Breaking

மார்ச்-22. எலக்ட்ரானின் மின்னூட்ட மதிப்பைத் (Charge of electron) துல்லியமாகக் கணக்கிடும் முறைகளை வகுத்த அமெரிக்க ஆய்வியல் இயற்பியலறிஞர்-இராபர்ட் ஆண்ட்ரூஸ் மில்லிகன் (Robert A. Millikan) பிறந்த தினம்.






எலக்ட்ரானின் மின்னூட்ட மதிப்பைத் (Charge of electron) துல்லியமாகக் கணக்கிடும் முறைகளை வகுத்த அமெரிக்க ஆய்வியல் இயற்பியலறிஞர்-இராபர்ட் ஆண்ட்ரூஸ் மில்லிகன் (Robert A. Millikan) பிறந்த தினம்.

இன்று பிறந்த நாள்:-மார்ச்-22.

எலக்ட்ரானின் மின்னூட்ட மதிப்பைத் (Charge of electron) துல்லியமாகக் கணக்கிடும் முறைகளை வகுத்த அமெரிக்க ஆய்வியல் இயற்பியலறிஞர்-இராபர்ட் ஆண்ட்ரூஸ் மில்லிகன் (Robert A. Millikan) பிறந்த தினம்.



பிறப்பு:-


இவர் அமெரிக்காவின் இலினாய்ஸ் மாநிலம் மோரிசன் நகரில் மார்ச்-22, 1868 ஆம் ஆண்டு பிறந்தார்.

அயோவா மாநிலத்தில் உள்ள மக்கோகிடா உயர்நிலைப் பள்ளியில்  பயின்றார். பள்ளிப் படிப்புக்கு பிறகு, நீதிமன்றத்தில் சிறிது காலம் பணிபுரிந்தார். 1891-ல் ஓபர்லின் கல்லூரியில் பட்டப்படிப்பு முடித்தார். கிரேக்கமும் கணிதமும் இவருக்கு மிகவும் பிடித்த பாடங்கள் ஆகும்.

இயற்பியல் ஆசிரியராக 2 ஆண்டுகள் பணியாற்றினார். 1893-ல் இயற்பியலில் முதுகலைப் பட்டம் பெற்றார். கொலம்பியா பல்கலைக்கழகத்தில் 1895-ல் மின் ஒளிர்வு தளங்கள் குறித்து ஆராய்ச்சி மேற்கொண்டு முனைவர் பட்டம் பெற்றார். அங்கு இத்துறையில் முதன் முதலில் முனைவர் பட்டம் பெற்றவர் ஆவார்.


கண்டுபிடிப்புகள்:-


மின்சாரம், ஒளியியல், மூலக்கூறு இயற்பியல் ஆகிய துறைகளில் பல ஆராய்ச்சிகளை மேற்கொண்டு முக்கியத்துவம் வாய்ந்த கோட்பாடுகளை வெளியிட்டார்.

1909-ல் ஒற்றை எலக்ட்ரான் மூலம் கடத்தப்படும் மின்னூட் டத்தை தீர்மானிக்கும் தொடர் கட்டச் சோதனைகளை நிகழ்த்தினார். 

இவர் எலக்ட்ரானின் மின்னூட்ட மதிப்பைத் (Charge of electron) துல்லியமாகக் கணக்கிட்ட முறைகளுக்காகவும் ஒளிமின் விளைவில்(Photo electric effect) இவருடைய ஆய்வுகளுக்காகவும் 1923-ஆம் ஆண்டு நோபெல் பரிசு பெற்றார். 1921-இல் பிரஸ்பெல்சு என்ற இடத்தில் நடந்த சால்வே மாநாடு என்று சிறப்புப் பெற்ற இயற்பியல் அறிஞர்களின் மாநாட்டில் அமெரிக்கப் பிரதிநிதியாகக் கலந்து கொண்டவர். அறிவியலறிஞர் மட்டுமல்லாமல் சிறந்த மதவாதியாகவும், தத்துவஞானியாகவும் விளங்கினார்.


பணிகள்:-


சிகாகோ பல்கலைக்கழகத்தில் புதிதாக நிறுவப்பட்ட ரியர்சன் சோதனைக் கூடத்தில் துணை ஆராய்ச்சியாளராக சேர்ந்து, 1910 முதல் 1921 வரை பேராசிரியராகப் பணியாற்றினார்.

பாடப் புத்தகங்கள் எழுதுவது, இயற்பியலை எளிமை யாகக் கற்பிக்கும் முறைகளை மேம்படுத்துவது ஆகிய பணிகளில் ஈடுபட்டார். 


இரண்டாம் உலகப் போரின்போது அமெரிக்காவின் தேசிய ஆராய்ச்சிக் கழகத்தில் துணைத் தலைவராக பணியாற்றினார். அப்போது நீர்மூழ்கிப் போர்க் கப்பல்கள், வானியல் ஆராய்ச்சிக் கருவிகளை மேம்படுத்தும் பணியில் முக்கிய பங்காற்றினார்.


விருதுகள்:-


காம்ஸ்டொக் பரிசு-(1913),

எண்ணெய்த் துளி சோதனை மூலம் எலக்ட்ரானின் மின்சுமையை அளக்கும் ஆய்வு மற்றும் ஒளிமின் விளைவு குறித்து அவர் மேற்கொண்ட ஆய்வுக்காக 1923-ல் இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

மேட்டூசி மெடல்- (1925),

ASME பதக்கம்- (1926),

ஃப்ராங்க்லின் மெடல்-(1937),

ஓஸ்டெட் மெடல்- (1940),

மெடட் ஃபார் மெரிட்-(1949) பெற்றார்.


மறைவு:-


டிசம்பர்-19, 1953 ஆம் ஆண்டு,
சான் மாரினோ, கலிபோர்னியா, அமெரிக்காவில் மரணமடைந்தார்.

No comments:

Powered by Blogger.