Breaking

மார்ச்-29. ஜி.வாஷிங்டன் காபி நிறுவனத்தை நிறுவிய அமெரிக்க கண்டுபிடிப்பாளர்- ஜார்ஜ் கான்ஸ்டன்ட் லூயிஸ் வாஷிங்டன் மறைந்த தினம்.






இன்று நினைவு நாள்:- மார்ச்-29.


ஜி.வாஷிங்டன் காபி நிறுவனத்தை நிறுவிய அமெரிக்க கண்டுபிடிப்பாளர்-
ஜார்ஜ் கான்ஸ்டன்ட் லூயிஸ் வாஷிங்டன் மறைந்த தினம்.

பிறப்பு:-

பெல்ஜியத்திலுள்ள
கொர்த்ரிஜ்க் என்ற ஊரில் 1871 ஆம் ஆண்டு, மே மாதம் பிறந்தார்.
தனது ஆரம்பகல்வி முடித்த பிறகு இரசாயனவியல் 
பட்டப்படிப்பை ஜெர்மனியின் போன் பல்கலைக்கழகத்தில் முடித்தார்.


கண்டுபிடிப்புகள்:-

ஜார்ஜ் வாஷிங்டன் 
ஹைட்ரோகார்பன் விளக்குகள், ஒளிப்படக்கருவிகள் மற்றும் உணவு பதப்படுத்தல் போன்ற களங்களில் இரண்டு டஜன் காப்புரிமைகள் வைத்திருந்தார். 
வாஷிங்டனின் கண்டுபிடிப்பு வணிக உற்பத்திக்கு வழிவகுப்பதில் முதல் முயற்சியாக இருந்தது.

1906 ஆம் ஆண்டு அல்லது 1907 ஆம் ஆண்டு, உடனடி காபி உற்பத்தி தொடங்குமுன் பல தொழில்நுட்ப துறைகளில் கைதேர்ச்சியடைந்துள்ளார். 1909 ல் அவர் தனது காபி விற்பனை தொடங்கினார்.
வாஷிங்டனின் தயாரிப்பு முதன் முறையாக 1909 ஆம் ஆண்டு Red E Coffee ("ready" -ஒரு சொல்விளையாட்டாக) என விற்பனை செய்யப்பட்டது. ஜி.வாஷிங்டனின் காபி சுத்திகரிப்பு நிறுவனம் 1910 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.

ஆரம்பத்தில்  புரூக்ளின் புஷ் முனைய தொழிற்துறை வளாகத்தில் இருந்தது. பின்னர் 1927 ல் கிழக்கு ஹனோவர் அவென்யூ, மோரிஸ் சமவெளிகளில் அமைக்கப்பட்ட புதிய உற்பத்தி நிலையத்திற்காக நிலங்களை கையகப்படுத்தி அவரது நிறுவனச் செயற்பாடுகளை, நியூ ஜெர்சிக்கு மாற்றினார்.
அமெரிக்க இராணுவம் காபியை பாவிக்கத் தொடங்கியதால் விற்பனை பெருகியது. 
இந்த நிறுவனம் 1930 இல்லிருந்து 1935 வரை "செர்லக் ஓம்சு" வானொலி தொடரை வழங்கிய பின் இதன் விற்பனை வளர்ச்சி மேலும் பெருகியது.ஆனால் ஆரம்ப உடனடி காபியானது பெரும்பாலும் தரமற்ற, சுவையற்ற, சற்றே புதுமையான தயாரிப்பாகக் கருதப்பட்டது.

விருதுகள்:-

நியூயார்க் நகரின் லோட்டோஸ் சங்க (Lotos Club) உறுப்பினராக இருந்தார்.

மறைவு:-

மார்ச்-29, 1946 ஆம் ஆண்டு மரணமடைந்தார்.

No comments:

Powered by Blogger.