பிப்ரவரி -27 பன்னாட்டு பனிகரடி நாள்.
பன்னாட்டு பனிகரடி நாள்.
# கரடி இனத்தைச் சேர்ந்த பனிக்கரடி, ஊன்
உண்ணும் பாலூட்டி.
# உலகில் வாழும் ஊன் உண்ணிகளில் பெரிய
விலங்கு பனிக்கரடிதான்.
# உறைபனி சூழ்ந்த குளிர்பிரதேசமான
ஆர்டிக் கண்டத்தில் இவை வாழ்கின்றன.
# கடலில் வாழும் சீல்கள் தான் இவற்றின்
பிரதான உணவு.
# வளர்ந்த ஆண் பனிக்கரடி 350 முதல் 700
கிலோ வரை இருக்கும். ஆணின் எடையில்
பாதி எடையுடன் இருக்கும் பெண் கரடிகள்.
# பனிக்கரடியின் ரோமம் வெள்ளையாகத்
தெரிந்தாலும் அது கண்ணாடி போன்று
நிறமில்லாதது. பனிக்கரடியின் தோல்
கறுப்பு.
# நிலத்தில் பிறந்தாலும் வாழ்நாளின்
பெரும் பகுதியை கடலிலேயே கழிப்பவை
பனிக்கரடிகள்.
# பனிக்கரடிக்கு 42 பற்கள் இருக்கும்.
# பனிக்கரடியின் தோலுக்கு அடியில் 10
சென்டிமீட்டர் அடர்த்தியில் கொழுப்புத்
திரை இருக்கும். அதனால்தான்
குளிரிலும்கூட பனிக்கரடி இயல்பாக
இருக்க முடிகிறது.
# பனிக்கரடிகள் அருமையான மோப்பத்திறன்
கொண்டவை. ஒரு கிலோமீட்டர் தூரத்தில்
உள்ள சீல்களையும் மோப்பத்திறனால்
அறியக்கூடியவை.
# நிலத்தில் மணிக்கு 40 கிலோமீட்டர் ஓடும்
திறன் கொண்டவை. நீரில் மணிக்கு 10
கிலோமீட்டர் வேகத்தில் செல்லும்.
# பனிக்கரடி பொதுவாக தனியாக வாழும்.
பெரிய அளவில் திமிங்கலம் போன்ற உணவு
கிடைக்கும்போது மட்டுமே பகிர்ந்து
உண்பதைக் காணலாம்.
# ஏப்ரல், மே மாதங்களில் உறை பனிக்
காலத்தில் இனப்பெருக்கத்தில் ஈடுபடும்.
# பெண் கரடிகள் பிரசவ காலத்தில்
பனிப்பரப்பில் தனக்கென ஒரு வளையைத்
தோண்டிக்கொள்ளும். அந்த வளையில்
காற்று போகும் வசதியும் பல அறைகளும்
இருக்கும்.
# இரண்டு குட்டிகளை ஒரு பிரசவத்தில்
பெற்றெடுக்கும்.
# குட்டிகள் பிறக்கும்போது குறைந்தபட்ச
ரோமத்துடன் கண்களை மூடியபடி
பிறக்கும்.
# பனிக்கரடிகள் வாழும் ஆர்டிக் பிரதேசத்தில்
அதை இரையாகக் கொள்ளும் இரைகொல்லி
கிடையாது.
# 25 முதல் 30 ஆண்டுகள் வரை பனிக்கரடிகள்
வாழும்.
# அருகிவரும் இனமாகப் பனிக்கரடி
கருதப்படுகிறது. மனிதர்களின்
வேட்டையால் அதிகம் பாதிக்கப்படும்
இனமாகப் பனிக்கரடி உள்ளது. அது
மட்டுமல்லாமல் பூமி அளவு கடந்து
வெப்பமடைவதால், வேகமாக அழிந்து
வருகிறது.


No comments: