Home
MARCH
மார்ச்-25. அமெரிக்க வேளாண் அறிவியலாளர், மனித தத்துவவாதி மற்றும் நோபல் அமைதிப் பரிசினைப் பெற்றவர், பசுமைப் புரட்சியின் தந்தை-நார்மன் எர்னஸ்ட் போர்லாக்(Norman Ernest Borlaug) பிறந்த தினம்.
மார்ச்-25. அமெரிக்க வேளாண் அறிவியலாளர், மனித தத்துவவாதி மற்றும் நோபல் அமைதிப் பரிசினைப் பெற்றவர், பசுமைப் புரட்சியின் தந்தை-நார்மன் எர்னஸ்ட் போர்லாக்(Norman Ernest Borlaug) பிறந்த தினம்.
21:06
Read
இன்று பிறந்த நாள்:- மார்ச்-25.
அமெரிக்க வேளாண் அறிவியலாளர், மனித தத்துவவாதி மற்றும் நோபல் அமைதிப் பரிசினைப் பெற்றவர், பசுமைப் புரட்சியின் தந்தை-நார்மன் எர்னஸ்ட் போர்லாக்(Norman Ernest Borlaug) பிறந்த தினம்.
பிறப்பு:-
அமெரிக்காவின் கிரெஸ்கோ நகரில்
மார்ச்-25, 1914
ஆம் ஆண்டு பிறந்தார். பள்ளிப் படிப்பை அதே ஊரில் முடித்தார். குடும்பப் பண்ணையில் மீன்பிடிப்பது, வேட்டையாடுவது, சோளம், ஓட்ஸ் பயிரிடுவது, ஆடு, மாடு, கோழி வளர்ப்பது ஆகியவைதான் சிறு வயதில் பொழுதுபோக்காக இருந்தது.
மினசோட்டா பல்கலைக்கழகத்தில் வனவியலில் 1937 ஆம் ஆண்டு இளங்கலைப் பட்டம் பெற்றார். மசாசூசெட்ஸ், இடாஹோவில் வனத்துறை அதிகாரியாக பணியாற்றினார். பின்னர், தாவர நோய் துறையில் 1940 ஆம் ஆண்டு முதுகலைப் பட்டமும் பெற்றார்.
பிஎச்.டி 1942 இல் மினசோட்டா பல்கலைக்கழகத்தில் தாவர நோயியல் மற்றும் மரபியல் ஆகியவற்றில்
ஆய்வு மேற்கொண்டு பட்டமும் பெற்றார்.
பணிகள்:-
நுண்ணுயிரி நிபுணராக ஓர் அறிவியல் அமைப்பில் 2 ஆண்டுகள் பணியாற்றினார். அப்போது வேளாண் துறை குறித்த பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டார்.
மெக்சிகோ அரசு அழைப்பின் பேரில் அந்நாட்டின் கூட்டுறவு கோதுமை ஆராய்ச்சி, உற்பத்தி திட்ட அமைப்பில் மரபணுவியல் மற்றும் தாவர நோய் நிபுணராகப் பணியாற்றினார்.
கண்டுபிடிப்புகள்:-
மெக்சிகோ விஞ்ஞானிகளுடன் இணைந்து இவர் மேற்கொண்ட ஆராய்ச்சிகளில், 20 ஆண்டுகளுக்குள், அதிக விளைச்சல் தரும், நோய் எதிர்ப்பு சக்தி உள்ள குட்டையான (Semi Dwarf) கோதுமை பயிர் ரகங்களை உருவாக்கினார். இவற்றை மெக்சிகோ மட்டுமின்றி, இந்தியா, பாகிஸ்தானிலும் அறிமுகம் செய்ய வழிகாட்டினார்.
இதனால் கோதுமை ஏற்றுமதியில் 1963 ஆம் ஆண்டு மெக்சிகோ முதலிடம் பெற்றது.
1965 -1970 காலகட்டத்தில் இந்தியா, பாகிஸ்தானில் கோதுமை விளைச்சல் ஏறக்குறைய 2 மடங்கானது.
இந்த நாடுகளில் விவசாய உற்பத்தி தன்னிறைவை எட்டுவதில் பெரும் பங்காற்றினார். ஆசியாவின் பிற நாடுகளிலும், ஆப்பிரிக்காவிலும் உணவு உற்பத்தி பெருக உதவினார்.
உணவு பாதுகாப்பை மேம்படுத்திய இவரது செயல்பாடு பசுமைப் புரட்சி எனப் பாராட்டப்பட்டது.
உலகம் முழுவதும் பசியால் வாடும் மக்களுக்கு உணவு அளிப்பதை தலையாய கடமையாகக் கருதினார்.
இவரது ஆராய்ச்சி மூலம், உலகம் முழுவதும் உள்ள பல கோடி மக்களை பசியின் கோரப் பிடியில் இருந்து, இவரது பசுமைப் புரட்சி காப்பாற்றியது பெரிதும் போற்றப்படுகிறது.
பதவிகள்:-
சர்வதேச மக்காச்சோளம், கோதுமை மேம்படுத்துதல் மையத்தின் சர்வதேச கோதுமை மேம்பாட்டுத் திட்ட இயக்குநராக நியமிக்கப்பட்டார்.
ஆராய்ச்சி, உற்பத்தி முறைகள் குறித்த பயிற்சிகளில் இளம் விஞ்ஞானிகளை அதிகம் ஈடுபடுத்தினார்.
விருதுகள்:-
உணவு உற்பத்தியைப் பெருக்கி, உலக அமைதிக்கு வித்திட்ட இவரது பங்களிப்புகளுக்காக 1970-ல் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.
ஜனாதிபதி பதக்கம் சுதந்திரம்-(1977),
Forமெம்பர் ஆஃப் ராயல் சொசைட்டி-(1987),
வன்னேவர் புஷ் விருது-(2000),
பொது நலன் பதக்கம் -(2002),
நேஷனல் மெடல் ஆஃப் சயின்ஸ்-(2004),
காங்கிரஸ் தங்க பதக்கம்-(2006),
இந்தியாவின் 2வது உயரிய விருது பத்மவிபூஷண் 2006 ஆம் ஆண்டு பெற்றார்.
நூல்கள்:-
Wheat in the Third World-1982,
Land use, food, energy and recreation-1983,
The Green Revolution Revisited and the Road Ahead-2000 போன்ற நூல்களை எழுதியுள்ளார்.
மறைவு:-
‘பசுமைப் புரட்சியின் தந்தை’ என போற்றப்படும் இவர்,செப்டம்பர்-12, 2009 ஆம் ஆண்டு,
டல்லாஸ், டெக்சாஸ், அமெரிக்காவில் மரணமடைந்தார்.
சிறப்புகள்:-
அமெரிக்க நாடாளுமன்றத்தின் தங்கப் பதக்கம், அதிபரின் ‘ஃபிரீடம்’ பதக்கம், நோபல் பரிசு ஆகிய 3 உயர்ந்த விருதுகளைப் பெற்ற 7 பேரில் இவரும் ஒருவராக கருதப்படுகிறார்.
மார்ச்-25. அமெரிக்க வேளாண் அறிவியலாளர், மனித தத்துவவாதி மற்றும் நோபல் அமைதிப் பரிசினைப் பெற்றவர், பசுமைப் புரட்சியின் தந்தை-நார்மன் எர்னஸ்ட் போர்லாக்(Norman Ernest Borlaug) பிறந்த தினம்.
Reviewed by JAYASEELAN.K
on
21:06
Rating: 5
Reviewed by JAYASEELAN.K
on
21:06
Rating: 5


No comments: