கால்சியம் குறைபாடு இருக்கும் பொழுது உடலில் எவ்வகையான அறிகுறிகள் தென்படும்??.
கால்சியம் குறைபாடு இருக்கும் பொழுது உடலில் எவ்வகையான அறிகுறிகள் தென்படும்??.
முடி உதிர்தல்:
கால்சியம் இல்லாததால் உங்கள் தலை முடி மிக வேகமாக உதிர துவங்கும். பல வழிகளில் முயற்சி செய்தும் முடி உதிர்தல் நிற்காது.
பல் வலி அல்லது எலும்புகளில் வலி:
பற்களில் தொடர்ந்து வலி அல்லது பற்கள் உடைந்து போகிறது என்றாலும் கால்சியம் குறைபாடு காரணமாகும்.மற்றும் எலும்புகளில் வலி ஏற்படும்.
மூட்டு வலி:
கால்சியம் குறைபாட்டின் காரணமாக எலும்புகள் மற்றும் மூட்டுகளில் மிகுந்த வலி ஏற்படும். இதன் காரணமாக தசைகளில் வலி ஏற்படுகிறது மற்றும் நடப்பது கூட ஒரு சில நேரங்களில் கடினமாகும்.
நகங்கள் பலவீனம் அடைதல் :
உங்களின் நகங்கள் பலவீனம் அடைந்து மிக விரைவாக உடைந்து வளரவில்லை என்றாலும் கால்சியம் குறைபாடு காரணமாக இருக்கும்.
இவற்றை உட்கொள்ள தொடங்குங்கள் :
கால்சியம் குறைபாட்டில் இருந்து விடுபட நீங்கள் ஒவ்வொரு நாளும் பால் பொருட்கள் அதிகமாக உட்கொள்ள வேண்டும். இதுதவிர நீங்கள் பாதாம் அக்ரூட் பருப்புகள் போன்றவைகள் நிறைய உட்கொள்ள வேண்டும்.
முளைத்த தானியங்களை சாப்பிட வேண்டும்.இவற்றை உட்கொள்வதன் மூலம் கால்சியம் குறைபாடில் இருந்து நமது உடலை காப்பாற்றிக் கொள்ள முடியும்.
No comments: