Breaking

கறிவேப்பிலையில் நிறைந்துள்ள மருத்துவ நன்மைகள்






கறிவேப்பிலையில் நிறைந்துள்ள மருத்துவ நன்மைகள்

கறிவேப்பிலை ஒரு கைப்பிடி அளவு, மிளகாய் 2 இவற்றை நெய்யில் வதக்கி பழம்புளி, வறுத்த உப்பு சேர்த்து துவையல் செய்து சாப்பிடும் போது முதல் வாய் உணவுடன் சேர்த்து பிசைந்து சாப்பிட குமட்டல், வாந்தி, அசீரணபேதி, சீதபேதி, செரியா மந்தம், வயிற்றுக் கோளாறு குணமாகும்.

கறிவேப்பிலை இலை, மருதாணி இலை, கரிசலாங்கண்ணி இலையின் தண்டு, கைப்பிடி அளவுடன் சேர்த்து அரைத்து தலையில் தடவி வர பித்தநரை, இளநரை மாறும்.

கறிவேப்பிலை, சுக்கு, மிளகு, சீரகம், இந்துப்பு, பொரித்த பெருங்காயம் சம அளவாக எடுத்து நிழலில் உலர்த்தி இடித்துப் பொடியாக்கி ஒரு சிட்டிகை பொடியை நெய்விட்டு பிசைந்து சுடுசோறுடன் கலந்து உண்ண மலச்சிக்கல், பேதி நிற்கும்.

குடல் பலவீனத்தால் ஏற்படுகின்ற பேதியும் நிற்கும்.

கறி வேப்பிலையை தொடர்ந்து உணவில் உபயோகித்துவர சளி, கபநீர்க்கட்டு அடங்கும். கறிவேப்பிலை, ஈர்க்கு, முருங்கை ஈர்க்கு, நெல்லி ஈர்க்கு வகைக்கு ஒரு கைப்பிடி அளவு எடுத்து சுக்கு, மிளகு, சீரகம் வகைக்கு 20 கிராம எடுத்து ஒன்றிரண்டாக இடித்து அரை லிட்டர் நீரில் போட்டு கால் லிட்டராக சுண்டக் காய்ச்சி, வடிகட்டி நான்கு வேலை 50 மில்லி வீதம் குடித்து வர சளி, இருமல், காய்ச்சல், வாதக் காய்ச்சல் குணமாகும்.


No comments:

Powered by Blogger.