Breaking

மார்ச்-20. 1915 இன்று ஐன்ஸ்டீனின் பொது சார்பியல் கோட்பாடு வெளியிடப்பட்ட நாள்







இன்று ஐன்ஸ்டீனின் பொது சார்பியல் கோட்பாடு வெளியிடப்பட்ட நாள் 

#ஈர்ப்பு விசையே வெளி என்பதாக அவரதுபொது சார்பியல் கோட்பாடு அமைந்திருந்தது. காலத்தையும், வெளியையும் ஒன்றாக இணைப்பதாகவும் இது அமைந்திருந்தது.

# காலமும், வெளியும் நிலையான மேடை போல அல்லாமல், அலை பாயும் தன்மை கொண்டிருக்கிறது.

#பிரம்மாண்ட பருப்பொருட்களால் காலவெளி வளைவதையும், அதன் தாக்கமே ஈர்ப்பு விசையாகிறது என்றும் உணர்த்தியது. என்று ஐன்ஸ்டீன் கூறினார்.

#காலமும் வெளியும், ஒரு பிரம்மாண்ட ரப்பர் துணி பரப்பு போல படர்ந்திருக்கும் நிலையில், அதிக எடையுள்ள பருப்பொருள் அதன் மையத்தை குவியச் செய்வதாகவும் ஐன்ஸ்டீன் கூறினார். 

#ஆக, பூமி, சூரியனை நோக்கி இழுக்கப்படுவது விசையினால் அல்ல. கால வெளியின் மீது சூரியன் தாக்கம் செலுத்தி, அதன் மையத்தை குவியச்செய்கிறது. இதனால், சூரியனை சுற்றியுள்ள காலவெளி வளைகிறது. இதன் காரணமாகவே, அதன் பாதையில் செல்லும் பூமி ஈர்க்கப்படுகிறது. 

 #சூரியன் போன்ற பிரம்மாண்டமான பருப்பொருள், கால வெளியை வளையச்செய்யும் என்பதால், அதன் பாதையில் வரும் எந்த பொருளும் லேசாக வளையவே செய்யும் என்று அவர் கூறினார்.

#நேர் கோட்டில் செல்லக்கூடிய ஒளியும் இந்த விளைவுக்கு உள்ளாகும் என்பதால், சூரியன் அருகே ஒளிக்கதிர் வளைவதை பார்க்கலாம் என்றும் அவர் கூறினார். 

#பெரிய தொலைநோக்கி வழியே பார்த்தால், ஒளியின் வளைவு, அருகாமையில் உள்ள நட்சத்திரங்களின் இருப்பிடம் மாறுபட்டு தோன்றுவதில் இருந்து இதை புரிந்து கொள்ளலாம் என்றும் ஐன்ஸ்டீன் கூறியிருந்தார்.

#காலவெளியின் வளைவே ஈர்ப்பு விசையை உண்டாக்குகிறது என ஐன்ஸ்டீன் கண்டறிந்து கூறிய கருத்தாக்கத்தை உலகிற்கு நிருபித்துக்காட்டும் பொறுப்பை, இங்கிலாந்தைச்சேர்ந்த ஆர்தர் எடிங்டன் மற்றும் வாட்சன் டைசன் ஆகிய விஞ்ஞானிகள் ஏற்றுக்கொண்டனர்.

#இதற்காக அவர்கள் இரண்டு குழுக்களாக, 1919ம் ஆண்டு மே மாதம் ஆப்பிரிக்கா மற்றும் தென்னமெரிக்காவில் இருந்த பிரேசிலுக்கு சென்று அங்கிருந்த வனப்பகுதியில், அந்த ஆண்டு நிகழ்ந்த சூரிய கிரகணத்தை படம் பிடித்தனர்.

#வழக்கமான காலங்களில், சூரியன் அருகே ஒளி வளைவதை படம் பிடிக்க வழியிருக்காது. ஏனெனில், சூரியனின் பிரகாசம் சுற்றியுள்ள நட்சத்திர வெளிச்சத்தை மங்கச்செய்துவிடும். எனவே தான், சூரிய கிரகணத்தைத் தேர்வு செய்தனர். அதிலும், 1919ல் நிகழ்ந்த சூரிய கிரகணம் ஆறு நிமிடம் நீடிக்கக் கூடிய அபூர்வ தன்மை கொண்டிருந்ததால், ஆய்வுக்கு சாதகமான அமைந்தது. பல்வேறு சவால்களுக்கு இடையே, இந்த ஆய்வை நடத்தி சூரிய கிரகண காட்சியை தொலைநோக்கியில் படம் பிடித்தனர்.

#இந்த ஆய்வின் முடிவை தான், பின்னர் நவம்பர் மாதம், ராயல் சொசைட்டியில் வெளியிட்டனர். சூரியன் அருகே, ஒளிக்கதிர் லேசாக வளைவதற்கான ஆதாரம் தொலைநோக்கியில், படம் பிடிக்கப்பட்டதை குறிப்பிட்டு, ஐன்ஸ்டீனின் புதிய கோட்பாடு நிருபிக்கப்பட்டதை அவர்கள் உலகிற்கு அறிவித்தனர். 

#அறிவியல் உலகையே புரட்டிப்போடும் வகையில் இந்த அறிவிப்பு அமைந்திருந்தது.

#அது வரை அறிவியலின் மையமாக நியூட்டனின் ஈர்ப்பு விசை கருத்தாக்கமே அமைந்திருந்தது. அதை மையமாகக் கொண்டே இயற்பியல் விதிகளை நியூட்டன் வகுத்திருந்தார். 

#ஆனால், ஐன்ஸ்டீனின் கண்டுபிடிப்பு அதை மாற்றி, பிரம்மாண்ட பருப்பொருட்களால் காலவெளி வளைவதையும், அதன் தாக்கமே ஈர்ப்பு விசையாகிறது என்றும் உணர்த்தியது.
  ===================   
     * ~$ ¢ | €  /|/  ¢ £~*
====================

No comments:

Powered by Blogger.