்டீந், இஸ்காட்லாந்தில் மரணமடைந்தார்.
மார்ச்-16 கார்போஹைட்ரேட் வளர்சிதை மாற்றம் அறிய ஆர்வம் மிக்கவர்,இன்சுலின் கண்டுபிடித்தவர்- ஜான் ஜேம்ஸ் ரிக்கர்ட் மெக்லியோட் (John James Rickard Macleod) மறைந்த தினம்.
Reviewed by JAYASEELAN.K
on
09:58
Rating: 5
Reviewed by JAYASEELAN.K
on
09:58
Rating: 5


No comments: