மார்ச்-24. உலக காசநோய் தினம். (World Tuberculosis Day)
20:21
Read
மார்ச்-24. உலக காசநோய் தினம்.
(World Tuberculosis Day)
🏪🏪🏪🏪🏪🏪🏪🏪🏪இன்று:- #மார்ச்-24. உலக காசநோய் தினம்.
(World Tuberculosis Day)
🏪 காசநோய்:-
இது ஒரு தொற்று நோய். இந்த நோய் தாக்கும் பாக்டீரியாவின் பெயர் லைக்கோபாக்டீரியம் டியூபர்க்ளோஸிஸ்
என்பது ஆகும். நுரையீரல், தொண்டையில் ஏற்படும் இதன் தாக்குதலால் அவரது சளி, எச்சில் மூலமாக அடுத்தவரை பாதிக்கும்.
காசநோய் தினம்:-
இந்த நோய் பரவுதல் பற்றியும், அதைத் தடுப்பது குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக மார்ச்-24 ஆம் தேதி, சர்வதேச காசநோய் தினம் கடைபிடிக்கப்படுகிறது.
வரலாறு:-
மார்ச்-24, 1882 ஆம் ஆண்டில் டாக்டர் இராபர்ட் கோச் (Robert Koch) என்பவர் காசநோய்க்கான காரணியை (TB bacillus) என்று பெர்லினில் அறிவித்தார். கோச்சீன் இக்கண்டுபிடிப்பு
காசநோய் பற்றி முழுமையாக அறிய வழிவகுத்தது.
1982 ஆம் ஆண்டில் இக்கண்டுபிடிப்பின் நூற்றாண்டு நினைவு நாளில் காசநோய் மற்றும் இருதய நோய்களுக்கெதிரான அனைத்துலக அமைப்பு (International Union Against Tuberculosis and Lung Disease - IUATLD) மார்ச்-24 ஆம் நாளை உலக காசநோய் நாளாக அறிவிக்க வேண்டுகோள் விடுத்தது. இதனால் 1996 ஆம் ஆண்டில் இருந்து உலக சுகாதார அமைப்பு (WHO) இந்நாளை காசநோய் விழிப்புணர்வு நாளாக அறிவித்தது.
🏪 காசநோய் பற்றிய தகவல்கள்:-
4,000ஆண்டுகளுக்கு மேலாக மனிதர்களிடம் காணக்கூடிய கிருமி மைக்ரோபாக்டீரியம் டியூபர்கலோசிஸ். எகிப்தில் கண்டுபிடிக்கப்பட்ட மம்மிகளின் முதுகெலும்புத் தொடரை ஆராய்ந்தபோது அதில் டி.பி. கிருமி இருந்திருக்கிறது. பொதுவாக ஆசிய, ஆப்பிரிக்கர்களுக்கும் டி.பி. கிருமி எதிர்ப்பு சக்தி குறைவாகவே உள்ளது. இதனால் பல நூற்றாண்டுகளாக இந்தக் கிருமிகளின் தாக்கம் இருந்ததால் பல உயிரிழப்புகள் நிகழ்ந்தது.
🏪 அறிகுறிகள்:-
இரண்டு வாரத்துக்கு மேல் இருமல், காய்ச்சல்.
சளியுடன் கூடிய இருமல், இருமும்போது சளியுடன் ரத்தம் வெளியயேறுதல்.
பசியின்மை.
எடை குறைதல் போன்றவையாகும்.
இந்நோயினால் ஏற்படும் பிற பாதிப்புகள்
😢பாதிக்கப்பட்டவரின் இடங்களில் இருந்து வரும் நபர்களுக்கு நோயின் பாதிப்பு வெளியில் தெரியாமல் இருக்கலாம்.
😢சிறு குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவின் காரணமாக எளிதில் பாதிப்பு ஏற்படலாம்.
😢நீரிழிவு நோய், சிறு நீரக நோய் உடையோருக்கு காச நோய் எளிதில் தாக்கலாம்.
😢எய்ட்ஸ் பாதிப்பு உடையவர்கள் நோய் எதிர்ப்பு சக்தி குறைவின் காரணமாக எளிதில் பாதிக்கப்படுவர்.
😢புற்று நோய் சிகிச்சை மேற்கொள்பவர்கள் என சில வகை நோய்களை ஏற்கனவே உடையவர்கள் நோய் எதிர்ப்பு சக்தி குறைவதன் காரணமாக காசநோய் பாதிப்பினை பெறலாம்.
கடைபிடிக்கவேண்டியவை:-
பொதுவில் டிபி வீரிய நிலை பாதிப்பு உடையவர்கள் சில வாரங்கள் அலுவலகம், பள்ளி செல்ல வேண்டாம் என மருத்துவர்கள் அறிவுறுத்துவர்.
ஆனால் சிகிச்சை என்பது பல மாதங்கள் தொடரும். மருத்துவர் நீங்கள் பூரண நிவாரணம் பெற்றுவிட்டீர்கள் என்று கூறிய பிறகு பாதிக்கப்பட்டவர் இயல்பு வாழ்க்கையினை மேற்கொள்ளலாம்.
* டிபி வீரிய நிலையில் இருக்கும் பொழுது பாதிக்கப்பட்டவரின் குடும்ப நபர்கள் மிகுந்த கவனத்துடன் அவர்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும். நோயாளி அருகில் செல்லும் பொழுது ‘மாஸ்க்’, ‘கையுரை’ அணிவது நல்லது. அதே போன்று நோயாளியும் இருமல், தும்பல் வரும் பொழுது மூக்கு, வாயினை மென்மையாய் டிஷ்யூ பேப்பரினை பொத்தி பின் அதனை குப்பை கவரில் போட்டு விட வேண்டும்.
டிபி சிகிச்சை சிறந்த பலனை அளிக்கின்றது. ஆயினும் முறையான மருந்தினை முறையான காலம் வரை முறையாய் எடுக்க வேண்டியது மிக அவசியம். பலருக்கு இருக்கும் விடா பிரச்சினைகளுக்கு காரணம் முறைபடி மருந்தினை உட்கொள்ளாததே ஆகும். இதன் காரணமாக சிகிச்சை தீவிர சிகிச்சை ஆகலாம்.
மற்றொரு வகை டிபி அரிதானது. இவ்வகையில் கிருமி ரத்தத்தின் வழியாக உடலில் பல்வேறு உறுப்புகளை ஒரே நேரத்தில் பாதிக்கும். இவ்வகை மிகவும் அபாயகரமானது.
பொது இடங்களில் எச்சில் துப்புவது, மூக்கினை சிந்துவது இவை மிக அநாகரிகமானது மட்டுமல்ல. சுகாதார சீரழிவு என்பதனை இனியாவது மக்கள் உணர வேண்டும்.
காச நோயின் வயது சுமார் 15,000 வருடங்கள் ஆகும். கி.மு. 2400-3000 வருட ‘மம்மீஸ்’ ஆய்வுகளில் அவர்கள் முதுகெலும்பில் இக்கிருமி தாக்குதல் இருந்ததாம். கி.மு.460ல் கூட காசநோய் எடை குறைவோடு கூடிய நோய் என்ற குறிப்பு கிடைத்துள்ளது.
ஆறு மாதம் தொடர்ந்து மருந்து எடுத்துக் கொள்ள வேண்டும். கொஞ்சம் முன்னேற்றம் தெரிந்த உடன் அநேகர் இதனை செய்வதில்லை. பின்னால் இவர்கள் பெரும் பாதிப்பிற்குள்ளாகின்றனர். இவர்கள் மூலம் நோய் பரவவும் செய்கின்றது.
அரசாங்கம் இதற்கான மருந்துகளை எளிதாய் கொடுத்தாலும் சில அடிப்படை தேவைகளை செய்து கொள்ளும் வசதி பலருக்கு இருப்பதில்லை.
4-5 மாத்திரைகளை முறையாய் தினம் எடுத்துக் கொள்ளும் ஒழுங்கு முறை பலருக்குத் தெரிவதில்லை.
முறையான பரிசோதனை செய்து கொள்ளத் தவறுகின்றனர்.
பலர் தனக்கு டிபி உள்ளது என்பது யாருக்கும் தெரியக்கூடாது என்று அஞ்சுகின்றனர்.
பலர் தனக்கு நோய் இருந்து விடுமோ என்ற பயத்திலேயே பரி சோதனைக்கு வருவதில்லை.
மேற் கூறியவைகளை தவிர்த்தால் காச நோயற்ற சமூகத்தினை நம்மால் உருவாக்க முடியும்.
🏪 நோய் பரவும் விதம்:-
காச நோய்க் கிருமியானது, இருமல், தும்மல், சுவாசம், பேசுதல் மூலமாகப் பரவுகிறது.
நுரையீரல் காசநோய் உள்ள நோயாளி தும்மும்போதும், இருமும்போதும் கிருமியானது பரவுகிறது.
இது அடுத்தவர் நுரையீரலுக்குச் சென்று, அவருக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருந்தால் நுரையீரலிலேயே தங்கிவிடுகிறது. ஒருவேளை அவருக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருந்தால், அது நோயாக உருவெடுத்து பாதிப்பை ஏற்படுத்துகிறது.
சளி சிறுசிறு நீர்த் திவலைகளாக காற்றில் பரவுகிறது.
(ஒரு நீர்த் திவலையில் ஆயிரக்கணக்கான கிருமிகள் இருக்கும். திவலையின் அளவு 5 மைக்ரானுக்கு கீழ் இருந்தால், காற்றில் மிதக்கும். நுரையீரல் வரை சென்று வெளியே வந்துவிடும். 10 மைக்ரானுக்கு மேல் இருந்தால் மூக்கு, அதற்கு அடுத்துள்ள பகுதியிலேயே தங்கிவிடும். சளியில் வெளிப்பட்டுவிடும்.
நீர்த் திவலையின் அளவு 5 முதல் 10 மைக்ரானாக இருந்தால், நுரையீரலில் சென்று தங்கிவிடும்.)
🏪 சிகிச்சை முறைகள்:-
மான்டோ’ பரிசோதனை மூலம் காச நோய் கிருமித் தொற்றைக் கண்டறியலாம்.
அப்பா அல்லது அம்மாவுக்குக் காசநோய் இருந்து, 10 வயதுக்குட்பட்ட பிள்ளைகளுக்கு பரிசோதனை முடிவு பாசிட்டிவ் என்று வந்தால், அவர்கள் சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும்.
காசநோய் அறிகுறி இருந்தால், அருகிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் உடனடி சிகிச்சை பெறவேண்டும்.
தடுப்பூசி:-
இந்தியா மற்றும்
பாகிஸ்தான் ஆகிய இருநாடுகளே ஐரோப்பாவிற்கு வெளியே காசநோய்த் தடுப்பூசியைப் பயன்படுத்திய முதல் நாடுகள் ஆகும். தற்போது இந்தியாவில் பிறந்ததும் அல்லது பிறந்து நான்கு நாட்களுக்குள்
பி.சி.ஜி தடுப்பூசி (Bacillus Calmette–Guérin (BCG) vaccine)
குழந்தைகளுக்குப் போடப்படுகிறது.
மனித இறப்பிற்கு முக்கியமான மூன்று காரணங்களில் காசநோயும் ஒன்றாகும். 15-45 வயதுள்ள பெண்கள் இதில் அதிகம் இடம் பெறுகின்றனர்.
எனவே காசநோய் இல்லாத உலகத்தில் நல்ல தலைவர்களை உருவாக்குவோம்..
🏪🏪🏪🏪🏪🏪🏪🏪🏪🏪
🙏
மார்ச்-24. உலக காசநோய் தினம். (World Tuberculosis Day)
Reviewed by JAYASEELAN.K
on
20:21
Rating: 5
Reviewed by JAYASEELAN.K
on
20:21
Rating: 5
Tags :
Special Day


No comments: