Breaking

கடந்த ஆண்டு (மார்ச்-30, 2019 இரவு 8.30 முதல் 9.30 வரை) ஒரு மணி நேரம் விளக்குகளை அணைத்து பூமி நேரம்- (EARTH HOUR) கொண்டாடிய. நாள்..








🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎

கடந்த ஆண்டு
(மார்ச்-30, 2019 இரவு 8.30 முதல் 9.30 வரை) ஒரு மணி நேரம் விளக்குகளை அணைத்து பூமி நேரம்- (EARTH HOUR) கொண்டாடிய. நாள்..

🌎நோக்கம்:-

புவி தட்பவெப்ப மாற்றத்தின் விளைவை மக்களுக்கு உணர்த்தும் வகையில் விழிப்புணர்வுக்காக இந்த பூமி தினம் நாள் நிகழ்ச்சி கொண்டாடப்படுகிறது.
இது மின் ஆற்றல் சேமிப்பை ஊக்குவிப்பதையும், கரிமவெளியேற்றத்தைக் கட்டுப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டது. ஒளிசார் மாசடைதலைக்குறைப்பதற்கும் இது உதவக்கூடும். 


வீடுகளிலும், வணிக நிறுவனங்களிலும் உள்ள மின் விளக்குகளையும், அவசியம் இல்லாத மின் கருவிகளையும் ஒரு மணி நேரம் நிறுத்திவைக்கக் கோரும் ஒரு நிகழ்வாக உலகம் முழுவதும் பூமி நேரம் (Earth Hour) கொண்டாடப்படுகிறது. இந்த நிகழ்வு ஆஸ்திரேலியாவின் இயற்கைக்கான நிதியத்தினால் தொடங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சி தனியர் மற்றும் வணிக அமைப்புகளையும் ஊக்குவித்து மார்ச் இறுதியில் ஒருநாளில் ஒருமணி நேரத்துக்கு தேவையற்ற விளக்குகளை இரவு 8:30 மணியில் இருந்து இரவு 9:30 மணி வரையில் புவிக்கோளுக்காக அணைத்து வைக்குமாறு வேண்டும் நாளாகும்.

🌎வரலாறு:-

முதலாவது எர்த் ஹவர் நிகழ்வு 2007 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31-ம் தேதி சிட்னியில் நடைபெற்றது. 2008-ம் ஆண்டு உலகம் முழுவதும் 400 நகரங்களில் இந்த பூமி நேரம் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அதில் 5 கோடி பேர் கலந்து கொண்டனர்.
பூமி நேரத்தை முதலில் கடைப்பிடித்தது கிரீஸ் நாடுதான். அதேபோல ஏதென்ஸ் நகரமே கிட்டத்தட்ட இருளில் மூழ்கியதைப் போல காணப்பட்டது. ஆயிரக்கணக்கான மக்கள் மெழுகுவர்த்திகளுடன் இருளில் ஊர்வலமும் நடத்தினர்.
🌎உலகப் புகழ் பெற்ற சிட்னி ஓபரா மாளிகை, உரோமை நகரின் கொலீசியம், அன்டார்டிகாவின் ஸ்காட் நிலையம் ஆகியவற்றில் விளக்குகள் முழுமையாக அணைக்கப்பட்டன.
மேலும் நமது நாட்டிலும்
தலைநகர் டெல்லியில் உள்ள அரசு கட்டடங்கள், வரலாற்று நினைவிடங்களில் அமைக்கப்பட்டிருந்த மின்னொளி விளக்குகள் சுமார் ஒரு மணி நேரம் வரை அணைக்கப்பட்டது. இதேபோல் மும்பையில் உள்ள கேட் வே ஆஃப் இந்தியா பகுதியிலும் விளக்குகள் அணைக்கப்பட்டன. 

🌎நமது பங்களிப்புகள்:-

நாம் ஒவ்வொருவரும்
கார்,பைக் பயன்பாட்டை பெருமளவில் குறைத்து வேலைக்குச் செல்ல சைக்கிளைப் பயன்படுத்துவோம். பிளாஸ்டிக் பயன்படுத்தை நிறுத்தி, ஒரு இளஞ்செடிகளை நடுவதும், வீணான கழிவுகளை பிரிப்பதும் என நாம் ஒவ்வொரு நாளும் பசுமை நற்செயல்களில் தங்களை ஈடுபடுத்திக்கொள்ளவேண்டும்.
புதைபடிவ எரிபொருள் பயன்பாட்டைக் கைவிடுதல் வேண்டும்.

🌎உறுதிமொழி:-

நாம் பூமி நேரம் கொண்டாடும் விதமாக, இயற்கை இழப்புகளுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு ஆதரவளித்து, நான் என் அலுவலகத்தில் அனைத்து அத்தியாவசிய விளக்குகளை  இரவு 8:30 இருந்து 9:30 மணிவரையில் ஒருமணிநேரம் அணைத்துவிடப் போகிறேன். நீங்களும் இவ்வாறு செய்யவேண்டுமென வேண்டுகிறேன்.
உலகம் முழுவதிலுமுள்ள மக்கள் சமுதாயம் வாழ்வதற்கு உகந்த சுற்றுச்சூழலுக்கான மிகப்பெரிய அடித்தளமாக இந்த பூமி நேரம் இருக்கிறது. அவர்கள் பருவநிலை மாற்றங்களுக்கு எதிராக ஒரு மணிநேரம் மட்டுமே அத்தியவசிய மின் விளக்குகளை நிறுத்தும் ஒரு நிலைப்பாட்டை எடுக்கிறோம்.

No comments:

Powered by Blogger.