இன்றைய சிறுகதை _சிலந்தி கற்றுக் கொடுத்த பாடம் " _( பஞ்சதந்திரக் கதைகள் )_
*╔═══🌻⊰n⊱⊰v⊱⊰s⊱🌻═══╗*
இன்றைய சிறுகதை
_✍பகிர்வு_ *ஸ்ரீ*
*" சிலந்தி கற்றுக் கொடுத்த பாடம் "
_( பஞ்சதந்திரக் கதைகள் )_
போரில் தோல்வி அடைந்த அரசன் ஒருவன் தன் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள ஓடி ஒளிந்தான். தோல்வியுற்ற அரசனை கொலை செய்யுமாறு அவனை வென்ற அரசன் கட்டளை பிறப்பித்தான். அதனால் அவன் காட்டிற்குள் சென்று ஒரு குகையில் ஒளிந்து கொண்டான்.
ஒருநாள் சோம்பலுடன் அரசன் குகையில் படுத்திருந்தான். அந்தக் குகையினுள் ஒரு சிலந்தி வாழ்ந்து வந்தது. குகையின் ஒரு பகுதியில் ஒரு வலையைப் பின்ன முயற்சி செய்து கொண்டிருந்ததைப் பார்த்தான். சிலந்தி சுவரின் மீது ஊர்ந்து செல்லும் போது வலையில் பின்னிய நூல் அறுந்து கீழே விழுந்து விட்டது.
இவ்வாறு பலமுறை நடந்தது. ஆனாலும், அது தன் முயற்சியைக் கடைவிடாமல் மறுபடியும் மறுபடியும் முயன்றது. கடைசியில் வெற்றிகரமாக வலையைப் பின்னி முடித்தது. அரசன் இச்சிறு சிலந்தியே பல முறை தோல்வியடைந்தும் தன் முயற்சியைக் கைவிடவில்லை. நான் ஏன் சோம்பலடைய வேண்டும்?
நானும் மீண்டும் முயற்சி செய்வேன் என்று மனதிற்குள் எண்ணினான். உடனே அரசன் தான் வசித்த காட்டிற்கு வெளியே சென்று தன் நம்பிக்கையான ஆட்களைச் சந்தித்தான்.
தன் நாட்டில் உள்ள வீரர்களை ஒன்று சேர்த்து பலம் மிகுந்த ஒரு படையை உருவாக்கினான். தன் எதிரிகளுடன் தீவிரமாகப் போர் புரிந்தான். கடைசியில் போரில் வெற்றியும் பெற்றான். அதனால் தன் அரசைத் திரும்பப் பெற்றான். தனக்கு அறிவுரை போதித்த அந்த சிலந்தியை அவன் என்றுமே மறக்கவில்லை.
*நீதி :*
தொடர்ந்து முயற்சி செய்தால் நிச்சயம் வெற்றி கிடைக்கும்.
*╚═══🌻⊰n⊱⊰v⊱⊰s⊱🌻═══╝*


No comments: