Breaking

மார்ச்-27. காஸ்மிக் கதிர்கள் மற்றும் இந்திய விண்வெளி இயற்பியல் துறைகளில் பணியாற்றிய இந்திய இயற்பியலாளர்- ரஞ்சன் ராய் டேனியல் (Ranjan Roy Daniel) மறைந்த தினம்.






இன்று நினைவு நாள்:- மார்ச்-27.


காஸ்மிக் கதிர்கள் மற்றும் இந்திய விண்வெளி இயற்பியல் துறைகளில் பணியாற்றிய
இந்திய இயற்பியலாளர்-
ரஞ்சன் ராய் டேனியல்
(Ranjan Roy Daniel) மறைந்த தினம்.


பிறப்பு:-

ஆகஸ்ட்-11, 1923 ஆம் ஆண்டு,
நாகர்கோவில், இந்தியாவில் பிறந்தார்.
தனது சொந்த ஊரில் உள்ள ஸ்காட் கிறிஸ்டியன் மேல்நிலைப்பள்ளியில் தனது ஆரம்ப மற்றும் இடைநிலை கல்வி பயின்றார்.

 1939 ஆம் ஆண்டு ஸ்காட் கிறிஸ்டியன் கல்லூரியில் இருந்து இடைநிலைப் பள்ளி கல்வி முடிந்தபின், சென்னையிலுள்ள லயோலா கல்லூரியில், 
B. Sc., இயற்பியல் பயின்று முடித்தவுடன்
பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் 1946 ஆம் ஆண்டு, M.Sc., இயற்பியலில் பட்டம் பெற்றார். 

பணிகள்:-

இவர் பிரபஞ்ச இயற்பியல் மற்றும் விண்வெளி இயற்பியல் துறைகளில் பணி புரிந்தார். மேலும் டாட்டா இன்ஸ்டிடியூட் ஆப் பர்மாண்டன் ஆராய்ச்சி நிறுவனத்தில் இயக்குநராக பணியாற்றினார்.

ஆய்வுகள்:-


டாடா இன்ஸ்டிடியூட் ஆஃப் ஃபன்மண்டல் ரிசர்ச் (TIFR) இல் 1947 ஆம் ஆண்டு விஞ்ஞானியாக ஆய்வுகள் செய்து வந்தார்.
மேலும் 1976 ஆம் ஆண்டு இந்தியாவின் பிரதமராக  இந்திராகாந்தி அவர்கள் இருந்த போது, இவர் அவரின் ஆலோசகராகவும் இருந்தார். மேலும் 23 ஆண்டுகள்
ஹோமி ஜஹாங்கீர் பாபாவுடன் இணைந்து பிரபஞ்சத்தில் கதிாியக்கக் கதிர்கள் பற்றிய ஆராய்ச்சிகள் செய்து வந்தார்.





விருதுகள்:-


1975 ஆம் ஆண்டில் இந்திய தேசிய அறிவியல் அகாடமியில் (இஎன்எஸ்ஏ) உறுப்பினரானர்.
வைனு பாப்பு விருது-1992,
அறிவியல் மற்றும் பொறியியலுக்கான பங்களிப்பிற்காக 1992 ஆம் ஆண்டில் இந்திய அரசு அவருக்குப் பத்ம பூசண்விருது வழங்கப்பட்டது.


மறைவு:-

மார்ச்-27, 2005 ஆம் ஆண்டு, நாகர்கோவிலில் மரணமடைந்தார்.

No comments:

Powered by Blogger.